Thursday, November 12, 2009

வளையமாதேவியில் இருந்து மில்வாக்கி வரை...

நான் அமெரிக்கவில் இருந்து வந்திருக்கிறேன் என்று தெரிந்தால, பெரும்பாலான நேரங்களில் இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படும். அமெரிக்காவின் சிறப்பு எது?. மின்னணு சாதனங்கள்? சுத்தமான சாலை? பெரிய கட்டிடங்கள்? வளமான வாய்ப்புகள்? என்று வரிசை நீளமாக இருக்கும்.

என்னைப் பொருத்தவரை, அமெரிக்கவின் சிறப்பு அதன் மக்கள் மற்றும் Life, liberty and the pursuit of happiness என்ற கருத்தாக்கத்தில் அவர்களின் விடாப்பிடியான பற்றுதல்.

கடந்த பத்து வருடங்களில் என்னுடைய வழ்கையில் சில் முக்கியமான மாற்றங்களை எதிர் கொண்டிருக்கிறேன். முதல் முறையாக என்னுடைய ஊரில் நானூற்றி சொச்சம் பேர் படித்த அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து, சில ஆயிரம் பேர் படிக்கும் பள்ளிக்குப் போனேன். கணிதத்தில் தொன்னூற்றி சொச்ச விழுக்காடு குறையாமல் வாங்கிக் கொண்டிருந்த நான், என் பதினொன்றாம் வகுப்பில், தேர்ச்சி பெறுவதற்கே கடுமையாக போராட வேண்டியிருந்தது. என் பதினொன்றாம் கல்வி ஆண்டு முழுக்க நான், இந்த மாற்றத்திற்க்கு தகவமைத்துகொள்ளவே போரட வேண்டியிருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு மதுரைக்கு கல்லுரிக்கு சென்ற போதும், மதுரையில் இருந்து கோவைக்கும், பெங்களூர்க்கும் வேலைக்கு சென்றபோதும் மாற்றம் அதற்கே உண்டான புதுமைகளுடனும் கடினங்களுடனும் வந்தது. முந்தைய மாற்றத்தில் கற்றுகொண்ட பாடம், அனுபவமும், முதிர்ச்சியும் போன்றவை உதவியாக இருந்த பொழுதும், பெங்களூரிலிருந்து மில்வாக்கி வந்த இந்த மாற்றம், மிகவும் சுமூகமாக அமைந்தது. ஏற்கனவே இரண்டு முறை வந்திருந்தாலும், மந்தமான அமெரிக்க பொருளாதாரம், குழுவை வழி நடத்தி கொண்டிருக்கும் வாய்பையும், வளமையான Honewell வாய்ப்புகளைவிட்டு போவதாக நண்பர்கள் ஊட்டிய பயம் ஒரு பக்கம் இருந்தாலும், தைரியமாக மில்வாக்கியில் குடிபுகுந்தேன்.

அலுவலகத்தில் நுழையும் வரை, இருந்த பதட்டம், உள்ளே நுழைந்து மக்களை சந்தித்தவுடன், நொடிப் பொழுதில் மறைந்து போனது. ஒரு வருடத்திற்கு மேலாக ஆன பொழுதும், அலுவலகத்திலே இளையவனாக இருக்கும் பொழுதும், கண்ணியமாக நடத்துகிறார்கள். குறிப்பாக வேறுபாடுகளை மதிக்கிறார்கள். என்னை மிகவும் கவர்ந்தது, மற்றவர்கள் மேல் இவர்கள் காட்டும் அக்கறைதான். மற்றவர் மனம் புண்படுகிற மாதிரி நடக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் நல்ல நகைசுவை உணர்வோடு எடுத்து கொள்கிறார்கள். இந்த நகைச்சுவை உணர்வுதான, விமர்சனத்தைக் கூட மென்மையாக சொல்ல வைக்கிறது.

இந்த இரண்டு ஆண்டுகளில் கற்று கொண்டதில் குறிப்பாக சொல்லக் கூடியவை, தெரிந்தவரோ தெரியாதவரோ, நட்பான புன்னகை. இது மிகப் பெரிய மாற்றம். இந்த புன்னகை, வேலைப் பளுவையும், அது தரும் மன அளுத்தத்தையும் வெகுவாக குறைக்கிறது. புத்தகம், கணிப்பொறி, வேலை இந்த இரண்டைத் தவிர பெரிதாக எதிலும் ஆர்வம் இல்லாமல்  இருந்த என்க்கு, அமெரிக்க வாழ்க்கை, இதையும் தாண்டி கலை,இசை போன்ற வேறு உலகங்கள் இருக்கிறது என்று காட்டியது.

Great nations write their autobiographies in three manuscripts, the book of their deeds, the book of their words and the book of their art. Not one of these books can be understood unless we read the two others, but of the three the only trustworthy one is the last -John Ruskin

இது சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், தனி மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன்.
இதையெல்லாம் தாண்டி என்னை மிகவும் கவர்ந்த சில் விடயங்கள், அவற்றை தனிப் பதிவாக
  • ஒவ்வொரு ஊரிலும் பரவி இருக்கும் பொது நூலகம். நான் எங்களூரில் ஒரு நூலகம் வைத்து நடத்துவதே பெரும் பாடாக இருக்கையில் அமெரிக்காவில் உள்ள மொத்த நூலகங்களின் எண்ணிக்கை 122,356  வியப்பான விடயம்.
  • தன்னார்வ தொண்டு அமைப்புகள்.
  • பறவைகள்.
  • எழில் கொஞ்சும் இயற்க்கை.
  • Camping and Trekking


0 Comments :