Thursday, February 5, 2009

ஜெயலலிதாவுடன் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்திப்பு

எங்கே தேள் கொட்டினால் எங்கே நெறி கட்டுகிறது என்று பாருங்கள். அண்ணா கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கும் போது அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் செயலலிதாவின் நடத்தையை பாருங்கள். நெற்றியில் எப்போதுமே தனது சாதி அடையாளத்தை தாங்கி தனது சாதிப் பற்றை காட்டிவரும் செயலலிதாவிடம் வேறு என்ன எதிர்பார்க்க?

சிதம்பரம் தீட்சிதர்கள், இன்னும் மன்னராட்சி காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு 21ம் நூற்றாண்டு வந்து விட்டதே தெரியாமல் வாழ்கிறார்கள். இங்கே பத்ரியின் வலைப் பதிவில் இவர்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு எவ்வளாவு பெரிய கொடுமையை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செய்கிறார்கள் என்பதை படித்து பாருங்கள். சொந்தங்களுக்குள்ளேயே மணம்முடித்தால் எத்தகைய ஊனங்கள் வரும் என்பதை நான் நன்றாகவே அறிவேன். என்னுடைய அத்தையின் குடும்பத்தில் சொந்ததிலேயே மணம் முடித்ததால் வாரிசுகளில் ஆறு பேருக்கு மேல் ஊமையாய் வாழ்கின்றனர். தான் செய்யாத தவறுகளுக்கு தண்டனை பெறும் இவர்களை நினைத்தாலே இதற்க்கு காரணமனவர்களின் மூட நம்பிக்கைய நினைத்து எரிச்சல்தான் வருகிறது. ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சிங்கம் புலிகள் கூட தன்னுடைய வாரிசுகள் வலுவுள்ளவையாக பிறக்க வலுவான துனையை தேடும், இந்த விலங்குகள் தங்களுடைய மரபனு கொத்தை [Gene pool] விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

தீட்சிதர்கள் போராடட்டும் அவர்களுக்கு சுதந்திர நாட்டில்(ஈழத்து தமிழர்களை ஆதரித்து பேசினால் மட்டும் உள்ளே தள்ளிவிடுவார்கள், காந்தி உண்ணாவிரதம், முழு அடைப்பு போராட்டம் நடத்தினால், அறவழிப்போராட்டம், கருணாநிதி செய்தால் நீதி மன்றம் ஞாயிற்று கிழமைகளில் கூட தடை விதிக்கும்) எல்லா உரிமையும் இருக்கிறது. இவர்கள் போராட்டம் நேர்மையானதாக இருந்தால் மக்கள் இவர்கள் மேல் அனுதாபப்படுவார்கள், அதற்கு மாறாக கோவிலை இவர்கள் கல் சுமந்து கட்டிய மாதிரி உரிமை கொண்டாடுவது, தமிழை இழிவு படுத்துவதையே ஒரு கடமையாக வைத்திருப்பது, தமிழில் தேவாரம் படிக்க விடாமல் தடுப்பது, வழிபட வந்தவர்களைத் தாக்குவது, கோவில் கணக்கு வழக்குகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது போன்று சிறுபிள்ளாத்தனமான வேலைகளை நிறுத்தவேண்டும்.

எல்லா சமுகத்திலுமே ஒரு உயர்குடி[elite group] இருக்கும், [பெரும்பாலும் மன்னர்கள், அவர்களின் வாரிசுகள், மதவாதிகள், இவர்களின் வாரிசுகள்]. இந்தக் குழுக்கள் ஒரு மாய எல்லைக் கோட்டை வரையறுத்து மற்றவர்களை இந்த வட்டத்திற்க்குள் வரவிடாமல் தடுக்கும். இந்த மாயக் கோடு ஒவ்வொரு இனத்திற்கும் வேறு விதமாக இருக்கும். உதாரந்த்திற்கு எகிப்தை ஆண்ட ஃபெரோ மன்னர்கள், இவர்கள் தங்களை கடவுளாக அறிவித்துக்கொண்டார்கள்.

நம்மூரில் உருவாக்கப் பட்டதுதான் சாதி, இந்த மாய எல்லை காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு,வளர்ககப்பட்டு வந்துள்ளது. இவற்றின் ஒரு வடிவம்தான் விதவை மறுமண மறுப்பு, பார்ப்பனர்கள்[பார்ப்பனர்கள் என்பது கெட்ட வார்த்தை இல்லீங்க, பால் போல் வெளுத்து காணப்பட்டதால் பார்ப்பனர்கள்]விதவைகளை மொட்டை அடித்து, வீட்டில் முடக்கியது, சமூகத்தில் விதவைகளை ஒரு அவல சின்னமாகா காட்டியது போன்றவை எல்லாம் தங்களுடைய சாதிக்குள் கலப்பு வந்து விடுமோ, மற்றவர்களிடம் தங்கள் பங்கை இழக்க நேரிடுமோ என்ற பயத்தால் விளைந்ததுதான். மகா பாரதத்தில் பார்ப்பன பெண்ணை மணக்கும் ஒரு மன்னனுக்கு ஒரு பார்ப்பன முனிவர் சாபம் கொடுப்பது மாதிரி ஒரு கதை கேட்ட மாதிரி ஞாபகம். யாராவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மீண்டும் ஒரு முறை மகா பாரதம் இராமாயன படிக்க வேண்டும். கதையின் வழியே எப்படி மூட நம்பிக்கைகளை  எப்படி இவ்வளவு காலங்கள் கடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது கதை சொல்லும் கலையின் ஆற்றல் வியப்பளிக்கிறது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், ஒரு காலத்தில் இவர்களுக்கு கேடையமாக விளங்கிய சாதி இன்று இவர்களுக்கு தீங்காய் வந்திருக்கிறது. பார்பனர்கள் கற்று வரும் இந்த பாடத்தை மற்ற ஆதிக்க சாதிகள் கற்றுகொள்ள வேண்டும்.

காற்று ஒரே திசையில் பயனிக்காது நண்பர்களே, எப்படி வேண்டுமானாலும் திசை மாறலாம், எளியோரிடம் கனிவு  கொள்ளுங்கள், எளியோரின் நன்மைக்காக இல்லை உங்களின் நன்மைக்காக.

நீங்கள் வலியவராய் இருக்கும் போது சகிப்புத்தன்மையை வளர்த்து கொள்ளுங்கள்,
நீங்கள் எளியோராய் இருக்கும் போது நல்லுறுதியை வளர்த்து கொள்ளுங்கள்.

1 Comments :

uma said...

well researched article senthil...
perfect...