Saturday, October 3, 2009

The Life of Birds

ஒரு புறம் பொருளாதார காரணங்களாலும், பொறுப்பில்லாதனத்தினாலும் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கிறான், மறுபுறம், ஆயிரம் மைல் தூரம் இடைவிடாமல் பறக்கும் பாடும் பறவைகளுக்கு பசியாற இடமளிக்கிறான். விந்தையான மனிதர்களுக்கிளின் சிக்கல் நிறைந்த உலகில், பறவைகள் தொடர்ந்து தனது வாழ்வை மாற்றிகொண்டு பறந்து கொண்டேதன் இருக்கின்றன.

சில நூற்றாண்டு முன்பு வரை மனிதன், பறவையைப் போன்றும், விலங்குகலைப் போன்றும், இயற்கையின் வரம்புகளுக்கு உட்பட்டேதான் வாழ்ந்துகொண்டிருந்தான். இருபதாம் நூற்றாண்டின் தொழில்வளர்ச்சியும், அசுர விஞ்ஞான வளர்ச்சியும் மனிதனின் கரங்களில் அளவுக்கு அதிகமான் ஆற்றலை கொடுத்து விட்டன. பயமறியாத இளம் கன்று போல, மனிதன் சிக்கலும், விந்தையும், கோடி கணக்கான ஆண்டு வரலாரும் கொண்ட இயைற்கை வென்றுவிட முடியும் என நினைக்கிறான்.

பறவைகள் நாம் சில ஆண்டுகளுக்கு முன் அறிந்த அறிவையலை, பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தி வருகின்றன. வெப்ப ஆற்றலை தனக்கு சாதகமாக்கி, இமையத்தை கடக்கின்றன. இருண்ட குகைகளை தனது ஒலியைக் கொண்டு கடக்கின்றன. இயற்கைக்கு ஏற்றவாரு தங்களை தகவமைத்து கொண்டு வாழும் இந்த பறவைகளிடம் நாம் கற்று கொள்ள எத்தனையோ இருக்கின்றன.

BBC தாயரித்து, டேவிட் அட்டன்பரோ[David Attenborough]வின் குரலில், 1998ல் வெளிவந்த தொடர், பறவைகளின் வாழ்வு[The life of Birds].பறவைகளின் விநோதமான பழக்க வழக்கங்கள், மதி நுட்பமாய் எதிரிகளிடம் காத்துகொள்ளும் திறன், புதிய வாய்ப்புகளைத் தேடி ஓடும் தைரியம், தனது அடுத்த தலைமுறைக்காக கடும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் வாடும் அர்பணிப்பு என பறவையின் ஒவ்வொரு நிலையையும், சங்க கவிதைகள் போல ஆர்டிக் முதலான அனைத்து கண்டங்களிலும் போய் படம் பிடித்துள்ளார்கள்.

இந்தத் தொடரை முழுவதும் பார்த்த பிறகு, சுண்டு வில்லையோ, துப்பாக்கிகளையோ, பறவை பிடிக்கும் கன்னிகளையோ தொடு முன் நிச்சயம் இந்த தொடரில் பார்த்த ஏதோ ஒரு பறவை உங்கள கண்முன் வரும்.

மான்களை வேலிகளுக்குள்ளேயே பார்த்து பழகிய எனக்கு, மில்வாக்கியின் புறநகரங்களில், வீட்டு தோட்டங்களில் மான்களைப் பார்த்த போது வரும் மகிழ்சிக்கு அளவே இல்லை. எத்தகைய வேலைப் பளுவிலும், மானைக் கண்டால், நின்று சில நிமிடங்களாவது இரசித்து விட்டுதான் நகர முடியும். இன்று அத்தகைய அழகிய மானை வெறும் சில் நொடிப் பொழுதில் வாகனம் ஏற்றி கொன்றிருப்பேன். முன் பக்க விளக்கில் மட்டும் மோதி, மயிரிலையில் உயிர் பிழைத்து ஓடிய அந்த மான், மீண்டும் ஒருமுறை இந்த தொடரை பார்க வைத்தது.

மொத்த தொடரையும் காண,
http://www.youtube.com/show?p=S3vPSi1o5nM
The Life of Birds - Wikipedia, the free encyclopedia

1 Comments :

Vetirmagal said...

அருமையான தகவல் அளித்த உங்களுக்கு நன்றி.

http://www.reelingreviews.com/wingedmigration.htm

இந்த படமும் பார்த்திருப்பீர்கள். மீண்டும் பார்க்க தோன்றும் படம்.