Monday, April 27, 2009

யாருக்கு வாக்களிப்பது

கடந்த சில மாதங்களாக, ஈழத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசியல் கட்சிகளின் இரட்டை வேடங்களைப் பார்த்து, உடலும் மனமும் கூசி குறுகி நிற்கிறேன். ஒவ்வொறு முறையும் இவர்களின் இரட்டை வேடத்தை செய்திகளில் படிக்கும் போது, அளவு கடந்த வேதனையும் கடும் வெறுப்புமே மனதில் எஞ்சி நிற்கிறது.

இவர்களை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற இயலாமை வேறு மனதை குத்தி கிழிக்கிறது. மக்களாட்சியின் குறைபாடுகள் கண்கூடாக தெரிகிறது. மக்களாட்சியில் மக்களின் ஒரே ஆயுதமான, தேர்தல் இங்கே வாக்கு சேகரிக்கும் கூத்தாக மட்டுமே நடக்கிறது.

இந்த தேர்தல், மூன்று விதமான வேட்பாளர்களை களத்தில் கொண்டுள்ளது.

  1. வெளிப்படையான எதிரிகள், வெளிப்படையாக தமிழர் இன ஒழிப்பை ஆதரிக்கும் காங்கிரசு, ஆட்சியை காப்பற்ற காங்கிரசுக்கு துனை போகும் திமுக.
  2. நண்பர்கள் மாதிரி தோற்றம் அளிக்கும் எதிரிகள்.
    1. ஜெயலலிதா, இவருடைய ஒரே நோக்கம் ஆட்சி மற்றும் கருணாநிதி ஒழிப்பு மட்டுமே, தமிழர், ஈழம் எல்லாம் கடைசியில்தான்.
    2. ஈழ பிரச்சினையில் வாயையே திறக்க மறுக்கும் விஜயகாந்த். இவருக்கு தேவை காங்கிரஸ், தினமலர், சோ, பார்ப்பனிய ஊடகங்களின் ஆதரவு. ஈழத்தமிழர்களுக்கு 100வது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வைத்ததோடு சரி.
  3. தேர்தல் கூத்தில் மதி மயங்கி நிற்கும் நண்பர்கள். பமக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள்.

இவர்களில் ஒருவரை நாம் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். யாரை ஆதரிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் கீழே இருக்கும் வலைப்பதிவுகளை படியுங்கள், நிச்சயம் தெளிவு கிடைக்கும். நல்ல தெளிவான சிந்தனை கொண்ட நண்பர்களால் எழுதப்பட்ட பதிவுகள் இவை.

பத்ரி - யாருக்கு வாக்களிப்பது?

தமிழ் சசி - திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்

குழலி ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...

ரோசா வசந்த் - திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

நான் பத்ரியின் கருத்தில் நிறையவே உடன்படுகிறேன். சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறார்.

1 Comments :

suresh lakshmanan said...

அன்புள்ள செந்தில் ! உன் கருத்தில் இருந்தும் திரு. பத்ரி அவர்களின் கருத்தில் இருந்தும் நான் மாறுபடுகிறேன்.AIADMK க்கு வாக்களித்தல் தமிழ் இனத்திற்கு அவ்வபோது குரல் கொடுக்கும் ஒரு தலைவரின் ஆதரவையும் நாம் இழக்க வேண்டி இருக்கும். இந்த தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா தமிழ் ஈழம் பற்றி பேசவும் மாட்டார்,பேசுபவர்களையும் விட்டு வைக்க மாட்டார்.இதற்கு கடந்த கால நிகழ்வுகள் சாட்சி .