
புஷ் போன்ற[உலகம் முழுதும் நல்ல பெயரை(?) வாங்கிய] அதிபரைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் குடியேரும் ஒபாமாவின் மேல் மிகப் பெரும் எதிர் பார்ப்புகள் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒபாமா ஒரளவிற்கு மேல் பெரும் மாறுதல்களை கொன்டு வர முடியும் என தோன்ற வில்லை. உலகின் அதிகாரம் மிக்க பதவி என்றாலும், அதே அளவு அதிகாரம் படைத்த பழமை வாதிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஒபாமாவிற்கு தான் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்லாமல், புஷ் செய்ய மறந்தவகளையும் செய்ய வேண்டியிருக்கும், புஷ் செய்த தவறுகளையும் திருத்த வேண்டியிருக்கும்.
லிங்கன் கண்ட கனவு , மார்டின் லூதர் கிங் கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கிறதா என்றால், ஓரளவிற்கே, இன்னும் கருப்பின மக்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். அவர்கள் தனக்குள்ளாகவும் வெளியும் போரட வேண்டியிருப்பவை அதிகம். ஒபாமா கருப்பின மக்களுக்கு இப்போது அளித்திறுக்கும் உந்துதலை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
புஷ் தனது பதவி முடிவிற்க்கு பிறகு, அதிபர் நூலகம் என்று ஒன்றை அமிக்கப் போகின்றாராம், ஈராக் போருக்கு செலவளித்த தொகையில் உலகம் முழுக்க நூலகங்கள் அமைத்து இருக்கலாம்.ஜிம்மி கார்டர் போன்று தனது பின் அதிபர் வாழ்க்கையை பயனுள்ள வகையில் புஷ் அமைத்துக் கொன்டால், நிறைய பேரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்.
நான் அமெரிக்க சரித்திரத்தில் ஆவலுடன் எதிர் பார்க்கும் மற்றுமொரு நிகழ்வு, ஒரு செவ்விந்தியர் அமெரிக்க அதிபர் ஆவது. நடக்குமா என்று தெரியவில்லை, நடந்தால் எனக்கும், கடந்த சில நூற்றாண்டுகளாக பெரும் அநீதிக்குள்ளான செவ்விந்தியர்களுக்கும் மகிழ்ச்சி.
நான் ஒபாமாவிடம்/அவர் அரசிடம் வரும் நாட்களில் எதிர் பார்க்கும் மாற்றங்கள்,
- ஈரக்கில் அமைதியை ஏற்படுத்துவது
- அமெரிக்கவில் மருத்துவத் துறை சீர்திருத்தம்
- நொடிந்து வரும் பொருளாதார சரிவிலிருந்து அமெர்க்காவை மீட்டல்
- ஈரான், பாலஸ்த்தீனம், க்யுபா, போன்ற நாடுகளிடம் நட்புறவை வளர்த்தல்.
- போராளிகளுக்கும் தீவிர வாதிகளுக்கும் சரியான வரைவைக் கொணர்தல்.
என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் தனது வண்டியில் எழுதியிருக்கும் என்னைக் கவர்ந்த ஒரு வரி, சனவரி 20, 2009, எட்டு வருட பிழைக்கு ஒரு முற்றுப் புள்ளி. Jan-20-2009, End of an ERROR.
0 Comments :
Post a Comment