Wednesday, February 4, 2009

நான் இந்தியனா என்பதை இந்தியாவே முடிவு செய்யட்டும்

நான் ஏன் இந்தியன் என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும், எனக்கோ என் இனத்திற்கோ என்ன பலன் கிடைக்கிறது, இஸ்ரேல் பாணியில் இலங்கை பயன்படுத்தும் பாஸ்பரஸ் எரிகுண்டுகள், காசாவில் இசுரேல் தாக்கிய போது வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா[சோனியா காந்தி, அவருடையா கைப்பாவை மன் மோகன் சிங்] இன்று வாய்ப் பொத்தி நிற்க்கிறது. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமலாவது இருக்கலாம், தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை இராணுவதினரை பயிற்ச்சிக்கு அனுப்பிகிறது, அதுவும் தமிழகத்திற்கே. சென்னைக்கு வந்த சிங்கள விமான படையினர்!

இன்னும் சேரிகள் நிறைந்து கிடக்கின்றன, முக்கால் வாசி மக்கள்தொகை வறுமைக் கோட்டிற்க்கு கீழே வாழ்கிறது, பெரும்பாலான ஏழைகள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவிகிறார்கள், ஆனால் ஆளும் வர்கம் மட்டும்[அன்று மன்னராட்சியிலுருந்து, இன்று மக்களாட்சி வரை, ஆளும் வர்க்கத்திற்க்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது] மிகச்சிறந்த மருத்துவ வசதிகளை அனுபவிக்கிறது. ஆனால் அறிக்கை மட்டும் நல்லா விடுகிறார்கள், எனக்கு கிடைக்கும் இதே மருத்துவ வசதி ஏழைகளுக்கும் கிடைக்க  வேண்டும் என்பது எனது விருப்பம் - மன்மோகன் சிங். கீழ் நிலைக் குடிமகன் விருப்பப் படலாம், அவனால் அதை மட்டும்தான் செய்ய முடியும், பிரதமரும் இங்கே விருப்பம் மட்டும்தான் படுவார், அதற்க்கு எந்த திட்டமும் தீட்ட மாட்டார்கள், நல்லா விருப்பப் பட்றாங்கைய்யா...

இப்படி ஆயிரம் பிரச்சினைகள் கொன்ட இந்திய வல்லரசு[?] தனது இராணுத்திற்க்கு செலவளிப்பது மட்டுமல்லாமல், இலங்கை இராணுவத்திற்க்கும் சேர்த்து செலவளிக்கிறது, கொய்யால இதுக்கு நான் வரி கட்டணும், என் கையை வைத்தே என் கண்ணை குத்துவீர்கள், நாங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதரகள், என்று வாய் கூசாமல் வசனம் பேச வேண்டும்? போங்கடா நீங்களும் உங்க தேசியமும்...

சகோதர்த்துவம் என்பது ஒர் கண்ணிற்க்கு காயம் என்றால் மறு கண் அழ வேண்டும், இந்தியாவில் இருக்கிற மற்ற மாநிலத்துக் காரன் எவனாவது தமிழினத்தின் துன்பத்தில் பங்கெடுக்க வருகிறானா? செயல் எல்லம் அப்புறம், அட ஒரு வாய் வார்த்தை? கண்ணியாகுமாரியில் மீனவன் தாக்கப் பட்டால் தமிழக மீனவர்கள், குஜராத்தில் தாக்கப்பட்டால் இந்திய மீனவர்கள். இந்திய தேசியத்தை தூக்கிப் பிடிக்கும் நண்பர்களே, நீங்களே முடிவு செய்யுங்கள், எப்படிப் பட்ட இந்தியா உங்களுக்கு வேண்டும் என்று. எங்கு சமத்துவம் மறுக்கப் படுகிறதோ அங்கு புரட்சி மலர்ந்தே தீரும், இப்படி பல அரசுகள் வரலாற்றில் கானாமல் போயிருக்கின்றன.

உங்களுடைய ஆயுதம் எதிரியால் தீர்மானம் செய்யப்படுகிறது. -மாவோ.

1 Comments :

suresh lakshmanan said...

நீ சொல்லி இருப்பது நூறு சதவீகதம் உண்மையே.