Friday, February 20, 2009

சுப்பிரமணிய சாமியும் பத்ரியின் பதிவும்

0 Comments
உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறைக்கும் நடந்த சண்டையைப் பற்றியும் இந்த சம்பவத்திற்க்கு காரணமான சுப்பிரமணிய சாமி மீதான தாக்குதல் பற்றியும் பத்ரியின் பதிவைப் படித்ததன் விளைவு இந்த பதிவு


http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_23.html

http://thoughtsintamil.blogspot.com/2008/03/blog-post_31.html

பத்ரி இரண்டு சுட்டிகளிலுமே நீங்கள் தீட்சிதர்களின் செயல் மாறவேண்டும் அதுதான் அவர்களுக்கு நல்லது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் எழுதியுள்ளீர்களே தவிர, சிவனடியார் ஆறுமுக சாமி தக்கப் பட்டதை கண்டித்து நீங்கள் ஒரு வரி கூட எழுத வில்லை என்பது வேதனையான உண்மை.

//இணைய பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய, லெனினிய வஸ்தாதுகள் மதிமாறன், வினவு போன்றோர்
என்ன பத்ரி நீங்களும் பொதுப்படுத்துதலில்
இறங்கிவிட்டீர்களா?

பத்ரி எனக்கும் சட்டம், அறவழிப் போராட்டம் எல்லாம் நல்ல கொள்கைகள்தான். ஆனால் இங்கு சட்டம் எளிய மக்களுக்கு வெறும் ஏடுகளில் மட்டும்தான் நிற்க்கிது. அப்படிப்பட்ட சட்டத்திற்கு பாதுகாவலர்கள்தான் சுப்பிரமணிய சாமிக்களும் தீட்சிதர்களும். சுப்பிரமணிய சாமிக்கு இந்திய அரசியல் சட்டம், தீட்சிதர்களுக்கு இந்து சாதி அரசியல் சட்டம். காலம் காலமாக இவர்களிடமிருந்து சட்டத்தை எளிய மக்களுக்கு எடுத்து சென்றது பெரியாரும், மர்க்சும் இவர்களின் அடியாள்களான[வஸ்தாதுகள்] திகா, மகஇகளுமே என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.

//இப்போது எந்தவிதமான மாறுபட்ட கருத்தையும் எதிர்கொள்ளும் போது எழுதுபவரின் பின்புலத்தை புலனாய்வு செய்வது, பெரியாரிய தோழர்களின் நடவடிக்கையாக உள்ளது.//
தோழர்களின் பின்புலம் பெரியாரியம் என்று இவருக்கு எப்படி தெரிந்தது?

சுப்பிரமணிய சாமி தாக்கப்பட்டதும் தவறே, காவல் துறை தாக்கப் பட்டதும் தவறே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதும் தவறே, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அநாகரிகள் என்றால் சிவனடியாரை தாக்கியவர்களும் அநாகரிகள்தான். என்னுடைய கோபம் எல்லாம் இப்போது குதிக்கும் நீதிமன்றமும், சட்டத்தின் மேல் நம்பிக்கை கொன்ட சனநாயக வாதிகளும் சிவனடியார் தாக்கப் பட்டபோதும், சீமான் கைது செய்யப்பட்ட போதும், செய்யப்படும் போதும், புத்தக விற்பனை தடை என வாய் வழி உத்தரவு போட்ட போதும் இதே கோபத்தை காட்டவில்லை என்பதுதான்.

//Voltaire is attributed with having said, ‘I disapprove of what you say, but I will defend to the death your right to say it.’//
வால்டரின் மேற்கோள் சீமனுக்கும், விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கும், தமிழ் தேசிய வாதிகளுக்கும் பொருந்தும் என்று நம்பிகிறேன்


Thursday, February 12, 2009

அபிரகாம் லிங்கன்

0 Comments
Abraham Lincoln
அமெரிக்காவின் முகத்தை சீரமைத்த தந்தை, எனது மிகவும் மனம் கவர்ந்த தலைவரின் 200வது பிறந்த நாள்.

Thursday, February 5, 2009

ஜெயலலிதாவுடன் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்திப்பு

1 Comments
எங்கே தேள் கொட்டினால் எங்கே நெறி கட்டுகிறது என்று பாருங்கள். அண்ணா கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கும் போது அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் செயலலிதாவின் நடத்தையை பாருங்கள். நெற்றியில் எப்போதுமே தனது சாதி அடையாளத்தை தாங்கி தனது சாதிப் பற்றை காட்டிவரும் செயலலிதாவிடம் வேறு என்ன எதிர்பார்க்க?

சிதம்பரம் தீட்சிதர்கள், இன்னும் மன்னராட்சி காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு 21ம் நூற்றாண்டு வந்து விட்டதே தெரியாமல் வாழ்கிறார்கள். இங்கே பத்ரியின் வலைப் பதிவில் இவர்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு எவ்வளாவு பெரிய கொடுமையை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செய்கிறார்கள் என்பதை படித்து பாருங்கள். சொந்தங்களுக்குள்ளேயே மணம்முடித்தால் எத்தகைய ஊனங்கள் வரும் என்பதை நான் நன்றாகவே அறிவேன். என்னுடைய அத்தையின் குடும்பத்தில் சொந்ததிலேயே மணம் முடித்ததால் வாரிசுகளில் ஆறு பேருக்கு மேல் ஊமையாய் வாழ்கின்றனர். தான் செய்யாத தவறுகளுக்கு தண்டனை பெறும் இவர்களை நினைத்தாலே இதற்க்கு காரணமனவர்களின் மூட நம்பிக்கைய நினைத்து எரிச்சல்தான் வருகிறது. ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சிங்கம் புலிகள் கூட தன்னுடைய வாரிசுகள் வலுவுள்ளவையாக பிறக்க வலுவான துனையை தேடும், இந்த விலங்குகள் தங்களுடைய மரபனு கொத்தை [Gene pool] விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

தீட்சிதர்கள் போராடட்டும் அவர்களுக்கு சுதந்திர நாட்டில்(ஈழத்து தமிழர்களை ஆதரித்து பேசினால் மட்டும் உள்ளே தள்ளிவிடுவார்கள், காந்தி உண்ணாவிரதம், முழு அடைப்பு போராட்டம் நடத்தினால், அறவழிப்போராட்டம், கருணாநிதி செய்தால் நீதி மன்றம் ஞாயிற்று கிழமைகளில் கூட தடை விதிக்கும்) எல்லா உரிமையும் இருக்கிறது. இவர்கள் போராட்டம் நேர்மையானதாக இருந்தால் மக்கள் இவர்கள் மேல் அனுதாபப்படுவார்கள், அதற்கு மாறாக கோவிலை இவர்கள் கல் சுமந்து கட்டிய மாதிரி உரிமை கொண்டாடுவது, தமிழை இழிவு படுத்துவதையே ஒரு கடமையாக வைத்திருப்பது, தமிழில் தேவாரம் படிக்க விடாமல் தடுப்பது, வழிபட வந்தவர்களைத் தாக்குவது, கோவில் கணக்கு வழக்குகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது போன்று சிறுபிள்ளாத்தனமான வேலைகளை நிறுத்தவேண்டும்.

எல்லா சமுகத்திலுமே ஒரு உயர்குடி[elite group] இருக்கும், [பெரும்பாலும் மன்னர்கள், அவர்களின் வாரிசுகள், மதவாதிகள், இவர்களின் வாரிசுகள்]. இந்தக் குழுக்கள் ஒரு மாய எல்லைக் கோட்டை வரையறுத்து மற்றவர்களை இந்த வட்டத்திற்க்குள் வரவிடாமல் தடுக்கும். இந்த மாயக் கோடு ஒவ்வொரு இனத்திற்கும் வேறு விதமாக இருக்கும். உதாரந்த்திற்கு எகிப்தை ஆண்ட ஃபெரோ மன்னர்கள், இவர்கள் தங்களை கடவுளாக அறிவித்துக்கொண்டார்கள்.

நம்மூரில் உருவாக்கப் பட்டதுதான் சாதி, இந்த மாய எல்லை காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு,வளர்ககப்பட்டு வந்துள்ளது. இவற்றின் ஒரு வடிவம்தான் விதவை மறுமண மறுப்பு, பார்ப்பனர்கள்[பார்ப்பனர்கள் என்பது கெட்ட வார்த்தை இல்லீங்க, பால் போல் வெளுத்து காணப்பட்டதால் பார்ப்பனர்கள்]விதவைகளை மொட்டை அடித்து, வீட்டில் முடக்கியது, சமூகத்தில் விதவைகளை ஒரு அவல சின்னமாகா காட்டியது போன்றவை எல்லாம் தங்களுடைய சாதிக்குள் கலப்பு வந்து விடுமோ, மற்றவர்களிடம் தங்கள் பங்கை இழக்க நேரிடுமோ என்ற பயத்தால் விளைந்ததுதான். மகா பாரதத்தில் பார்ப்பன பெண்ணை மணக்கும் ஒரு மன்னனுக்கு ஒரு பார்ப்பன முனிவர் சாபம் கொடுப்பது மாதிரி ஒரு கதை கேட்ட மாதிரி ஞாபகம். யாராவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மீண்டும் ஒரு முறை மகா பாரதம் இராமாயன படிக்க வேண்டும். கதையின் வழியே எப்படி மூட நம்பிக்கைகளை  எப்படி இவ்வளவு காலங்கள் கடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது கதை சொல்லும் கலையின் ஆற்றல் வியப்பளிக்கிறது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், ஒரு காலத்தில் இவர்களுக்கு கேடையமாக விளங்கிய சாதி இன்று இவர்களுக்கு தீங்காய் வந்திருக்கிறது. பார்பனர்கள் கற்று வரும் இந்த பாடத்தை மற்ற ஆதிக்க சாதிகள் கற்றுகொள்ள வேண்டும்.

காற்று ஒரே திசையில் பயனிக்காது நண்பர்களே, எப்படி வேண்டுமானாலும் திசை மாறலாம், எளியோரிடம் கனிவு  கொள்ளுங்கள், எளியோரின் நன்மைக்காக இல்லை உங்களின் நன்மைக்காக.

நீங்கள் வலியவராய் இருக்கும் போது சகிப்புத்தன்மையை வளர்த்து கொள்ளுங்கள்,
நீங்கள் எளியோராய் இருக்கும் போது நல்லுறுதியை வளர்த்து கொள்ளுங்கள்.

Wednesday, February 4, 2009

நான் இந்தியனா என்பதை இந்தியாவே முடிவு செய்யட்டும்

1 Comments
நான் ஏன் இந்தியன் என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும், எனக்கோ என் இனத்திற்கோ என்ன பலன் கிடைக்கிறது, இஸ்ரேல் பாணியில் இலங்கை பயன்படுத்தும் பாஸ்பரஸ் எரிகுண்டுகள், காசாவில் இசுரேல் தாக்கிய போது வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா[சோனியா காந்தி, அவருடையா கைப்பாவை மன் மோகன் சிங்] இன்று வாய்ப் பொத்தி நிற்க்கிறது. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமலாவது இருக்கலாம், தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை இராணுவதினரை பயிற்ச்சிக்கு அனுப்பிகிறது, அதுவும் தமிழகத்திற்கே. சென்னைக்கு வந்த சிங்கள விமான படையினர்!

இன்னும் சேரிகள் நிறைந்து கிடக்கின்றன, முக்கால் வாசி மக்கள்தொகை வறுமைக் கோட்டிற்க்கு கீழே வாழ்கிறது, பெரும்பாலான ஏழைகள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவிகிறார்கள், ஆனால் ஆளும் வர்கம் மட்டும்[அன்று மன்னராட்சியிலுருந்து, இன்று மக்களாட்சி வரை, ஆளும் வர்க்கத்திற்க்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது] மிகச்சிறந்த மருத்துவ வசதிகளை அனுபவிக்கிறது. ஆனால் அறிக்கை மட்டும் நல்லா விடுகிறார்கள், எனக்கு கிடைக்கும் இதே மருத்துவ வசதி ஏழைகளுக்கும் கிடைக்க  வேண்டும் என்பது எனது விருப்பம் - மன்மோகன் சிங். கீழ் நிலைக் குடிமகன் விருப்பப் படலாம், அவனால் அதை மட்டும்தான் செய்ய முடியும், பிரதமரும் இங்கே விருப்பம் மட்டும்தான் படுவார், அதற்க்கு எந்த திட்டமும் தீட்ட மாட்டார்கள், நல்லா விருப்பப் பட்றாங்கைய்யா...

இப்படி ஆயிரம் பிரச்சினைகள் கொன்ட இந்திய வல்லரசு[?] தனது இராணுத்திற்க்கு செலவளிப்பது மட்டுமல்லாமல், இலங்கை இராணுவத்திற்க்கும் சேர்த்து செலவளிக்கிறது, கொய்யால இதுக்கு நான் வரி கட்டணும், என் கையை வைத்தே என் கண்ணை குத்துவீர்கள், நாங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதரகள், என்று வாய் கூசாமல் வசனம் பேச வேண்டும்? போங்கடா நீங்களும் உங்க தேசியமும்...

சகோதர்த்துவம் என்பது ஒர் கண்ணிற்க்கு காயம் என்றால் மறு கண் அழ வேண்டும், இந்தியாவில் இருக்கிற மற்ற மாநிலத்துக் காரன் எவனாவது தமிழினத்தின் துன்பத்தில் பங்கெடுக்க வருகிறானா? செயல் எல்லம் அப்புறம், அட ஒரு வாய் வார்த்தை? கண்ணியாகுமாரியில் மீனவன் தாக்கப் பட்டால் தமிழக மீனவர்கள், குஜராத்தில் தாக்கப்பட்டால் இந்திய மீனவர்கள். இந்திய தேசியத்தை தூக்கிப் பிடிக்கும் நண்பர்களே, நீங்களே முடிவு செய்யுங்கள், எப்படிப் பட்ட இந்தியா உங்களுக்கு வேண்டும் என்று. எங்கு சமத்துவம் மறுக்கப் படுகிறதோ அங்கு புரட்சி மலர்ந்தே தீரும், இப்படி பல அரசுகள் வரலாற்றில் கானாமல் போயிருக்கின்றன.

உங்களுடைய ஆயுதம் எதிரியால் தீர்மானம் செய்யப்படுகிறது. -மாவோ.

Tuesday, February 3, 2009

வாக்குப் பிச்சைக்காரர்கள்

2 Comments
முத்துகுமார் மரணத்தில் சந்தேகம் - எல்லாம் தெரிந்த சுப்பிரமணிய சாமி சொல்கிறார்.
மனித உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசும் இவர் தமிழக மீனவர்கள்[இந்திய மீனவர்கள் அல்ல, நாங்களா தனி தமிழ் நாடு கேட்கிறோம், இவர்களாகவே கேள் என்கிறார்கள். பாகிஸ்தானில் பஞ்சாப்பை சேர்ந்த ஒர்வருக்கு, நல்லா படிங்க, ஒருவருக்கு தூக்கு தண்டணை விதிக்கப் பட்டால், ஒட்டு மொத்த வட இந்திய ஊடகங்களும் குதிக்கின்றன, ஆனால் தினமும் கொல்லப் படுகிற மீனவர்களைப் பற்றி ஒருவரும் வாய் திறப்பதில்லை.] இன்று சிங்கள இராணுவத்தால் தாக்கப் பட்டதற்க்கோ, ஈழத்தில் என் சொந்தம் இறப்பதற்கோ ஒரு அனுதாப வார்த்தையாவது பேசியிறுப்பாரா? தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டின் உப்பைத் தின்றவர்களுக்கு எதனால் தமிழர் பால் இத்தனி வெறுப்பு.


இல‌ங்கை‌யி‌ல் அர‌‌சிய‌ல் ‌தீ‌ர்வு காண கோ‌ரி ‌பேர‌ணி- பொது‌க் கூ‌ட்ட‌ம்: தி.மு.க செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம்
நல்லா தீர்மானம் போடுறாங்கய்யா, இருக்கப்போவது இரண்டே மாதம்தான்,ஏதாவது உருப்படியா செய்வார்கள் என்று பார்த்தால் பொதுகூட்டம் போடுகிறார்களாம். கலைஞருக்கு எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்றிவிட வேண்டும், ஜெயலலிதாவுக்கு எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விடவேண்டும். மற்றவையெல்லம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

சீமானின் ஆறாத பெருங்கோபமும் அடங்காத பேரன்பும்!

ராஜீவ் மரணத்தை அவர்கள் ஒரு காரணமாகச் சொல்கிறார்களே?

ராஜீவ் மரணம் கொடுமையானது. அதில் சந்தேகமே இல்லை. அதைவிடக் கொடுமையானது அமைதிப் படை செய்தவை. ராஜீவைக் கொன்றவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே… காந்தியைக் கொன்றவர்களைப் பற்றி, இந்திராவைக் கொன்றவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? எந்தப் பிழையும் கடந்து போகும். எந்தக் காயமும் ஒரு நாள் ஆறும். அது ஓர் இழப்பு. அந்த இழப்புக்காக ஓர் இனம் நித்தமும் சாவதை எப்படிச் சமப்படுத்துகிறீர்கள்?

மேலும் படிக்க இங்கே செல்லவும். இவருடைய எண்ணமும், உணர்வும் கருணாநிதிக்கும், காங்கிரசுக்கும் இருந்தால் என் இனம் இத்தனை பாடு படுமா?

காங்கிரசு கட்சிக் காரர்களே[ கட்சியின் பெயரில் கூட தமிழ் இல்லை, பந்தயம் கட்டுகிறேன், காங்கிரசு கட்சிக்கு தமிழ் மொழி பெயர்ப்பு பேராயக் கட்சி என்று எந்த காங்கிரசு தலைவனும் சரியாக சொல்ல மாட்டார்கள்.]  காங்கிரசு காரர்களே தயவு செய்து காமராசர் பெயரை சொல்லாதிர்கள், ஒரு துளி கொள்கை கூட இல்லாத குப்பைகள் நீங்கள். உங்களுக்கு தேவை பதவி, பணம். த்தூ, ஓட்டு கேட்டு வாருங்கள் பிச்சைக் காரர்களே, காறி உமிழ வாய் நிறைய எச்சிலும் நெஞ்சில் பெருங்கோபமும் தேங்கிக் கிடக்கிறது.