Saturday, January 17, 2009

தமிழர்கள், கருணாநிதி, செயலலிதா

திருமாவின் உண்ணாவிரதம் வெறும் நாடகம்: ஜெயலலிதா
தான் ஆடாவிட்டலும் தன் சதை ஆடும் என்பார்கள், இவருக்கு சதை ஆட வில்லை வயிறு எரிகிறது, திருமா இன்னும் செல்வாக்கு அடைந்து விடுவாரோ என்று பயப்படுகிறார். தனக்கு பாதுகாப்பு குறைந்து விட்டது என்பதற்காக தினம் ஒரு அறிக்கை விட்டு, நீதி மன்றத்திடம் முறையிட்ட இவர், தமிழீழ் விடுதலைக்கு இவருடைய பக்தர்களை தமிழகம் முழுக்க போர்ராட்டம் நடத்த சொல்லி இருக்கலாம். தமிழர்களைப் பற்றி கவலைப் படாத, தமிழீழத்தை வெளிப்படையாகவே எதிர்க்கும் செயலலிதா இப்படி எல்லாம் அறிக்கை விடுவதில் பெரிய வித்தியாசமோ, ஆச்சரியமோ இல்லை. அடுத்த செய்தியைப் பாருங்கள்,

இலங்கைப் பிரச்னை: சில நாள்கள் பொறுத்திருப்போம்- முதல்வர்
கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. செயலலிதா எம்ஜிர்- ஆல் திரைப்படத்துறையால் முதலமைச்சர் ஆனாவர், செயலலிதா எப்போதுமே மேல் சாதி பார்ப்பன இந்துவாகத்தான் தன்னை அடையாளப் படுத்திக் கொன்டிருக்கிறார். ஆனால் கருணாநிதி எப்போதுமே தன்னை தமிழனாக தமிழனத்துக்குப் போராடுபவனாக காட்டிக்கொள்பவர். ஆனால் இவருக்கு தமிழர்கள் எல்லாம் ஆட்சிக்கு அப்புறம்தான். தமிழக மக்கள் இவருக்கு கொடுத்த 40 மக்களவை உறுப்பினர்களை வைத்து, இவருக்கு வேண்டிய அமைச்சரவை துறைகளைப் பெற்றுக் கொன்டவர், பிரனாப் முகர்ஜி இலங்கை செல்லவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார். ஆனால் கருணாநிதி ஆட்சியில் இதையெல்லாம் ஓரளவுக்காகவது வெளிப்படையாக பேசவவாது முடிகிறது, செயலலிதா ஆட்சியென்றால் மொத்தமாக சிறைதான்.

ஒரு தமிழரை வெளியுறவுத்துறை அமைச்சராக்கிருக்கலாம், தமிழரை வெளியுறவுத் துறை பாதுகாப்புச் செயலராக்கியிருக்கலாம், இலங்கைக்கு ஒரு தமிழரை தூதுவராகியிருக்கலாம், உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கினைத்து உலகத்தின் கவனத்தை ஈழ்த்துக்கு ஆதரவாக மாற்ற முயற்ச்சி செய்திருக்கலாம். இவர் செய்தது எல்லாம், பணம் கொழிக்கும் துறைகளாகப் பெற்றுக்கொன்டார், தனது பேரன் முதல் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவிப் பெற்றுக் கொண்டார். இப்போது தமிழன் செத்துக் கொண்டிருக்கும் போது இன்னும் சில நாள் பொறுத்திறுப்போம் என்கிறார்.

உடனே விஜய காந்த் உங்கள் நினைவுகு வந்தால், அவர் இவர்களையெல்லாம் மிஞ்சும்படி இருக்கிறார்.  அவரை எப்படியாவது முதலமைச்சராக்கி தனது சொல் படி ஆடும் பொம்மை முதல்வராக வைத்துக் கொள்ள ஆசைப்படும் மேல் சாதி தமிழக ஊடகங்களின், கை விரல் அசைவுக்கு கட்டுப் படும் பொம்மையாக இருக்கிறார். தனது 100வது படத்திற்கு பிரபாகரன் என் பெயர் வைத்தவர், இன்று ஒரு அறிக்கை கூட விட மாட்டேன் என்கிறார். ஒருவேளை உண்ணாவிரதம் இருந்தால் எடை குறைந்து விடும் என்று பயப் படுகிறாரோ?

மருத்தவர் அய்யாவைப் பற்றி நீங்களே இங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள், மருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி!

சொல்வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது, நாம் ஈழத்தமிழர்களுக்காக கவலைப் பட்டால், இவர்கள் வாக்கிற்காக கவலைப் படுபவர்களாக இருக்கிறார்கள்.3 Comments :

Anonymous said...

Jayalalitha - Does not care for Tamil Elam
Karunanidhi - Does not care for Tamil Elam but pretends to care

I do not see much difference between the two..

Anonymous said...

Karunanidhi himself is a Telugu. He has 'achieved' a lot for Tamil race - by increasing the Caste divisions. There is speeches against Brahmins and atrocities against poor population in Southern TN. It is very good achievement for Tamil by the Telugu politicians of Tamilnadu.

Anonymous said...

கருணாநிதிக்கு தமிழைக் கண்டால் வெறுப்பு போல. அதுனாலத்தான் தமிழ் இடஒதுக்கீடு சாதிகளில் ஒரே இந்தி தெலுங்கு!!!!


தெலுங்கு தெலுங்கு தான்
மு க தெலுங்கு தான்
ராம்தாஸ் தெலுங்கு தான்
பார்ப்பான் பாப்பான் பார்பான் என கூவினாலும்
உண்மை உண்மை தான்
தெலுங்கு தெலுங்கு தான்