தேவையானவை
பிஞ்சு கத்தரி - 4 [நீல நிறத்தில் வரிகள் இல்லாமல்] கத்தரிக்காயை கழுவி நீளமாக ஆறாக நறுக்கி நீருள்ள பாத்திரத்தைல் வைக்கவும்
துவரம் பருப்பு 25கி
நல்ல எண்ணை 100மிலி
மிளகாய் பொடி 2 தேக்கரண்டி
சி.வெங்காயம் 6 [ தோல் உரிக்காமல் போட்டால் உங்கள் தோலை சாப்பிடுபவர் உரித்தாலும் உரிக்கலாம்]
அப்பளம் 1
தக்காளி 1
புளி சிறிய எலுமிச்சை பழம் அளவு [100 மிலி நீரில் கரைத்து கொள்ளவும். புளி கரைப்பது எப்படி என்று தெரியவில்லை எனில், திருமணம் செய்து கொள்ளாவும்]
உப்பு தேவையான அளவு
தாளிக்க
வெந்தயம், கடுகு, கறிவேப்பில்லை பெருங்காயம்
- வானலியில் எண்ணை விட்டு கடுகு, து.பருப்பு, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை தாளிக்கவும்.
- வெங்காயம், நறுக்கிய கத்தரிக்காயை நீரை உதரிவிட்டு போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
- மி.தூள், கரைத்த புளிநீருடன், தக்காளியை குழைத்து குழம்பில் சேர்க்கவும்.
- அப்பளத்தை உடைத்து போடவும்
- நீர் 150 மிலி சேர்த்து பாத்திரத்தை மூடிவைக்கவும்
- உப்பு சேர்க்கவும்
- குழம்பு சுண்டி, திடமாக வரும் வரை கொதிக்க வைக்கவும். அவ்வப்போது கிளரி விடவும்.
- அடுப்பில் இருந்து இறக்குவதற்கு 5 நிமிடம் முன் கறிவேப்பிலையை சேர்க்கவும்
2 Comments :
please add the chilly powder , turmeric and asfodetia details. Put steps it has to come in gravy stage. Donot add curry leaves at the begining, add before 5 mins you going to take it from stove. Ensure it has to come in gravy form to hav a good taste.
You have really great taste on catch article titles, even when you are not interested in this topic you push to read it
Post a Comment