Monday, February 8, 2010

வரலாறு

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பதுடன் வக்கத்தவனுக்கு வரலாறு என்பதும் சேர்ந்துவிட்டது. எல்லாமே வணிக மயமாகிவிட்ட நமதூரில், கல்விக்கும் அதே நிலைதான் நேர்ந்துவிட்டது. பிச்சை புகினும் கற்கை நன்றே என்பதிலிருந்து லட்சங்கள் கொடுத்தும் கற்கை நன்றே என்ற நிலைக்கு மாறிவிட்டோம். இந்த மாற்றம் கல்விதரும் தெளிவிற்காகவா இல்லை அது தரும் ஞானத்திற்காகவா? இரண்டுமே இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. கல்வி தரும் பணத்திற்காக. அறிவின் அள்வுகோல் அது தரும் பணம் என்றாகிவிட்டது.

முதலே மூலதனமாகிவிட்ட நிலையில், வரலாறு முதலை இழந்து நிற்கிறது. ஒரு சமூகத்தை அடிமைப் படுத்த மிக எளிய வழி, அதன் பெருமிதத்தை அதனிடமிருந்து எடுத்துவிடிவதுதான். வரலாறு முன்னோர்களின் சாதனைகளால் பெருமிதத்தையும், அவர்களின் தவறுகளால் பாடத்தையும் விட்டு செல்கிறது.

Why do we have to study History? So someday we will stop killing each other- The Da Vincy Code

நான் தமிழில் கையெழுத்திடுவதை பார்த்துவிட்டு, என்னுடன் தமிழ் வழியில் படித்து விட்டு இன்று ஏதோ ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பொறியாளராக வேலைபார்க்கும் நண்பன் கேட்டான், எதற்காக நான் தமிழை தூக்கிப் பிடித்துகொண்டு திரீகிறேன் என்றான், எப்படி இவனுக்கு பதில் சொல்வது?. யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய கணியனைப் படித்திருந்தால், அவனுடைய ஞானத்தின் பெருமிதமிருந்திருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது.

One generation has no more right to bind another to its laws and judgments -Thomas Jefferson

ஜெஃபர்சன் தமிழகத்தில் பிறந்திருந்தால், இவ்வாறு சொல்லியிருப்பாரோ?

One generation has no right to skip it’s duty to pass it’s lessons to next generation.

இங்கே தவறிழத்தவர்கள் நம் பெற்றோர்களா இல்லை நாமா? காலம் பதில் சொல்லும்.

 

வரலாற்றை மறந்த சமூகம் வருங்காலத்தையும் மறக்கிறது.

National History Day

பார்த்த பின் எழுதியது.

0 Comments :