Sunday, May 22, 2011

தி.மு.க வின் மேல் ஏனிந்த கடுப்பு?

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகப்போகின்றன. தி.மு.க அனுதபிகளிடமிருந்தும், அ.தி.மு.க எதிர்பாளர்களிடமிருந்தும்  சில கேள்விகள் வந்து கொண்டே இருகின்றன.

  1. எலிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாய், கருணாநிதிக்கு பதிலாய் ஹிட்லர மாதிரி ஆட்சிபுரிந்த ஜெயலிதாவை கொண்டுவந்துவிட்டீர்கள். தொடங்கும்பொதே மோடியுடன் தொடங்குகிறார், இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?
  2. தி.மு.க காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தானே தி.மு.க வை தோற்கடித்தீர்கள், இன்னும் சில் காலங்களில்[வாரங்களில்?] பச்சோந்தி காங்கிரசு அ.தி.மு.க வுடன் போய் சேர்ந்து விடும் அப்போது என்ன செய்வீர்கள்?
  3. கொள்கைகள் ஏதுமின்றி, விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து தமிழகத்தை ஆண்டுவிடலாம் என்று இருக்கும் அரைவேக்காட்டு விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக்கி விட்டீர்கள், அவர் தமிழக சட்டசபைக்கு பதிலாக ஆந்திர சட்ட சபை போகாமல் இருந்தால் சரி.
  4. ஒரு குடும்பத்தை ஆட்சியில் இருந்து தூக்கி, மற்றொன்றை வைத்து விட்டீர்கள். என்ன மாற்றத்தை கொண்டுவந்தீர்கள்?

இந்த கேள்விகளுக்கான எனது பதிலகள்,

எலிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாய், கருணாநிதிக்கு பதிலாய் ஹிட்லர மாதிரி ஆட்சிபுரிந்த ஜெயலிதாவை கொண்டுவந்துவிட்டீர்கள். தொடங்கும்பொதே மோடியுடன் தொடங்குகிறார், இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?

இந்திய – பாகிஸ்தான் - வங்காள போரின்போது, இந்திராகாந்தியை பெட்டை நாய் என்றும், சூனியகாரி என்றும் அழைத்து சர்சைகளில் மாட்டிய கிசிங்கர் [Henry Kissinger] இரான் – இராக்கிய போரின்போது சொல்லிய ஒரு மேற்கோள்,

It's a shame they both can't lose

இருவரையும் தோற்கடிக்க முடிந்திருந்தால் கண்டிப்பாக அதை நான் ஆதரித்திருந்திருப்பேன். ஜெயலலிதா ஒன்றும் கருணாநிதிக்கு குறைந்தவரல்ல என்பதை நானும் ஒத்துகொள்கிறேன். கட்சிக்குள்ளே சன நாயகம் பார்காத, ஜெயலலிதா தமிழகத்தில் நல்லாட்சி புரிவார் என்று மூட நமிக்கை எல்லாம் இல்லை. கருணாநிதியும் தி.மு.கவும் அ.தி.மு.க வை விட த்ரம் தாழ்ந்து போனதால் தான் அ.தி.மு.க வை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு ஆளானோம்.

ஜெயலலிதாவிற்கு பயந்து மறுபடியும் தி.மு.க வை ஆட்சிக்கு கொண்டுவந்திருந்தால், கருணாநிதிக்கு என்ன விதமான பாடத்தை கற்று கொடுத்திருப்போம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம், மக்க்ள் கண்டு கொள்ள மாட்டர்கள் என்று கருணாநிதி மட்டுமல்ல அத்தனை அரசியல் கட்சிகளும் முடிவு செய்திருப்பார்கள். வினை விதைத்தால் வினை அறுத்தே ஆக வேண்டும் என்பதை எப்போது இவர்கள் உணர்வார்கள்? அரசியல்வாதிகள் மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பாடம் இது,

ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி அவரின் மேல் உள்ள நல்ல எண்ணத்தால் கிடைத்தது இல்லை. கருணாநிதியின் மேல் உள்ள கடுப்பால் கிடைத்தது. கருணாநிதி செய்ததையே ஜெயலலிதாவும் செய்தால், நாளை அவருக்கும் இதே நிலைதான். கோயில்களில் ஆடு, கோழி வெட்டக்கூடாது, என்று பார்பன ஆதிக்கத்தை காட்ட முயன்றதன் விளைவை அவர் மறந்திருக்க மாட்டார் என்று நம்புவோம்.

தி.மு.க காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தானே தி.மு.க வை தோற்கடித்தீர்கள், இன்னும் சில் காலங்களில் பச்சோந்தி காங்கிரசு அ.தி.மு.க வுடன் போய் சேர்ந்து விடும் அப்போது என்ன செய்வீர்கள்?

நாளை காங்கிரசு அ.தி.மு.க வுடன் போய் சேர்ந்தால், அ.தி.மு.க வுக்கும் இதே நிலைதான். தமிழர்களின் நலனை விட நேரு குடும்பத்தின் நலனே பெரிது என்றிருக்கும் காங்கிரசின் நிலை மாறாத வரை, தமிழகத்தில் காங்கிரசிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடமில்லை.

கொள்கைகள் ஏதுமின்றி, விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து தமிழகத்தை ஆண்டுவிடலாம் என்று இருக்கும் அரைவேக்காட்டு விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக்கி விட்டீர்கள், அவர் தமிழக சட்டசபைக்கு பதிலாக ஆந்திர சட்ட சபை போகாமல் இருந்தால் சரி.

அகத்தை விட புறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற மனப்பான்மை நம்மிடம் உள்ளவரை, வாயசைத்து காலத்தை ஓட்டும் நடிகர்கள்தான் மேலே இருப்பார்கள்.

ஒரு குடும்பத்தை ஆட்சியில் இருந்து தூக்கி, மற்றொன்றை வைத்து விட்டீர்கள். என்ன மாற்றத்தை கொண்டுவந்தீர்கள்?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்த பாடத்தை மறக்கமாட்டர்கள் என்று நம்புவோமாக.

0 Comments :