Monday, April 27, 2009

யாருக்கு வாக்களிப்பது

1 Comments
கடந்த சில மாதங்களாக, ஈழத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசியல் கட்சிகளின் இரட்டை வேடங்களைப் பார்த்து, உடலும் மனமும் கூசி குறுகி நிற்கிறேன். ஒவ்வொறு முறையும் இவர்களின் இரட்டை வேடத்தை செய்திகளில் படிக்கும் போது, அளவு கடந்த வேதனையும் கடும் வெறுப்புமே மனதில் எஞ்சி நிற்கிறது.

இவர்களை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற இயலாமை வேறு மனதை குத்தி கிழிக்கிறது. மக்களாட்சியின் குறைபாடுகள் கண்கூடாக தெரிகிறது. மக்களாட்சியில் மக்களின் ஒரே ஆயுதமான, தேர்தல் இங்கே வாக்கு சேகரிக்கும் கூத்தாக மட்டுமே நடக்கிறது.

இந்த தேர்தல், மூன்று விதமான வேட்பாளர்களை களத்தில் கொண்டுள்ளது.

 1. வெளிப்படையான எதிரிகள், வெளிப்படையாக தமிழர் இன ஒழிப்பை ஆதரிக்கும் காங்கிரசு, ஆட்சியை காப்பற்ற காங்கிரசுக்கு துனை போகும் திமுக.
 2. நண்பர்கள் மாதிரி தோற்றம் அளிக்கும் எதிரிகள்.
  1. ஜெயலலிதா, இவருடைய ஒரே நோக்கம் ஆட்சி மற்றும் கருணாநிதி ஒழிப்பு மட்டுமே, தமிழர், ஈழம் எல்லாம் கடைசியில்தான்.
  2. ஈழ பிரச்சினையில் வாயையே திறக்க மறுக்கும் விஜயகாந்த். இவருக்கு தேவை காங்கிரஸ், தினமலர், சோ, பார்ப்பனிய ஊடகங்களின் ஆதரவு. ஈழத்தமிழர்களுக்கு 100வது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வைத்ததோடு சரி.
 3. தேர்தல் கூத்தில் மதி மயங்கி நிற்கும் நண்பர்கள். பமக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள்.

இவர்களில் ஒருவரை நாம் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். யாரை ஆதரிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் கீழே இருக்கும் வலைப்பதிவுகளை படியுங்கள், நிச்சயம் தெளிவு கிடைக்கும். நல்ல தெளிவான சிந்தனை கொண்ட நண்பர்களால் எழுதப்பட்ட பதிவுகள் இவை.

பத்ரி - யாருக்கு வாக்களிப்பது?

தமிழ் சசி - திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்

குழலி ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...

ரோசா வசந்த் - திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

நான் பத்ரியின் கருத்தில் நிறையவே உடன்படுகிறேன். சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறார்.

Friday, April 17, 2009

இது யாருடைய தேர்தல் அறிக்கை

0 Comments
 1. இராமர் கோயில் கட்டப்படும்
 2. சேது சமுத்திரம் ரத்து செய்யப்படும்.
 3. வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், தினந்தோறும் அவர்களுக்கு உணவு அளிக்கப்படும்.
 4. ஏழைகளுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் துளிகூட அச்சம் இன்றி தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மீது, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் இந்த அமைப்புகளின் மீது அதிமுக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.[ நேரடியாகவே கிறுத்துவ அமைப்புகள் என்று சொல்லியிருக்கலாம்] .
 5. இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.
 6. அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
 7. கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இது பாஜக வின் தேர்தல் அறிக்கை என நினைத்தால், நீங்கள் செல்வி, காவிரி தாய்[கர்நாடகத்தில் பிறந்ததாலா?], அகில இந்திய அன்ணை, செல்வி செயலலிதாவைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் தமிழ் நாட்டில் வாழ்ந்த குற்றத்திற்காக, தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் இருந்துமே வெளியாற்றப்படுவீர்கள். எப்பா சாமி, தயவு செஞ்சு ”அண்ணா”வை கட்சிப் பேரில் இருந்து நீக்குங்கப்பா.

அண்ணாவுக்கு கருணாநிதி செய்து வரும் சேவையே போதும், உங்க சேவை வேற வேணுமா?

அதிமுக, திமுக இரண்டு க[…]ளும் [உங்கள் விருப்பம், என்ன வேண்டுமானாலும் நிரப்பி கொள்ளலாம்] ஒன்றாக இணைந்து தமிழகத்திற்கு சேவை செய்யலாம்.ஜெயலலிதா, இந்து ஹிந்து வளர்சி துறையை எடுத்துகொள்ளலாம். கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சித்துறையை எடுத்து கொள்ளலாம். எப்படி அம்பானி உலகின் முதல் பணக்காரராக ஆனபோது இந்தியர்கள் புளங்காகிதம் அடைந்தார்களோ, அப்படி தமிழர்கள் கருணாநிதி & கு. உலகில் மிகப் பெரும் பணக்கார குடும்பம் ஆகும்போது நாமும் சந்தோசப்படலாம். தமிழர்களுக்குன்னு பெருமைப் பட என்ன இருக்கிறது. தமிழர்களுக்கு பாடுபட திரு. க வுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா. நமக்குதான் வாய்ப்பு கொடுக்கிறதுன்னா, அல்வா கொடுக்கிற மாதிரியாச்சே. விஜயகாந்து ரஜினி காந்து முதல் சமீபத்திய வரவி ரித்தீச்ச்சு [பேர கூட தமிழில் வைக்க முடியாதவர்கள், ஆனா தமிழர்களுக்கு ஆபத்து என்றால், தீக்குளிக்க கூட தயங்காதவர்கள்] என எல்லாருக்கும் வாய்ப்பு கொடுப்போம். அகில தாயே உங்களை ஹிந்திய, இலங்கை பிரதமராக்கும் வரை போரட காத்திருக்கும் இரத்ததின் இரத்தங்கள் இருக்கும் வரை நீங்கள் என்ன அறிக்கை வேண்டுமனாலும் விடலாம். 

Sunday, April 5, 2009

துப்பாக்கிகள்

2 Comments

சசி தனது பதிவில் அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம் பற்றி எழுதியிருந்தார்.  இதைப் பற்றி எனது பார்வையும் சில மாற்று கருத்துகளும் இங்கே.

துப்பாக்கிகள் ஆபத்தானவை

எல்லா ஆயுதங்களும் ஆபத்தானவைதான் தவறானவர்களின் கைகளில் இருக்கும் போது, கத்திகளும் ஆபத்தானவை, கருங்கற்களும் ஆபத்தானவை. ஒவ்வொரு ஆயுதமும் அதற்கே உண்டான ஆபத்தை கொண்டிருக்கின்றன. அணு ஆயுதங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன, சிறு கத்திகள் அணு ஆயுதங்களை ஒப்பிடுகையில் சிறு அளவிலான சேதத்தை ஏற்படுத்துகின்றன. பொருப்பற்றவர்களின் கைகளில் எல்லாமே ஆபாத்தான ஆயுதங்கள்தான்.

ஆயுதங்கள் இல்லாதவர்களை தங்களை விட மிகக் கீழாக நினைக்கும் போக்கும் ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. எல்லாரும் ஆயுதங்கள் வைத்து இருப்பது, அல்லது யாரும் ஆயுதம் வைத்து கொள்ளாமல் இருப்பது.

ரோட்டில் நடந்து செல்லுபவரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் இங்கே வெகு சகஜம்.

கத்தி முனையில் நம்மூரில் பணம் பறிபதில்லையா? சாலையில் செல்பவர்களிடம் துப்பாக்கியை காட்டாமல் கத்தியை காட்டியிருந்தாலும் பணத்தை இழந்திருபார்கள். இந்த மாதிரியான சமையங்களில் துப்பாக்கிகளை விட கத்திகள் ஆபத்தானவை. துப்பாக்கிகள் சத்தம் எழுப்ப கூடியவை சுட்டால் மற்றவர்களின் கவனத்தை கவர கூடியவை,ஆனால் கத்திகள் சத்தமிலாதவை.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் பல்வேறு துப்பாக்கிச்சூடுகளிலும், துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டும் இறக்கின்றனர். 

இங்கே இரண்டு பிரச்சினைகள்,

 • தற்கொலை செய்துகொள்பவர்கள்.
  • இவர்களுக்கு துப்பாக்கி ஒரு ஆயுதம் மட்டுமே, துப்பாக்கி இல்லையென்றால் விசமோ அரளி விதையோ.
 • மற்றவர்களால் கொலை செய்யப்படுபவர்கள்.
  • இங்கே சட்டத்தை கையில் எடுத்து கொள்பவர்கள்தான் பிரச்சினையே ஒழிய துப்பாக்கிகள் அல்ல. துப்பாக்கிகள் இல்லாத காலத்திலும் கொலையும் கொள்ளையும் நடந்திருக்கின்றன.

மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

துப்பாக்கிகள் தடைசெய்யப்பட்டுள்ள துப்பாக்கி கலாச்சாரம் இல்லாத இந்தியாவிலும் காந்தி இந்திரகாந்தி துப்பாக்கியால்தான் கொல்லப்பட்டார்கள்.

குழந்தைகள், சிறுவர்கள் துப்பாக்கியை கையாள்கிறார்கள், பள்ளியிலும் கல்லூரியிலும் சக மாணவர்களை துப்பாக்கியால் கொலை செய்கிறார்கள்.

அமெரிக்காவில் சிறுவர்களோ விடலைகளோ முன்னாள் குற்றவாளிகளோ துப்பாக்கியை வாங்க முடியாது. துப்பாக்கி வாங்க வேண்டுமென்றால் 1008 விதிகளும், நடைமுறைகளும் இருக்கின்றன.

இவை உண்மையென்றால், எப்படி பள்ளிகளிலும் கல்லூரிகளும் இத்தனை துப்பாக்கி சூடுகள்? பொருப்பற்ற பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பதற்கு நேரம் இல்லாதிருக்கிறார்கள்.  அமெரிகாவின் தெருக்களில் பணம் கொடுத்தால் எல்லாமும் கிடைக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

A well regulated militia being necessary to the security of a free State, the right of the People to keep and bear arms shall not be infringed.

இந்த சட்டம் மற்ற நாட்டிடமிடமிருந்த்து அமெரிக்காவை காத்து கொள்வது மட்டுமல்ல, சொந்த நாட்டில் அரசாங்கத்திடமிருந்து மக்கள் தங்களை காத்து கொள்வதும் கூடதான். மக்களை படுகொலை செய்யும் அரசாங்கம் வந்தால் அல்லது இராணுவம் மக்களாட்சியை படுகொலை செய்ய முயற்சித்தால், அல்லது ஒரு சில அரசியல் வாதிகள் மக்களை கட்டுப்படுத்த முயற்சிதால் மக்கள் இவர்களை எப்படி எதிர்ப்பார்கள். அகிம்சையால் இராணுவத்தை எதிர்த்து போராட முடியும் என்று நினைகிறீர்களா? ஜென்ரல் டயர் மாதிரியான இராணுவ ஆட்சியாளர் வந்தால் அவர்களிடமிருந்து மக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்வார்கள். என் கருத்து படி மக்கள் கையாலதவர்களாக இருப்பதாலதான், இந்திரா காந்தி அவசர நிலயை கொண்டுவர முடிந்தது. [அமெரிக்காவில் அப்படி ஒரு நிலையைதான் புஷ் பயத்தின் மூலம் கொண்டுவர முயற்சித்தார் என்பது வேறு கதை.]

இப்படி புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் தான் பல நேரங்களில் கிரிமினல்கள் கைகளிலும், மனநிலை சரியில்லாதவர்கள் கைகளிலும் சிக்கி விடுகிறது.

பொருப்பில்லாமல் துப்பக்கியை கையாளுபவர்களும்/தொலைப்பவர்களும்/விற்பவர்களும் குற்றவாளியாக்கப் படுவார்கள் எனும் நிலை இருந்தால் இத்தகைய நிலை கிறைய கூடும். அமெரிகாவில் பள்ளிகளில் 5க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுவது பெரும்பாலும் தானியங்கி ஆயுதங்களால்தான். இவைகள் பெரும்பாலும் கள்ள சந்தையில் வாங்கப்படுபவை.

துப்பாக்கிகள் வைத்திருக்கும் பொழுது அதனை பயன்படுத்தும் நோக்கம் பல நேரங்களில் இயல்பாக எழுந்து விடுகிறது.

வீட்டில் கத்தி வைத்திருப்பதால் கத்தியை தீங்காக பயன்படுத்த வேண்டும் என்று யாரும் நினைப்பிதில்லை. சாதாரணமான மனிதர்கள் எப்போதும் துப்பாக்கியை பயன்படுத்தி பிரச்சினையில் மாட்டிகொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை. பெரும்பாலும் துப்பக்கியை தற்காப்பிற்காகவே பயன்படுத்த நினைக்கிறார்கள். கராத்தே, ஜூடே, வர்மம் போன்ற தற்காப்பு கலைகள் கூட ஆபத்தானவைதான்.

இந்தியர்கள் மத்தியிலும் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவது ஆபத்தானது. கடந்தவாரம் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சனைக்காக தன்குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்டுஇறந்திருக்கிறார். இதில் குழந்தைகளும் அடக்கம்.

நம்மூரில் விசம் வைத்து குடும்ப பகையை தீர்த்து கொண்ட கதைகள் எல்லம் இருக்கின்றன. மகள் தான் விரும்பியவனை திருமணம் செய்ய விரும்பியதால் மொத்த குடும்பத்திற்கும் விசம் கொடுத்து கொலை செய்தவர்களின் கதைகளையெல்லம் நான் எனது ஊரில் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு முறை அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பெரியளவில் நடக்கும் பொழுது அன்று ஒரு நாள் மட்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து பேசப்படும். துப்பாக்கிகளுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்கள் முன்வைக்கப்படும்.

இங்கு துப்பாக்கி வைத்து கொள்வது தவறென்று சொல்வது, நமது விவசாயிகளிடம் அரிவாள் வைத்து கொள்ளகூடாது என்று சொல்வது மாதிரிதான். துப்பாக்கி அரிவாள் மாதிரி ஒரு ஆயுதம். அவ்வளவே. எப்படி இவர்களிடம் இப்படிப்பட்ட ஆய்தங்கள் கிடைக்கிறது, ஆய்தப் பயன்பாட்டை நெறிப்படுத்துவதெப்படி, தோட்டாக்களில் இருந்து துப்பக்கியை அடையாளம் காண்பது போன்ற விடயங்களை அமெரிக்க ஊடகங்கள் பேச மறுப்பதுதான் கொடுமையே.

துப்பாக்கிகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கிகள் கிடைத்தவுடன் அதனை தங்கள் அதிகாரத்தின் சின்னங்களாக வெளிப்படுத்திக் கொண்டனர்

இவர்களை எப்படி கட்டுப்படுத்துவது. அகிம்சை முறையிலா? இல்லை திலீபன் மாதிரி உண்ணாவிரதம் இருக்க சொல்கிறீர்களா?. ஒன்று அவர்களிடமிருந்து துப்பக்கியை பிடுங்கி எறியுங்கள் அல்லது போராட தாயராயிருக்கும் எல்லொரிடத்திலும் ஆயுதத்தை கொடுங்கள்.

எதிரிகள்தான் உங்களுடய ஆய்தத்தை தீர்மானிக்கிறார்கள் - மாவோ

மனிதனிடம் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம் அவனுடைய சிந்தனைதான், மற்றவை எல்லாம் சிறு ஆய்தங்கள். என்னுடைய

துப்பாக்கிகளை தங்களுடைய கைகளில் எடுக்கும் எந்த அமைப்பும், இயக்கமும் அளவில்லாத சுதந்திரத்தையும் தங்கள் கைகளில் எடுத்து கொள்கின்றன.

நீங்களே சொல்லிவிட்டிர்கள், இப்படிப் பட்டவர்களிடமிருந்து மக்கள் எப்படி தங்களை காத்து கொள்வார்கள்.

இயக்கங்களுக்கு மக்களை சார்ந்து இருக்கும் அவசியம் இல்லாமல் போனது. They were not Accountable to People. இதுவும் ஈழப் போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டம், அரசியல் போராட்டம் என்பதில் இருந்து நகர்ந்து இன்று தமிழன் வாழ்வுரிமை சார்ந்த இராணுவ போராட்டமாக மாறியதற்கு ஒரு முக்கிய காரணம்.

ஈழத்தில் ஆயுதப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் ஒரு வடிவம் மட்டுமே. மற்ற தளங்களிலும், வேறு களங்களிலும் ஈழத்து சொந்தங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இயேசுவும், புத்தனும் எனது எதிரியாய் இருந்தால், மகிழ்வாய் அகிம்சை மட்டுமெ எனது ஆயுதம் என்று சொல்வேன்.

அரசாங்கம் தீயவர்களின் கைகளில் துப்பாக்கியே கிடைக்காது, அவர்களால் எந்து உயிருக்கோ உடமைக்கோ எந்த கேடும் வராது, என்ற உறுதியை கொடுத்தால் எனக்கு துப்பக்கியே வேண்டாம். துப்பாக்கிகள் யாரிடமும் இல்லை என்கின்ற  போது எனக்கும் வேண்டாம். என்னுடைய எதிரி துப்பக்கி வைத்திருக்கின்ற போது நான் துப்பாக்கி வைத்து கொள்ளகூடது என்பது, எனது வாழ்வதற்கான உரிமையை என்னிடமிருந்து எடுத்து கொள்வது போன்றதாகும்.