Tuesday, December 29, 2009

மாற்றம்

0 Comments

ஒரு சமூகத்தின் சிறப்பு, அதன் பழமையில் மட்டுமில்லை, அது எவ்வளவு திறனுடன் மாற்றத்தை ஏற்று கொண்டு, புதுமையை நோக்கி நடைபோடுவதிலும் இருக்கிறது. நம் சமூகம் மாற்றத்தை மிகவும் பயத்துடனே எதிர் கொள்கிறது. திருமணம் என்பது இருமணங்கள் இணைவது என்று கவிதை பாடுவதோடு சரி. இனம், மொழி, மதம், சாதி, தெரிந்த குடும்பம், சொந்தம் என்று எத்தனை பயங்கள் எத்தனை தடைகள்.

 

மாற்றத்தின் பயம்தான், நம்மை பிற மனிதர்களிடம் புன்னகைக்க கூட மறுக்கிறது. நம் சுய அடையாளத்தை, நமது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்த தடுக்கிறது. இடது கை பழக்கம் எனபது, பிறப்பால் வரும் பண்பு. ஆனால், எனக்கு தெரிந்து நிறைய இடது கைப் பழக்கமுடையவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அதில் ஒருவர் கூட, இடது கையால் எழுதும் பழக்கமுடையவர்கள் இல்லை. இடது கையால் எழுதுவது என்பது, நமது ஆசிரியர்களால் ஏற்றுகொள்ளவே முடியாத ஒரு தீண்டாமைச் செயல். மாற்றப்பட வேண்டிய சாதி, மதம் முதல் பல விடயஙகளை கண்டுகொள்ளவே மாட்டர்கள் என்பது வேறு கதை.

 

மாற்றத்திற்கும் மகிழ்சிக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. எப்போதுமே மகிழ்வான/கவர்சியான மாற்றங்களை எளிதில் ஏற்றுகொள்வோம், ஆனால் பெரும்பாலான மாற்றங்கள் கடினமானவை மற்றும் தேவையானவை. காலம் கால்பதிக்கிற எல்லா இடங்களிலும் மாற்றத்திற்கான விதையை விதைத்துகொண்டே செல்கிறது. எந்த சமூகம் விரைவாக இந்த மாற்றங்களை அடையாளம் கண்டுகொள்கிறதோ அந்த சமூகம் வளமுடன் திகழும் என்பதற்கு அமெரிக்காவை விட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. பொருளாதர ரீதியிலும் சரி, சமூக கருதியல் ரீதியாகவும் சரி.

மாற்றத்தை திறந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்வோம். மகிழ்வான சமூகம் படைப்போம்.

 

மாற்றத்தைப் பற்றி, சில மேற்கோள்கள். திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தேட வேண்டும்.

 

“Life can either be accepted or changed. If it is not accepted, it must be changed. If it cannot be changed, then it must be accepted.”

“Change is the only constant”

“Life is change. Growth is optional. Choose wisely.”

“Change starts when someone sees the next step.”

“The first step toward change is awareness. The second step is acceptance.”

Change is inevitable - except from a vending machine.  ~Robert C. Gallagher

If you're in a bad situation, don't worry it'll change.  If you're in a good situation, don't worry it'll change.  ~John A. Simone, Sr.

When you are through changing, you are through.  ~Bruce Barton

If nothing ever changed, there'd be no butterflies.

It is not the strongest of the species that survive, nor the most intelligent, but the one most responsive to change.

If you want to make enemies, try to change something.  ~Woodrow Wilson

Continuity gives us roots; change gives us branches, letting us stretch and grow and reach new heights.

It's the most unhappy people who most fear change.  ~Mignon McLaughlin,

Our only security is our ability to change.  ~John Lilly

Because things are the way they are, things will not stay the way they are.  ~Bertold Brecht

Always remember that the future comes one day at a time.

If we don't change, we don't grow. If we don't grow, we aren't really living.

Only the wisest and stupidest of men never change. Confucius

Saturday, December 12, 2009

Mr.Deeds

0 Comments

பணம் வந்தாலும் பழைமை மாறாமல் இருப்பது என்பது மிகப் பெரும் பண்பு. வள்ளுவனை விட இதை சிறப்பாக யார் சொல்லிவிட முடியும்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். குறள் 333

 

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும். மு.வ.

அமெரிக்கவின் ஒரு சிற்றூரில், நிறைவான வாழ்கை நடத்தி வரும், சாதாரண இளைஞன், பெரும் செல்வந்தரான மாமா இறந்த பின் 40 பில்லியன் டாலர்களுக்கு சொந்தகாரணாகிறான். செய்தி சேகரிக்க, பொய் நட்பு கொள்ளும் பொண்ணிடம் உண்டாகும் காதல், சொத்தை ஏமாற்றிப் பறிக்க முயலும் ஒரு கூட்டம் என நிறைய தமிழ் பட களங்களும், பாத்திரங்களும் இருந்தாலும் ஆடம் சாண்டல்ரின்[Adam Sandler] மற்றுமொரு முத்திரைப் படம்.

 

மனதை தொடும் காட்சிகளுடன் நகைசுவை இணையும் போது, கதையும் தருக்கமும் படத்திற்கு தேவையே இல்லை என்று நிறுவும் மற்றுமொரு படம்.

Saturday, November 21, 2009

Few words of wisdom from George Carlin

0 Comments

Most of the time forward mails carry lot of demands and speculation and senseless Indian patriotism[Support Shilpa Shtty, otherwise you are not Indian. Support Indian Army otherwise you are not Indian, though they rape in Assam, helping Sri Lankan army to burn people in Northern Sri Lanka.

Besides that, the credibility of these mails. I think we Indian have this inferior or saffer(!?) attitude, If they want to say some thing, they would write a superb mail or story then at the end they would say this is from Abdul Kalam, Gandhi, Nehru blah blah...

But, I get few forward mails that carry wisdom, wit. This is one of them,

The paradox of our time in history is that we have taller buildings but shorter tempers, wider Freeways , but narrower viewpoints. We spend more, but have less, we buy more, but enjoy less.
We have bigger houses and smaller families, more conveniences, but less time.
We have more degrees but less sense, more knowledge, but less judgment, more experts, yet more problems, more medicine, but less wellness.
We drink too much, smoke too much, spend too recklessly, laugh too little, drive too fast, get too angry, stay up too late, get up too tired, read too little, watch TV too much, and pray too seldom.
We have multiplied our possessions, but reduced our values. We talk too much, love too seldom, and hate too often.
We've learned how to make a living, but not a life. We've added years to life not life to years. We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet a new neighbor. We conquered outer space but not inner space. We've done larger things, but not better things.
We've cleaned up the air, but polluted the soul. We've conquered the atom, but not our prejudice. We write more, but learn less. We plan more, but accomplish less.
We've learned to rush, but not to wait. We build more computers to hold more information, to produce more copies than ever, but we communicate less and less.
These are the times of fast foods and slow digestion, big men and small character, steep profits and shallow relationships.
These are the days of two incomes but more divorce, fancier houses, but broken homes.
These are days of quick trips, disposable diapers, throwaway morality, one night stands, overweight bodies, and pills that do everything from cheer,
to quiet, to kill.
It is a time when there is much in the showroom window and nothing in the stockroom. A time when technology can bring this letter to you, and a time when you can choose either to share this insight, or to just hit delete...
Remember; spend some time with your loved ones, because they are not going to be around forever.
Remember, say a kind word to someone who looks up to you in awe, because that little person soon will grow up and leave your side.
Remember, to give a warm hug to the one next to you, because that is the only treasure you can give with your heart and it doesn't cost a cent.
Remember, to say, "I love you" to your partner and your loved ones, but most of all mean it. A kiss and an embrace will mend hurt when it comes from deep inside of you.
Remember to hold hands and cherish the moment for someday that person will not be there again.
Give time to love, give time to speak! And give time to share the precious thoughts in your mind.
AND ALWAYS REMEMBER:
Life is not measured by the number of breaths we take, but by the moments that take our breath away.

Sunday, November 15, 2009

Swing Vote

0 Comments

தனி மனித மாற்றம், சமூக மாற்றமாகுமோ? அதிலும் குறிப்பாக எளிய மனிதர்களால் தங்களிடமும், தன்னை சுற்றியுள்ளவர்களிடமும் உண்டாக்கும் மாற்றம் சமூக மாற்றமாகுமா? அல்லது இந்த மாற்றங்கள் சமூக மாற்றத்திற்கு வழி வகுக்குமா? எளிய மனிதர்களால் சமூக மாற்றத்தை கொணர முடியுமா?

 

இங்கே சமூகம் என்று குறிப்பது, உருவமோ, உயிரோ இல்லாத ஒர் குழுப் பெயர்ச் சொல். தனி மரங்கள் சேர்ந்து ஒரு தோப்பாகுவது போல், சமூகம் என்பது, தனி மனிதர்களால் ஆன ஒரு தோப்பு. எல்லா மனிதர்களும் அழியும் போது, அல்லது மாறும் போது, சமூகமும் அழிகிறது, மாற்றம் பெறுகிறது. சமூக மாற்றம் என்பது, ஒரு மாற்றம் அந்த சமூகத்தில் உள்ள பெரும் பாலான, மக்களிடையே ஏற்படுவது.

 

தனி மனித மாற்றம், சமூக மாற்றத்தை கொண்டு வந்து விடாது என்ற எதிமறைக் கருத்து, சமூக மாற்றத்தின் அடி மடியில் விழும் அடி. இந்த எண்ணமே, மனிதர்களை, இயலாமைக்கு கொண்டு செல்கிறது. இயலாமை தரும் வலியும் வேதனையுமே, தீவிரவாதத்திற்கு அடிகோலுகிறது.

Both optimists and pessimists contribute to our society. The optimist invents the airplane and the pessimist the parachute.

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் நிகழ்ந்த, உப்பு சத்தியா கிரகம், கதராடை முதலான போராட்டங்கள், தனி மனிதர்களால், நாடு முழுவதும் நிகழ்த்தப் பட்ட தனிமனித போராட்டங்களே. இப்படி சமூகத்தில் உள்ள, பெரும் பான்மையான மக்கள், சமூக மாற்றத்திற்காக தங்களது கடைமைகளை தவறாமல் செய்யும் போது, சமூக மாற்றம் தானாகவே நிகழ்கிறது.

 

இப்படியான நமது சமூக கடைமைகளில், ஒன்றுதான் வாக்களிப்பது. அப்படியானால் நூறு சதவிகித வாக்கு விகிதம், நமது சமூகத்தில் நிகழும் பிரச்சினைகள் தீர்த்து விடுமா? கண்டிப்பாக இருக்காது என்பதுதான் உண்மை. அது உண்மையெனில், கடந்த்த சில தேர்தல்களில், தமிழகத்தில், குறிப்பிடும்படியான அளவில் வாக்குப்பதிவு அதிகரித்தது. என்ன மாற்றம் நிகழ்ந்தது. கூப்பிடும் தூரத்தில் பாஸ்பரஸ் குண்டுகளில் சொந்த இரத்தங்கள், அதையும் தாண்டி, நம்மைப் போலவே, இரத்தமும் சதையும் உணர்வும் கொண்ட மனிதர்கள் எரிந்த போது, சில துளி கண்ணீர் விட்டோம், கவிதை படித்தோம் பின்பு, மானாட மயிலாடவில் நம்மை மறந்து போனோம். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது ஒர் படிமம்[metaphor] மட்டுமே. வாக்கு எனபது நமது பல்வேறு சமூக கடமைகளில் ஒன்று மட்டுமே. ஆனால் மிக முக்கியமான ஒன்று.

 

அமெரிக்காவின் உண்மையான பலம், அவளுடைய செல்வ வளத்திலோ, ஆயுத பலத்திலோ இல்லை. மக்கள். சமூக கடமைகளின் முக்கியத் துவத்தை உணர்ந்த மக்கள். நான் என்ணுடைய சமூக கடமையை செய்யாவிட்டால், இந்த சமூக இயந்திரத்தை ஒரு வித்ததில் பாதிக்கிறோம், சமூக கடமையை தவற விடுவதன் மூலம், வரும் கால சந்ததிக்கு நமது கடமையை செய்ய மறுக்கிறோம் என்பதை உணர்ந்த மக்கள்தான் அமெரிக்காவின் உண்மையான பலம்.

All the world's great civilizations have followed the same path. From bondage to liberty, from liberty to abundance, from abundance to complacency, from complacency to apathy, from apathy back to bondage. If we are to be the exception to history, then we must break the cycle, for those who do not remember the past are condemned to repeat it.

ஒரு சிறுமி தனது சக மாணவர்களுக்கு படித்துக் காட்டும் இந்த வரிகளுடன், தொடங்கும் படம், அமெரிக்க அரசியல் களத்தையும், அங்கே நிகழும் கோமாளித் தனங்களும், அதனால் விளையும் மனப் போராட்டங்களையும் இழையோடும் நகைசுவையுடன் ஒரு பொறுப்பற்ற எளிய மனிதன் எவ்வாறு தன் கடமையை உணர்கிறான் என்பதோடு முடிகிறது. கட்டாயம் பார்க்க வேண்டிய மன எழுச்சி தரும் படம்.

Thursday, November 12, 2009

வளையமாதேவியில் இருந்து மில்வாக்கி வரை...

0 Comments
நான் அமெரிக்கவில் இருந்து வந்திருக்கிறேன் என்று தெரிந்தால, பெரும்பாலான நேரங்களில் இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படும். அமெரிக்காவின் சிறப்பு எது?. மின்னணு சாதனங்கள்? சுத்தமான சாலை? பெரிய கட்டிடங்கள்? வளமான வாய்ப்புகள்? என்று வரிசை நீளமாக இருக்கும்.

என்னைப் பொருத்தவரை, அமெரிக்கவின் சிறப்பு அதன் மக்கள் மற்றும் Life, liberty and the pursuit of happiness என்ற கருத்தாக்கத்தில் அவர்களின் விடாப்பிடியான பற்றுதல்.

கடந்த பத்து வருடங்களில் என்னுடைய வழ்கையில் சில் முக்கியமான மாற்றங்களை எதிர் கொண்டிருக்கிறேன். முதல் முறையாக என்னுடைய ஊரில் நானூற்றி சொச்சம் பேர் படித்த அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து, சில ஆயிரம் பேர் படிக்கும் பள்ளிக்குப் போனேன். கணிதத்தில் தொன்னூற்றி சொச்ச விழுக்காடு குறையாமல் வாங்கிக் கொண்டிருந்த நான், என் பதினொன்றாம் வகுப்பில், தேர்ச்சி பெறுவதற்கே கடுமையாக போராட வேண்டியிருந்தது. என் பதினொன்றாம் கல்வி ஆண்டு முழுக்க நான், இந்த மாற்றத்திற்க்கு தகவமைத்துகொள்ளவே போரட வேண்டியிருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு மதுரைக்கு கல்லுரிக்கு சென்ற போதும், மதுரையில் இருந்து கோவைக்கும், பெங்களூர்க்கும் வேலைக்கு சென்றபோதும் மாற்றம் அதற்கே உண்டான புதுமைகளுடனும் கடினங்களுடனும் வந்தது. முந்தைய மாற்றத்தில் கற்றுகொண்ட பாடம், அனுபவமும், முதிர்ச்சியும் போன்றவை உதவியாக இருந்த பொழுதும், பெங்களூரிலிருந்து மில்வாக்கி வந்த இந்த மாற்றம், மிகவும் சுமூகமாக அமைந்தது. ஏற்கனவே இரண்டு முறை வந்திருந்தாலும், மந்தமான அமெரிக்க பொருளாதாரம், குழுவை வழி நடத்தி கொண்டிருக்கும் வாய்பையும், வளமையான Honewell வாய்ப்புகளைவிட்டு போவதாக நண்பர்கள் ஊட்டிய பயம் ஒரு பக்கம் இருந்தாலும், தைரியமாக மில்வாக்கியில் குடிபுகுந்தேன்.

அலுவலகத்தில் நுழையும் வரை, இருந்த பதட்டம், உள்ளே நுழைந்து மக்களை சந்தித்தவுடன், நொடிப் பொழுதில் மறைந்து போனது. ஒரு வருடத்திற்கு மேலாக ஆன பொழுதும், அலுவலகத்திலே இளையவனாக இருக்கும் பொழுதும், கண்ணியமாக நடத்துகிறார்கள். குறிப்பாக வேறுபாடுகளை மதிக்கிறார்கள். என்னை மிகவும் கவர்ந்தது, மற்றவர்கள் மேல் இவர்கள் காட்டும் அக்கறைதான். மற்றவர் மனம் புண்படுகிற மாதிரி நடக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எல்லாவற்றையும் நல்ல நகைசுவை உணர்வோடு எடுத்து கொள்கிறார்கள். இந்த நகைச்சுவை உணர்வுதான, விமர்சனத்தைக் கூட மென்மையாக சொல்ல வைக்கிறது.

இந்த இரண்டு ஆண்டுகளில் கற்று கொண்டதில் குறிப்பாக சொல்லக் கூடியவை, தெரிந்தவரோ தெரியாதவரோ, நட்பான புன்னகை. இது மிகப் பெரிய மாற்றம். இந்த புன்னகை, வேலைப் பளுவையும், அது தரும் மன அளுத்தத்தையும் வெகுவாக குறைக்கிறது. புத்தகம், கணிப்பொறி, வேலை இந்த இரண்டைத் தவிர பெரிதாக எதிலும் ஆர்வம் இல்லாமல்  இருந்த என்க்கு, அமெரிக்க வாழ்க்கை, இதையும் தாண்டி கலை,இசை போன்ற வேறு உலகங்கள் இருக்கிறது என்று காட்டியது.

Great nations write their autobiographies in three manuscripts, the book of their deeds, the book of their words and the book of their art. Not one of these books can be understood unless we read the two others, but of the three the only trustworthy one is the last -John Ruskin

இது சமூகங்களுக்கும் நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், தனி மனிதர்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன்.
இதையெல்லாம் தாண்டி என்னை மிகவும் கவர்ந்த சில் விடயங்கள், அவற்றை தனிப் பதிவாக
 • ஒவ்வொரு ஊரிலும் பரவி இருக்கும் பொது நூலகம். நான் எங்களூரில் ஒரு நூலகம் வைத்து நடத்துவதே பெரும் பாடாக இருக்கையில் அமெரிக்காவில் உள்ள மொத்த நூலகங்களின் எண்ணிக்கை 122,356  வியப்பான விடயம்.
 • தன்னார்வ தொண்டு அமைப்புகள்.
 • பறவைகள்.
 • எழில் கொஞ்சும் இயற்க்கை.
 • Camping and Trekking


Saturday, October 3, 2009

The Life of Birds

1 Comments
ஒரு புறம் பொருளாதார காரணங்களாலும், பொறுப்பில்லாதனத்தினாலும் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கிறான், மறுபுறம், ஆயிரம் மைல் தூரம் இடைவிடாமல் பறக்கும் பாடும் பறவைகளுக்கு பசியாற இடமளிக்கிறான். விந்தையான மனிதர்களுக்கிளின் சிக்கல் நிறைந்த உலகில், பறவைகள் தொடர்ந்து தனது வாழ்வை மாற்றிகொண்டு பறந்து கொண்டேதன் இருக்கின்றன.

சில நூற்றாண்டு முன்பு வரை மனிதன், பறவையைப் போன்றும், விலங்குகலைப் போன்றும், இயற்கையின் வரம்புகளுக்கு உட்பட்டேதான் வாழ்ந்துகொண்டிருந்தான். இருபதாம் நூற்றாண்டின் தொழில்வளர்ச்சியும், அசுர விஞ்ஞான வளர்ச்சியும் மனிதனின் கரங்களில் அளவுக்கு அதிகமான் ஆற்றலை கொடுத்து விட்டன. பயமறியாத இளம் கன்று போல, மனிதன் சிக்கலும், விந்தையும், கோடி கணக்கான ஆண்டு வரலாரும் கொண்ட இயைற்கை வென்றுவிட முடியும் என நினைக்கிறான்.

பறவைகள் நாம் சில ஆண்டுகளுக்கு முன் அறிந்த அறிவையலை, பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தி வருகின்றன. வெப்ப ஆற்றலை தனக்கு சாதகமாக்கி, இமையத்தை கடக்கின்றன. இருண்ட குகைகளை தனது ஒலியைக் கொண்டு கடக்கின்றன. இயற்கைக்கு ஏற்றவாரு தங்களை தகவமைத்து கொண்டு வாழும் இந்த பறவைகளிடம் நாம் கற்று கொள்ள எத்தனையோ இருக்கின்றன.

BBC தாயரித்து, டேவிட் அட்டன்பரோ[David Attenborough]வின் குரலில், 1998ல் வெளிவந்த தொடர், பறவைகளின் வாழ்வு[The life of Birds].பறவைகளின் விநோதமான பழக்க வழக்கங்கள், மதி நுட்பமாய் எதிரிகளிடம் காத்துகொள்ளும் திறன், புதிய வாய்ப்புகளைத் தேடி ஓடும் தைரியம், தனது அடுத்த தலைமுறைக்காக கடும் வெயிலிலும் கொட்டும் பனியிலும் வாடும் அர்பணிப்பு என பறவையின் ஒவ்வொரு நிலையையும், சங்க கவிதைகள் போல ஆர்டிக் முதலான அனைத்து கண்டங்களிலும் போய் படம் பிடித்துள்ளார்கள்.

இந்தத் தொடரை முழுவதும் பார்த்த பிறகு, சுண்டு வில்லையோ, துப்பாக்கிகளையோ, பறவை பிடிக்கும் கன்னிகளையோ தொடு முன் நிச்சயம் இந்த தொடரில் பார்த்த ஏதோ ஒரு பறவை உங்கள கண்முன் வரும்.

மான்களை வேலிகளுக்குள்ளேயே பார்த்து பழகிய எனக்கு, மில்வாக்கியின் புறநகரங்களில், வீட்டு தோட்டங்களில் மான்களைப் பார்த்த போது வரும் மகிழ்சிக்கு அளவே இல்லை. எத்தகைய வேலைப் பளுவிலும், மானைக் கண்டால், நின்று சில நிமிடங்களாவது இரசித்து விட்டுதான் நகர முடியும். இன்று அத்தகைய அழகிய மானை வெறும் சில் நொடிப் பொழுதில் வாகனம் ஏற்றி கொன்றிருப்பேன். முன் பக்க விளக்கில் மட்டும் மோதி, மயிரிலையில் உயிர் பிழைத்து ஓடிய அந்த மான், மீண்டும் ஒருமுறை இந்த தொடரை பார்க வைத்தது.

மொத்த தொடரையும் காண,
http://www.youtube.com/show?p=S3vPSi1o5nM
The Life of Birds - Wikipedia, the free encyclopedia

Wednesday, June 17, 2009

ஈழம் எரியும் நினைவுகள்-யாழ் நூலகம்

2 Comments
[ஈழத்தில் தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை, மேற்கோளுக்காவும், விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கும் தொகுக்கும் ஒரு முயல்வு]
எங்கே பொத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ, அங்கே மனிதர்களும் எரிக்கப் படுவார்கள் - என்ரிக் எய்ன் " Where they have burned books, they will end in burning human beings " –Heinrich Heine (1797-1856)
 ஒரு இனத்தை அடிமைப் படுத்த, முதல் படி, அவர்களின் அடையாளத்தையும் அது தரும் பெருமிதத்தையும் அழிப்பதுதான்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றன்
என கணியனின் வரிகளை உரக்கப் படித்து வாழும் சமூகத்தை, எப்படி அடிமைப் படுத்த முடியும். முதல் படி கணியனையும் அவனது பொன் வரிகளையும் அழிப்பதுதான். 1981ம் ஆண்டு சூன் 1-ம் நாள் கருக்கலில், ஈராயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நூலகம் சிங்கள வெறியர்களால் எரிக்கப்பட்டது. நீங்கள் கொளுத்தியது எங்கள் சகிப்புத்தன்மையை, இன்னா செய்தவருக்கும் நன்னயம் செய்யும் எங்கள் சகோதர உணர்வை. அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாள் என ஆதி காலம் முதல் அன்பை போற்றி வளர்ந்த எம் இனத்தின் பண்பாட்டை. யாழ் நூலகத்தில் தொடங்கிய தீ, முத்து குமார் வரை தொடர்கிறது. எங்கள் இனத்தின் பெருமிதம் இருக்கும் வரை தொடரும்... சுட்டிகள் : [உங்களுக்கு தெரிந்த பயனுள்ள சுட்டிகளை பின்னூட்டமிடுங்கள்] யாழ் நூலகம் காற்றோடு....: ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள் Sri Lanka: Jaffna Public Library destroyed by Sinhala Police

Monday, April 27, 2009

யாருக்கு வாக்களிப்பது

1 Comments
கடந்த சில மாதங்களாக, ஈழத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசியல் கட்சிகளின் இரட்டை வேடங்களைப் பார்த்து, உடலும் மனமும் கூசி குறுகி நிற்கிறேன். ஒவ்வொறு முறையும் இவர்களின் இரட்டை வேடத்தை செய்திகளில் படிக்கும் போது, அளவு கடந்த வேதனையும் கடும் வெறுப்புமே மனதில் எஞ்சி நிற்கிறது.

இவர்களை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்ற இயலாமை வேறு மனதை குத்தி கிழிக்கிறது. மக்களாட்சியின் குறைபாடுகள் கண்கூடாக தெரிகிறது. மக்களாட்சியில் மக்களின் ஒரே ஆயுதமான, தேர்தல் இங்கே வாக்கு சேகரிக்கும் கூத்தாக மட்டுமே நடக்கிறது.

இந்த தேர்தல், மூன்று விதமான வேட்பாளர்களை களத்தில் கொண்டுள்ளது.

 1. வெளிப்படையான எதிரிகள், வெளிப்படையாக தமிழர் இன ஒழிப்பை ஆதரிக்கும் காங்கிரசு, ஆட்சியை காப்பற்ற காங்கிரசுக்கு துனை போகும் திமுக.
 2. நண்பர்கள் மாதிரி தோற்றம் அளிக்கும் எதிரிகள்.
  1. ஜெயலலிதா, இவருடைய ஒரே நோக்கம் ஆட்சி மற்றும் கருணாநிதி ஒழிப்பு மட்டுமே, தமிழர், ஈழம் எல்லாம் கடைசியில்தான்.
  2. ஈழ பிரச்சினையில் வாயையே திறக்க மறுக்கும் விஜயகாந்த். இவருக்கு தேவை காங்கிரஸ், தினமலர், சோ, பார்ப்பனிய ஊடகங்களின் ஆதரவு. ஈழத்தமிழர்களுக்கு 100வது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் என பெயர் வைத்ததோடு சரி.
 3. தேர்தல் கூத்தில் மதி மயங்கி நிற்கும் நண்பர்கள். பமக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள்.

இவர்களில் ஒருவரை நாம் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். யாரை ஆதரிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் கீழே இருக்கும் வலைப்பதிவுகளை படியுங்கள், நிச்சயம் தெளிவு கிடைக்கும். நல்ல தெளிவான சிந்தனை கொண்ட நண்பர்களால் எழுதப்பட்ட பதிவுகள் இவை.

பத்ரி - யாருக்கு வாக்களிப்பது?

தமிழ் சசி - திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்

குழலி ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...

ரோசா வசந்த் - திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

நான் பத்ரியின் கருத்தில் நிறையவே உடன்படுகிறேன். சுருக்கமாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கிறார்.

Friday, April 17, 2009

இது யாருடைய தேர்தல் அறிக்கை

0 Comments
 1. இராமர் கோயில் கட்டப்படும்
 2. சேது சமுத்திரம் ரத்து செய்யப்படும்.
 3. வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், தினந்தோறும் அவர்களுக்கு உணவு அளிக்கப்படும்.
 4. ஏழைகளுக்கு சேவை செய்கிறோம் என்ற போர்வையில் துளிகூட அச்சம் இன்றி தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மீது, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் இந்த அமைப்புகளின் மீது அதிமுக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.[ நேரடியாகவே கிறுத்துவ அமைப்புகள் என்று சொல்லியிருக்கலாம்] .
 5. இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்படவும், அப்பாவி தமிழ் மக்களின் இனப் படுகொலையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் தனிஈழ மாநிலம் அமைக்க வலியுறுத்துவோம்.
 6. அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ் பகுதிகளை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும், இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
 7. கற்பழித்தல் குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

இது பாஜக வின் தேர்தல் அறிக்கை என நினைத்தால், நீங்கள் செல்வி, காவிரி தாய்[கர்நாடகத்தில் பிறந்ததாலா?], அகில இந்திய அன்ணை, செல்வி செயலலிதாவைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் தமிழ் நாட்டில் வாழ்ந்த குற்றத்திற்காக, தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் இருந்துமே வெளியாற்றப்படுவீர்கள். எப்பா சாமி, தயவு செஞ்சு ”அண்ணா”வை கட்சிப் பேரில் இருந்து நீக்குங்கப்பா.

அண்ணாவுக்கு கருணாநிதி செய்து வரும் சேவையே போதும், உங்க சேவை வேற வேணுமா?

அதிமுக, திமுக இரண்டு க[…]ளும் [உங்கள் விருப்பம், என்ன வேண்டுமானாலும் நிரப்பி கொள்ளலாம்] ஒன்றாக இணைந்து தமிழகத்திற்கு சேவை செய்யலாம்.ஜெயலலிதா, இந்து ஹிந்து வளர்சி துறையை எடுத்துகொள்ளலாம். கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சித்துறையை எடுத்து கொள்ளலாம். எப்படி அம்பானி உலகின் முதல் பணக்காரராக ஆனபோது இந்தியர்கள் புளங்காகிதம் அடைந்தார்களோ, அப்படி தமிழர்கள் கருணாநிதி & கு. உலகில் மிகப் பெரும் பணக்கார குடும்பம் ஆகும்போது நாமும் சந்தோசப்படலாம். தமிழர்களுக்குன்னு பெருமைப் பட என்ன இருக்கிறது. தமிழர்களுக்கு பாடுபட திரு. க வுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா. நமக்குதான் வாய்ப்பு கொடுக்கிறதுன்னா, அல்வா கொடுக்கிற மாதிரியாச்சே. விஜயகாந்து ரஜினி காந்து முதல் சமீபத்திய வரவி ரித்தீச்ச்சு [பேர கூட தமிழில் வைக்க முடியாதவர்கள், ஆனா தமிழர்களுக்கு ஆபத்து என்றால், தீக்குளிக்க கூட தயங்காதவர்கள்] என எல்லாருக்கும் வாய்ப்பு கொடுப்போம். அகில தாயே உங்களை ஹிந்திய, இலங்கை பிரதமராக்கும் வரை போரட காத்திருக்கும் இரத்ததின் இரத்தங்கள் இருக்கும் வரை நீங்கள் என்ன அறிக்கை வேண்டுமனாலும் விடலாம். 

Sunday, April 5, 2009

துப்பாக்கிகள்

2 Comments

சசி தனது பதிவில் அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம் பற்றி எழுதியிருந்தார்.  இதைப் பற்றி எனது பார்வையும் சில மாற்று கருத்துகளும் இங்கே.

துப்பாக்கிகள் ஆபத்தானவை

எல்லா ஆயுதங்களும் ஆபத்தானவைதான் தவறானவர்களின் கைகளில் இருக்கும் போது, கத்திகளும் ஆபத்தானவை, கருங்கற்களும் ஆபத்தானவை. ஒவ்வொரு ஆயுதமும் அதற்கே உண்டான ஆபத்தை கொண்டிருக்கின்றன. அணு ஆயுதங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன, சிறு கத்திகள் அணு ஆயுதங்களை ஒப்பிடுகையில் சிறு அளவிலான சேதத்தை ஏற்படுத்துகின்றன. பொருப்பற்றவர்களின் கைகளில் எல்லாமே ஆபாத்தான ஆயுதங்கள்தான்.

ஆயுதங்கள் இல்லாதவர்களை தங்களை விட மிகக் கீழாக நினைக்கும் போக்கும் ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. எல்லாரும் ஆயுதங்கள் வைத்து இருப்பது, அல்லது யாரும் ஆயுதம் வைத்து கொள்ளாமல் இருப்பது.

ரோட்டில் நடந்து செல்லுபவரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் இங்கே வெகு சகஜம்.

கத்தி முனையில் நம்மூரில் பணம் பறிபதில்லையா? சாலையில் செல்பவர்களிடம் துப்பாக்கியை காட்டாமல் கத்தியை காட்டியிருந்தாலும் பணத்தை இழந்திருபார்கள். இந்த மாதிரியான சமையங்களில் துப்பாக்கிகளை விட கத்திகள் ஆபத்தானவை. துப்பாக்கிகள் சத்தம் எழுப்ப கூடியவை சுட்டால் மற்றவர்களின் கவனத்தை கவர கூடியவை,ஆனால் கத்திகள் சத்தமிலாதவை.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் பல்வேறு துப்பாக்கிச்சூடுகளிலும், துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டும் இறக்கின்றனர். 

இங்கே இரண்டு பிரச்சினைகள்,

 • தற்கொலை செய்துகொள்பவர்கள்.
  • இவர்களுக்கு துப்பாக்கி ஒரு ஆயுதம் மட்டுமே, துப்பாக்கி இல்லையென்றால் விசமோ அரளி விதையோ.
 • மற்றவர்களால் கொலை செய்யப்படுபவர்கள்.
  • இங்கே சட்டத்தை கையில் எடுத்து கொள்பவர்கள்தான் பிரச்சினையே ஒழிய துப்பாக்கிகள் அல்ல. துப்பாக்கிகள் இல்லாத காலத்திலும் கொலையும் கொள்ளையும் நடந்திருக்கின்றன.

மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

துப்பாக்கிகள் தடைசெய்யப்பட்டுள்ள துப்பாக்கி கலாச்சாரம் இல்லாத இந்தியாவிலும் காந்தி இந்திரகாந்தி துப்பாக்கியால்தான் கொல்லப்பட்டார்கள்.

குழந்தைகள், சிறுவர்கள் துப்பாக்கியை கையாள்கிறார்கள், பள்ளியிலும் கல்லூரியிலும் சக மாணவர்களை துப்பாக்கியால் கொலை செய்கிறார்கள்.

அமெரிக்காவில் சிறுவர்களோ விடலைகளோ முன்னாள் குற்றவாளிகளோ துப்பாக்கியை வாங்க முடியாது. துப்பாக்கி வாங்க வேண்டுமென்றால் 1008 விதிகளும், நடைமுறைகளும் இருக்கின்றன.

இவை உண்மையென்றால், எப்படி பள்ளிகளிலும் கல்லூரிகளும் இத்தனை துப்பாக்கி சூடுகள்? பொருப்பற்ற பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பதற்கு நேரம் இல்லாதிருக்கிறார்கள்.  அமெரிகாவின் தெருக்களில் பணம் கொடுத்தால் எல்லாமும் கிடைக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

A well regulated militia being necessary to the security of a free State, the right of the People to keep and bear arms shall not be infringed.

இந்த சட்டம் மற்ற நாட்டிடமிடமிருந்த்து அமெரிக்காவை காத்து கொள்வது மட்டுமல்ல, சொந்த நாட்டில் அரசாங்கத்திடமிருந்து மக்கள் தங்களை காத்து கொள்வதும் கூடதான். மக்களை படுகொலை செய்யும் அரசாங்கம் வந்தால் அல்லது இராணுவம் மக்களாட்சியை படுகொலை செய்ய முயற்சித்தால், அல்லது ஒரு சில அரசியல் வாதிகள் மக்களை கட்டுப்படுத்த முயற்சிதால் மக்கள் இவர்களை எப்படி எதிர்ப்பார்கள். அகிம்சையால் இராணுவத்தை எதிர்த்து போராட முடியும் என்று நினைகிறீர்களா? ஜென்ரல் டயர் மாதிரியான இராணுவ ஆட்சியாளர் வந்தால் அவர்களிடமிருந்து மக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்வார்கள். என் கருத்து படி மக்கள் கையாலதவர்களாக இருப்பதாலதான், இந்திரா காந்தி அவசர நிலயை கொண்டுவர முடிந்தது. [அமெரிக்காவில் அப்படி ஒரு நிலையைதான் புஷ் பயத்தின் மூலம் கொண்டுவர முயற்சித்தார் என்பது வேறு கதை.]

இப்படி புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் தான் பல நேரங்களில் கிரிமினல்கள் கைகளிலும், மனநிலை சரியில்லாதவர்கள் கைகளிலும் சிக்கி விடுகிறது.

பொருப்பில்லாமல் துப்பக்கியை கையாளுபவர்களும்/தொலைப்பவர்களும்/விற்பவர்களும் குற்றவாளியாக்கப் படுவார்கள் எனும் நிலை இருந்தால் இத்தகைய நிலை கிறைய கூடும். அமெரிகாவில் பள்ளிகளில் 5க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுவது பெரும்பாலும் தானியங்கி ஆயுதங்களால்தான். இவைகள் பெரும்பாலும் கள்ள சந்தையில் வாங்கப்படுபவை.

துப்பாக்கிகள் வைத்திருக்கும் பொழுது அதனை பயன்படுத்தும் நோக்கம் பல நேரங்களில் இயல்பாக எழுந்து விடுகிறது.

வீட்டில் கத்தி வைத்திருப்பதால் கத்தியை தீங்காக பயன்படுத்த வேண்டும் என்று யாரும் நினைப்பிதில்லை. சாதாரணமான மனிதர்கள் எப்போதும் துப்பாக்கியை பயன்படுத்தி பிரச்சினையில் மாட்டிகொள்ளவேண்டும் என்று நினைப்பதில்லை. பெரும்பாலும் துப்பக்கியை தற்காப்பிற்காகவே பயன்படுத்த நினைக்கிறார்கள். கராத்தே, ஜூடே, வர்மம் போன்ற தற்காப்பு கலைகள் கூட ஆபத்தானவைதான்.

இந்தியர்கள் மத்தியிலும் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவது ஆபத்தானது. கடந்தவாரம் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சனைக்காக தன்குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்டுஇறந்திருக்கிறார். இதில் குழந்தைகளும் அடக்கம்.

நம்மூரில் விசம் வைத்து குடும்ப பகையை தீர்த்து கொண்ட கதைகள் எல்லம் இருக்கின்றன. மகள் தான் விரும்பியவனை திருமணம் செய்ய விரும்பியதால் மொத்த குடும்பத்திற்கும் விசம் கொடுத்து கொலை செய்தவர்களின் கதைகளையெல்லம் நான் எனது ஊரில் கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஒவ்வொரு முறை அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பெரியளவில் நடக்கும் பொழுது அன்று ஒரு நாள் மட்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து பேசப்படும். துப்பாக்கிகளுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்கள் முன்வைக்கப்படும்.

இங்கு துப்பாக்கி வைத்து கொள்வது தவறென்று சொல்வது, நமது விவசாயிகளிடம் அரிவாள் வைத்து கொள்ளகூடாது என்று சொல்வது மாதிரிதான். துப்பாக்கி அரிவாள் மாதிரி ஒரு ஆயுதம். அவ்வளவே. எப்படி இவர்களிடம் இப்படிப்பட்ட ஆய்தங்கள் கிடைக்கிறது, ஆய்தப் பயன்பாட்டை நெறிப்படுத்துவதெப்படி, தோட்டாக்களில் இருந்து துப்பக்கியை அடையாளம் காண்பது போன்ற விடயங்களை அமெரிக்க ஊடகங்கள் பேச மறுப்பதுதான் கொடுமையே.

துப்பாக்கிகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கிகள் கிடைத்தவுடன் அதனை தங்கள் அதிகாரத்தின் சின்னங்களாக வெளிப்படுத்திக் கொண்டனர்

இவர்களை எப்படி கட்டுப்படுத்துவது. அகிம்சை முறையிலா? இல்லை திலீபன் மாதிரி உண்ணாவிரதம் இருக்க சொல்கிறீர்களா?. ஒன்று அவர்களிடமிருந்து துப்பக்கியை பிடுங்கி எறியுங்கள் அல்லது போராட தாயராயிருக்கும் எல்லொரிடத்திலும் ஆயுதத்தை கொடுங்கள்.

எதிரிகள்தான் உங்களுடய ஆய்தத்தை தீர்மானிக்கிறார்கள் - மாவோ

மனிதனிடம் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம் அவனுடைய சிந்தனைதான், மற்றவை எல்லாம் சிறு ஆய்தங்கள். என்னுடைய

துப்பாக்கிகளை தங்களுடைய கைகளில் எடுக்கும் எந்த அமைப்பும், இயக்கமும் அளவில்லாத சுதந்திரத்தையும் தங்கள் கைகளில் எடுத்து கொள்கின்றன.

நீங்களே சொல்லிவிட்டிர்கள், இப்படிப் பட்டவர்களிடமிருந்து மக்கள் எப்படி தங்களை காத்து கொள்வார்கள்.

இயக்கங்களுக்கு மக்களை சார்ந்து இருக்கும் அவசியம் இல்லாமல் போனது. They were not Accountable to People. இதுவும் ஈழப் போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டம், அரசியல் போராட்டம் என்பதில் இருந்து நகர்ந்து இன்று தமிழன் வாழ்வுரிமை சார்ந்த இராணுவ போராட்டமாக மாறியதற்கு ஒரு முக்கிய காரணம்.

ஈழத்தில் ஆயுதப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் ஒரு வடிவம் மட்டுமே. மற்ற தளங்களிலும், வேறு களங்களிலும் ஈழத்து சொந்தங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இயேசுவும், புத்தனும் எனது எதிரியாய் இருந்தால், மகிழ்வாய் அகிம்சை மட்டுமெ எனது ஆயுதம் என்று சொல்வேன்.

அரசாங்கம் தீயவர்களின் கைகளில் துப்பாக்கியே கிடைக்காது, அவர்களால் எந்து உயிருக்கோ உடமைக்கோ எந்த கேடும் வராது, என்ற உறுதியை கொடுத்தால் எனக்கு துப்பக்கியே வேண்டாம். துப்பாக்கிகள் யாரிடமும் இல்லை என்கின்ற  போது எனக்கும் வேண்டாம். என்னுடைய எதிரி துப்பக்கி வைத்திருக்கின்ற போது நான் துப்பாக்கி வைத்து கொள்ளகூடது என்பது, எனது வாழ்வதற்கான உரிமையை என்னிடமிருந்து எடுத்து கொள்வது போன்றதாகும்.

Thursday, March 5, 2009

How Children Fail

0 Comments

பத்ரியின் பதிவின் வழியாய்[கற்கத் தவறிய பாடம் - எஸ்.ராமகிருஷ்ணன்] இந்த புத்தகத்தைப் பற்றி படிக்க நேர்ந்தது. இங்குள்ள உள்ளூர் நூலகத்தில் இருந்து வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிகிறேன். எளிமையாகவும் தெளிவாகவும் உள்ள நடை. படித்து முடித்தவுடன் விரிவான பதிவு.

Friday, February 20, 2009

சுப்பிரமணிய சாமியும் பத்ரியின் பதிவும்

0 Comments
உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறைக்கும் நடந்த சண்டையைப் பற்றியும் இந்த சம்பவத்திற்க்கு காரணமான சுப்பிரமணிய சாமி மீதான தாக்குதல் பற்றியும் பத்ரியின் பதிவைப் படித்ததன் விளைவு இந்த பதிவு


http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_23.html

http://thoughtsintamil.blogspot.com/2008/03/blog-post_31.html

பத்ரி இரண்டு சுட்டிகளிலுமே நீங்கள் தீட்சிதர்களின் செயல் மாறவேண்டும் அதுதான் அவர்களுக்கு நல்லது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் எழுதியுள்ளீர்களே தவிர, சிவனடியார் ஆறுமுக சாமி தக்கப் பட்டதை கண்டித்து நீங்கள் ஒரு வரி கூட எழுத வில்லை என்பது வேதனையான உண்மை.

//இணைய பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய, லெனினிய வஸ்தாதுகள் மதிமாறன், வினவு போன்றோர்
என்ன பத்ரி நீங்களும் பொதுப்படுத்துதலில்
இறங்கிவிட்டீர்களா?

பத்ரி எனக்கும் சட்டம், அறவழிப் போராட்டம் எல்லாம் நல்ல கொள்கைகள்தான். ஆனால் இங்கு சட்டம் எளிய மக்களுக்கு வெறும் ஏடுகளில் மட்டும்தான் நிற்க்கிது. அப்படிப்பட்ட சட்டத்திற்கு பாதுகாவலர்கள்தான் சுப்பிரமணிய சாமிக்களும் தீட்சிதர்களும். சுப்பிரமணிய சாமிக்கு இந்திய அரசியல் சட்டம், தீட்சிதர்களுக்கு இந்து சாதி அரசியல் சட்டம். காலம் காலமாக இவர்களிடமிருந்து சட்டத்தை எளிய மக்களுக்கு எடுத்து சென்றது பெரியாரும், மர்க்சும் இவர்களின் அடியாள்களான[வஸ்தாதுகள்] திகா, மகஇகளுமே என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.

//இப்போது எந்தவிதமான மாறுபட்ட கருத்தையும் எதிர்கொள்ளும் போது எழுதுபவரின் பின்புலத்தை புலனாய்வு செய்வது, பெரியாரிய தோழர்களின் நடவடிக்கையாக உள்ளது.//
தோழர்களின் பின்புலம் பெரியாரியம் என்று இவருக்கு எப்படி தெரிந்தது?

சுப்பிரமணிய சாமி தாக்கப்பட்டதும் தவறே, காவல் துறை தாக்கப் பட்டதும் தவறே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதும் தவறே, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அநாகரிகள் என்றால் சிவனடியாரை தாக்கியவர்களும் அநாகரிகள்தான். என்னுடைய கோபம் எல்லாம் இப்போது குதிக்கும் நீதிமன்றமும், சட்டத்தின் மேல் நம்பிக்கை கொன்ட சனநாயக வாதிகளும் சிவனடியார் தாக்கப் பட்டபோதும், சீமான் கைது செய்யப்பட்ட போதும், செய்யப்படும் போதும், புத்தக விற்பனை தடை என வாய் வழி உத்தரவு போட்ட போதும் இதே கோபத்தை காட்டவில்லை என்பதுதான்.

//Voltaire is attributed with having said, ‘I disapprove of what you say, but I will defend to the death your right to say it.’//
வால்டரின் மேற்கோள் சீமனுக்கும், விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கும், தமிழ் தேசிய வாதிகளுக்கும் பொருந்தும் என்று நம்பிகிறேன்


Thursday, February 12, 2009

அபிரகாம் லிங்கன்

0 Comments
Abraham Lincoln
அமெரிக்காவின் முகத்தை சீரமைத்த தந்தை, எனது மிகவும் மனம் கவர்ந்த தலைவரின் 200வது பிறந்த நாள்.

Thursday, February 5, 2009

ஜெயலலிதாவுடன் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்திப்பு

1 Comments
எங்கே தேள் கொட்டினால் எங்கே நெறி கட்டுகிறது என்று பாருங்கள். அண்ணா கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கும் போது அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் செயலலிதாவின் நடத்தையை பாருங்கள். நெற்றியில் எப்போதுமே தனது சாதி அடையாளத்தை தாங்கி தனது சாதிப் பற்றை காட்டிவரும் செயலலிதாவிடம் வேறு என்ன எதிர்பார்க்க?

சிதம்பரம் தீட்சிதர்கள், இன்னும் மன்னராட்சி காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு 21ம் நூற்றாண்டு வந்து விட்டதே தெரியாமல் வாழ்கிறார்கள். இங்கே பத்ரியின் வலைப் பதிவில் இவர்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு எவ்வளாவு பெரிய கொடுமையை சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செய்கிறார்கள் என்பதை படித்து பாருங்கள். சொந்தங்களுக்குள்ளேயே மணம்முடித்தால் எத்தகைய ஊனங்கள் வரும் என்பதை நான் நன்றாகவே அறிவேன். என்னுடைய அத்தையின் குடும்பத்தில் சொந்ததிலேயே மணம் முடித்ததால் வாரிசுகளில் ஆறு பேருக்கு மேல் ஊமையாய் வாழ்கின்றனர். தான் செய்யாத தவறுகளுக்கு தண்டனை பெறும் இவர்களை நினைத்தாலே இதற்க்கு காரணமனவர்களின் மூட நம்பிக்கைய நினைத்து எரிச்சல்தான் வருகிறது. ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சிங்கம் புலிகள் கூட தன்னுடைய வாரிசுகள் வலுவுள்ளவையாக பிறக்க வலுவான துனையை தேடும், இந்த விலங்குகள் தங்களுடைய மரபனு கொத்தை [Gene pool] விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

தீட்சிதர்கள் போராடட்டும் அவர்களுக்கு சுதந்திர நாட்டில்(ஈழத்து தமிழர்களை ஆதரித்து பேசினால் மட்டும் உள்ளே தள்ளிவிடுவார்கள், காந்தி உண்ணாவிரதம், முழு அடைப்பு போராட்டம் நடத்தினால், அறவழிப்போராட்டம், கருணாநிதி செய்தால் நீதி மன்றம் ஞாயிற்று கிழமைகளில் கூட தடை விதிக்கும்) எல்லா உரிமையும் இருக்கிறது. இவர்கள் போராட்டம் நேர்மையானதாக இருந்தால் மக்கள் இவர்கள் மேல் அனுதாபப்படுவார்கள், அதற்கு மாறாக கோவிலை இவர்கள் கல் சுமந்து கட்டிய மாதிரி உரிமை கொண்டாடுவது, தமிழை இழிவு படுத்துவதையே ஒரு கடமையாக வைத்திருப்பது, தமிழில் தேவாரம் படிக்க விடாமல் தடுப்பது, வழிபட வந்தவர்களைத் தாக்குவது, கோவில் கணக்கு வழக்குகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது போன்று சிறுபிள்ளாத்தனமான வேலைகளை நிறுத்தவேண்டும்.

எல்லா சமுகத்திலுமே ஒரு உயர்குடி[elite group] இருக்கும், [பெரும்பாலும் மன்னர்கள், அவர்களின் வாரிசுகள், மதவாதிகள், இவர்களின் வாரிசுகள்]. இந்தக் குழுக்கள் ஒரு மாய எல்லைக் கோட்டை வரையறுத்து மற்றவர்களை இந்த வட்டத்திற்க்குள் வரவிடாமல் தடுக்கும். இந்த மாயக் கோடு ஒவ்வொரு இனத்திற்கும் வேறு விதமாக இருக்கும். உதாரந்த்திற்கு எகிப்தை ஆண்ட ஃபெரோ மன்னர்கள், இவர்கள் தங்களை கடவுளாக அறிவித்துக்கொண்டார்கள்.

நம்மூரில் உருவாக்கப் பட்டதுதான் சாதி, இந்த மாய எல்லை காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு,வளர்ககப்பட்டு வந்துள்ளது. இவற்றின் ஒரு வடிவம்தான் விதவை மறுமண மறுப்பு, பார்ப்பனர்கள்[பார்ப்பனர்கள் என்பது கெட்ட வார்த்தை இல்லீங்க, பால் போல் வெளுத்து காணப்பட்டதால் பார்ப்பனர்கள்]விதவைகளை மொட்டை அடித்து, வீட்டில் முடக்கியது, சமூகத்தில் விதவைகளை ஒரு அவல சின்னமாகா காட்டியது போன்றவை எல்லாம் தங்களுடைய சாதிக்குள் கலப்பு வந்து விடுமோ, மற்றவர்களிடம் தங்கள் பங்கை இழக்க நேரிடுமோ என்ற பயத்தால் விளைந்ததுதான். மகா பாரதத்தில் பார்ப்பன பெண்ணை மணக்கும் ஒரு மன்னனுக்கு ஒரு பார்ப்பன முனிவர் சாபம் கொடுப்பது மாதிரி ஒரு கதை கேட்ட மாதிரி ஞாபகம். யாராவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மீண்டும் ஒரு முறை மகா பாரதம் இராமாயன படிக்க வேண்டும். கதையின் வழியே எப்படி மூட நம்பிக்கைகளை  எப்படி இவ்வளவு காலங்கள் கடத்தியிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது கதை சொல்லும் கலையின் ஆற்றல் வியப்பளிக்கிறது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான், ஒரு காலத்தில் இவர்களுக்கு கேடையமாக விளங்கிய சாதி இன்று இவர்களுக்கு தீங்காய் வந்திருக்கிறது. பார்பனர்கள் கற்று வரும் இந்த பாடத்தை மற்ற ஆதிக்க சாதிகள் கற்றுகொள்ள வேண்டும்.

காற்று ஒரே திசையில் பயனிக்காது நண்பர்களே, எப்படி வேண்டுமானாலும் திசை மாறலாம், எளியோரிடம் கனிவு  கொள்ளுங்கள், எளியோரின் நன்மைக்காக இல்லை உங்களின் நன்மைக்காக.

நீங்கள் வலியவராய் இருக்கும் போது சகிப்புத்தன்மையை வளர்த்து கொள்ளுங்கள்,
நீங்கள் எளியோராய் இருக்கும் போது நல்லுறுதியை வளர்த்து கொள்ளுங்கள்.

Wednesday, February 4, 2009

நான் இந்தியனா என்பதை இந்தியாவே முடிவு செய்யட்டும்

1 Comments
நான் ஏன் இந்தியன் என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும், எனக்கோ என் இனத்திற்கோ என்ன பலன் கிடைக்கிறது, இஸ்ரேல் பாணியில் இலங்கை பயன்படுத்தும் பாஸ்பரஸ் எரிகுண்டுகள், காசாவில் இசுரேல் தாக்கிய போது வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா[சோனியா காந்தி, அவருடையா கைப்பாவை மன் மோகன் சிங்] இன்று வாய்ப் பொத்தி நிற்க்கிறது. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமலாவது இருக்கலாம், தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை இராணுவதினரை பயிற்ச்சிக்கு அனுப்பிகிறது, அதுவும் தமிழகத்திற்கே. சென்னைக்கு வந்த சிங்கள விமான படையினர்!

இன்னும் சேரிகள் நிறைந்து கிடக்கின்றன, முக்கால் வாசி மக்கள்தொகை வறுமைக் கோட்டிற்க்கு கீழே வாழ்கிறது, பெரும்பாலான ஏழைகள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவிகிறார்கள், ஆனால் ஆளும் வர்கம் மட்டும்[அன்று மன்னராட்சியிலுருந்து, இன்று மக்களாட்சி வரை, ஆளும் வர்க்கத்திற்க்கு எல்லா வசதிகளும் கிடைக்கிறது] மிகச்சிறந்த மருத்துவ வசதிகளை அனுபவிக்கிறது. ஆனால் அறிக்கை மட்டும் நல்லா விடுகிறார்கள், எனக்கு கிடைக்கும் இதே மருத்துவ வசதி ஏழைகளுக்கும் கிடைக்க  வேண்டும் என்பது எனது விருப்பம் - மன்மோகன் சிங். கீழ் நிலைக் குடிமகன் விருப்பப் படலாம், அவனால் அதை மட்டும்தான் செய்ய முடியும், பிரதமரும் இங்கே விருப்பம் மட்டும்தான் படுவார், அதற்க்கு எந்த திட்டமும் தீட்ட மாட்டார்கள், நல்லா விருப்பப் பட்றாங்கைய்யா...

இப்படி ஆயிரம் பிரச்சினைகள் கொன்ட இந்திய வல்லரசு[?] தனது இராணுத்திற்க்கு செலவளிப்பது மட்டுமல்லாமல், இலங்கை இராணுவத்திற்க்கும் சேர்த்து செலவளிக்கிறது, கொய்யால இதுக்கு நான் வரி கட்டணும், என் கையை வைத்தே என் கண்ணை குத்துவீர்கள், நாங்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதரகள், என்று வாய் கூசாமல் வசனம் பேச வேண்டும்? போங்கடா நீங்களும் உங்க தேசியமும்...

சகோதர்த்துவம் என்பது ஒர் கண்ணிற்க்கு காயம் என்றால் மறு கண் அழ வேண்டும், இந்தியாவில் இருக்கிற மற்ற மாநிலத்துக் காரன் எவனாவது தமிழினத்தின் துன்பத்தில் பங்கெடுக்க வருகிறானா? செயல் எல்லம் அப்புறம், அட ஒரு வாய் வார்த்தை? கண்ணியாகுமாரியில் மீனவன் தாக்கப் பட்டால் தமிழக மீனவர்கள், குஜராத்தில் தாக்கப்பட்டால் இந்திய மீனவர்கள். இந்திய தேசியத்தை தூக்கிப் பிடிக்கும் நண்பர்களே, நீங்களே முடிவு செய்யுங்கள், எப்படிப் பட்ட இந்தியா உங்களுக்கு வேண்டும் என்று. எங்கு சமத்துவம் மறுக்கப் படுகிறதோ அங்கு புரட்சி மலர்ந்தே தீரும், இப்படி பல அரசுகள் வரலாற்றில் கானாமல் போயிருக்கின்றன.

உங்களுடைய ஆயுதம் எதிரியால் தீர்மானம் செய்யப்படுகிறது. -மாவோ.

Tuesday, February 3, 2009

வாக்குப் பிச்சைக்காரர்கள்

2 Comments
முத்துகுமார் மரணத்தில் சந்தேகம் - எல்லாம் தெரிந்த சுப்பிரமணிய சாமி சொல்கிறார்.
மனித உரிமைகள் பற்றி வாய் கிழிய பேசும் இவர் தமிழக மீனவர்கள்[இந்திய மீனவர்கள் அல்ல, நாங்களா தனி தமிழ் நாடு கேட்கிறோம், இவர்களாகவே கேள் என்கிறார்கள். பாகிஸ்தானில் பஞ்சாப்பை சேர்ந்த ஒர்வருக்கு, நல்லா படிங்க, ஒருவருக்கு தூக்கு தண்டணை விதிக்கப் பட்டால், ஒட்டு மொத்த வட இந்திய ஊடகங்களும் குதிக்கின்றன, ஆனால் தினமும் கொல்லப் படுகிற மீனவர்களைப் பற்றி ஒருவரும் வாய் திறப்பதில்லை.] இன்று சிங்கள இராணுவத்தால் தாக்கப் பட்டதற்க்கோ, ஈழத்தில் என் சொந்தம் இறப்பதற்கோ ஒரு அனுதாப வார்த்தையாவது பேசியிறுப்பாரா? தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டின் உப்பைத் தின்றவர்களுக்கு எதனால் தமிழர் பால் இத்தனி வெறுப்பு.


இல‌ங்கை‌யி‌ல் அர‌‌சிய‌ல் ‌தீ‌ர்வு காண கோ‌ரி ‌பேர‌ணி- பொது‌க் கூ‌ட்ட‌ம்: தி.மு.க செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம்
நல்லா தீர்மானம் போடுறாங்கய்யா, இருக்கப்போவது இரண்டே மாதம்தான்,ஏதாவது உருப்படியா செய்வார்கள் என்று பார்த்தால் பொதுகூட்டம் போடுகிறார்களாம். கலைஞருக்கு எப்படியாவது ஆட்சியைக் காப்பாற்றிவிட வேண்டும், ஜெயலலிதாவுக்கு எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விடவேண்டும். மற்றவையெல்லம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

சீமானின் ஆறாத பெருங்கோபமும் அடங்காத பேரன்பும்!

ராஜீவ் மரணத்தை அவர்கள் ஒரு காரணமாகச் சொல்கிறார்களே?

ராஜீவ் மரணம் கொடுமையானது. அதில் சந்தேகமே இல்லை. அதைவிடக் கொடுமையானது அமைதிப் படை செய்தவை. ராஜீவைக் கொன்றவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே… காந்தியைக் கொன்றவர்களைப் பற்றி, இந்திராவைக் கொன்றவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? எந்தப் பிழையும் கடந்து போகும். எந்தக் காயமும் ஒரு நாள் ஆறும். அது ஓர் இழப்பு. அந்த இழப்புக்காக ஓர் இனம் நித்தமும் சாவதை எப்படிச் சமப்படுத்துகிறீர்கள்?

மேலும் படிக்க இங்கே செல்லவும். இவருடைய எண்ணமும், உணர்வும் கருணாநிதிக்கும், காங்கிரசுக்கும் இருந்தால் என் இனம் இத்தனை பாடு படுமா?

காங்கிரசு கட்சிக் காரர்களே[ கட்சியின் பெயரில் கூட தமிழ் இல்லை, பந்தயம் கட்டுகிறேன், காங்கிரசு கட்சிக்கு தமிழ் மொழி பெயர்ப்பு பேராயக் கட்சி என்று எந்த காங்கிரசு தலைவனும் சரியாக சொல்ல மாட்டார்கள்.]  காங்கிரசு காரர்களே தயவு செய்து காமராசர் பெயரை சொல்லாதிர்கள், ஒரு துளி கொள்கை கூட இல்லாத குப்பைகள் நீங்கள். உங்களுக்கு தேவை பதவி, பணம். த்தூ, ஓட்டு கேட்டு வாருங்கள் பிச்சைக் காரர்களே, காறி உமிழ வாய் நிறைய எச்சிலும் நெஞ்சில் பெருங்கோபமும் தேங்கிக் கிடக்கிறது.

Thursday, January 29, 2009

வீர வணக்கம்

0 Comments

ஈழப் பிரச்சினையில் இளைஞர் தீக்குளிப்பு எனக் கேள்விப்பட்டவுடன், ஏதோ உணச்சிவேகத்தில் ஒர் இளைஞர் செய்திருப்பார் என நினைத்தேன், ஆனால் முத்து குமார் இறுதி நிமிடங்களில் கொடுத்த துண்டு அறிக்கைகளை படித்த பிறகு, மிக தெளிவாக சிந்திக்கும் ஓர் இளைஞர், கள்ள மொளனம் சாதிக்கும் தமிழக, இந்திய சர்வதேச அரசுகளினால் விளைந்த விரக்தியால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பது தெளிவானது.

இவ்வளவு தெளிவான சிந்தனை கொண்டிருந்த இந்த நண்பர், தமிழனோடு வாழ்ந்து சேர்ந்து போராடியிருக்கலாம்.

போய் வா நண்பா, என்றும் உன் நினைவு எங்கள் நினைவில் நிற்கும். ஈழம் ஒரு நாள் மலரும். உந்தன் உணர்வு வெகு சீக்கிரத்தில் உயிர் பெரும்.

சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே. சே குவேரா.

தமிழர்களே மனதளவிலாவது கோபப்படுங்கள், ஒரு துடிப்பான, தெளிவான சிந்தனை கொண்டிருந்த ஓர் இளைஞன், ஓர் தமிழனின் உயிரை வழக்கம் போல் புறக்கணித்து விடாதிர்கள்.


Monday, January 26, 2009

ஆஸ்திரேலியா வரிப்பந்தாட்டம் 2009 - 2

1 Comments
நான்கவது சுற்று சிறிது ஆச்சரியத்தையும் சிறு அதிர்ச்சியையும் தந்தது. மகளிர் பிரிவில் வெற்றி வாய்ப்புகளுடன் இருந்த அசரீனிகா[பெலாரசு, கிழக்கு ஐரோப்பா, முதல் முறையாக இப்பொதுதான் கேள்விப் படுகிறேன்] உடல் நிலை காரணமாக விலகினார். முதல் கொத்தை[set] சுலபமாக செரினாவிடம் வென்றார். கண்டிப்பாக செரினாவை வென்றுவிடுவார் என நினைத்தேன். நிச்சயமாக ஒரு பதக்கமாவது வெல்வார் என நினைக்கிறேன்.

எதிர் பார்த்த படியே டிமென்டிவா காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டார். பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளவர்.
Photo Titled Dementieva through to the quarter finals

டாக்கிச் ஆசுத்திரேலியாவிற்கு நம்பிக்கை தரும் விதத்தில் விளையாடி வருகிறார். ஊடகங்கள் இவரைக் கொன்டாடுகின்றன. க்ளேபனோவா எதோ அதிட்டதில்[luck] ஆனா இவானோவிச்சை வென்று விட்டார் என் நினைத்தேன், ஆனால் டாக்கிச்சிற்கு கடுமையான சவாலாக இருந்தார்.

ஆடவர் பிரிவில், சோங்கா இருப்பதை நேற்று வரை அறிந்திருக்கவில்லை. மொத்த கூட்டத்தையும் தனது வசீகரத்தால் கட்டிப்போட்டார். பிளேக் முதலிலுருந்தே சொதப்பி கொண்டிருந்தார். மூன்றாவது கொத்தில் நன்றாக விளையாடினார், சோங்கா இறுதி வரை நிற்ப்பார் என் நினைக்கிறேன். கடந்த முறை டாக்கோவிச்சிடம் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். இந்த முறை வெல்ல வாழ்த்துகள். ஏதோ நம்மாள் முடிந்தது :)

 Photo Titled Tsonga celebrates beating Ljubicic

எதிர் பாராத விதத்தில் முர்ரே, வெர்டாஸ்காவிடம் தோல்வியுற்றார். முர்ரே காலிறுதியில் விளையாடுவார் என எதிர் பார்த்தேன். நடால் கன்சாலாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிரார். இதுவரை ஒரு கொத்தைக் கூட இழக்காமல் விளையாடி வருகிறார்.


Sunday, January 25, 2009

ஆஸ்திரேலியா வரிப்பந்தாட்டம் 2009

2 Comments
இந்தியாவில் கிரிக்கெட் பைத்தியங்களை கடுப்பேற்றவும், அழகான பெண்களைப் பார்க்கவும்தான் வரிப்பந்தாட்டம் பார்க்க ஆரம்பித்தேன். இப்போது தொடர்ந்து பார்த்து வருகிறேன். தொடர் முடியும் வரை சில பதிவுகள் இடலாம் என்றிருக்கிறேன்.

இந்த தொடர் பதிவில் நான் செய்ய நினைத்திருப்பவை, முடிந்த வரை ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழாக்கம் முயற்சித்தல், வரிப் பந்தாட்டம், நான் ரசிக்கும் சில வீரர்களைப் பற்றி எழுதுதல்.

தமிழ் வளர்வது கடினம், ஆங்கிலத்துடன் போட்டி போட முடியாது என்று தோல்வி பல்லவி பாடுபவர்கள், http://ta.wiktionary.org, விக்சனரி குழு இரண்டையும் பாருங்கள். ஒரு இலட்சம் சொச்சம் வார்த்தைகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. இதில் என்னை மற்றும் எனக்கு தெரிந்த சில நண்பர்களையும் இணைத்துப் பணியாற்றலாம் என்றிருக்கிறேன். அதைப் பற்றி தனிப் பதிவு

-----------------

எனது கனவுக்கன்னிகள் எல்லோரும் காலியாகி விட்டார்கள். மரியா சரப்போவா[உடல் நிலை காரணமாக ஆடவில்லை], ஆனா இவானோவிச், செலினா யான்கோவிச், வில்லியம்சு சகோதரிகள்[செரீனா மட்டும் உள்ளார், ஆனால் நம்பிக்கயளிக்காத ஆட்டம்] எல்லோரும் கால் இறுதிக்கு கூட வரவில்லை. இந்த முறை நம்பிக்கை தரும் விதத்தில் ஆடி வருபவர்கள் சஃபீனா, டாக்கிச், பார்ட்டோலி[இவரைப் பற்றி தனிப் பதிவிடலாம் என்றிருக்கிறேன், சில வருடங்களாக காணாமல் போய் திடீரென திரும்பி வந்திருக்கிறார்].


Photo Titled Jelena Dokic celebrates winning the first set
Bartoli through

---------------------
ஆடவர் ஆட்டத்தில் வழக்கம் போல் நால்வர் குழு நம்பிக்கை அளிக்கிறது. ஃபெடெரெர், நடால், டாக்கோவிச், முர்ரே இவர்களில் ஒருவர் கோப்பைய வெல்வார் என நினைகிறேன். எனது கணிப்பு, நடால், ஃபெடெரெர், டாக்கோவிச், முர்ரே.

நேற்றைய ஆட்டத்தில் சஃபீனா, மற்றும் ஃபெடெரெர் தோற்றுவிடுவார்கள் என நினைத்தேன், முதலில் மோசமாக விளையாடி, பின் சுதாரித்து கொண்டார்கள். வெற்றி நம்முடைய திறமையில் மட்டும் இல்லை நமது திறமையின்மையை எதிரி எந்த அளவிற்க்கு பயன் படுத்தி கொள்கிறார் என்பதிலும் உள்ளது.  சில நேரங்களில் முன்னணி வீரர்கள் இத மறக்கும் போது ஆட்டம் விறுவிறுப்படிந்து விடுகிறது.  வருங்காலத்தில் அலிசி கார்னே, தாமசு போர்ட்ரிச் மின்னுவார்கள் என்று நம்புகிறேன்.

யாருக்காவது கீழே உள்ள வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தோன்றினால், தெரியப்படுத்துங்கள்
Ace, Dues, voley, Serve, Forehand

Saturday, January 24, 2009

Slumdog Millionaire

3 Comments

ஆகா ஓகோ என்றார்களே என்று பார்க்கப் போனேன், பெங்களூர் PVRல் கூட, முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்தது கிடையாது, வெளியிலேயே இருக்கைகள் பற்றிய தகவல் இருக்கும், ஆனால் இங்கே, நோகாமல் $8 வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்பி, முதல் வரிசையில் உட்கார வைத்து விட்டார்கள்.

வழக்கம் போல் அமெரிக்கர்கள் நொறுக்குத் தீனியை நொறுக்கிக் கொண்டிருந்தார்கள்,  சிலர் சாப்பிடுவதைப் பார்த்தால், எனக்கு பசி அடங்கிவிடுகிறது.

முதல் பாராட்டு, இசைப் புயல் ரகுமான், உறுத்தாத இசை, இந்திய வல்லரசில்(?) சிறுவர்கள் குறிப்பாக, குப்பத்து ஏழை சிறுவர்கள் படும் பாட்டை, இயக்குனர் மசாலா கலப்பிலாமல் எடுத்திருந்தார். இந்திய வல்லரசு என்ற மாய பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்திய ஊடகங்கள், மேல் சாதி/வர்க இந்தியர்கள், இவர்களை அப்படியே பின்பற்றும் நடுத்தட்டு வர்கங்கள் எப்படி இந்தப் படத்தை தூக்கிப் பிடிகிறார்களே என்று புரியவில்லை. இவர்கள் பெருமைப் படக்கூடிய விதத்தில் இந்தியாவைப் பற்றி பெருமையாக எதுவுமே காட்டப்படவில்லை

குப்பத்தை, ஏழை இந்தியாவை இதுவரை திரையில் பார்த்திராத, வளர்ந்து வரும் ஒர் வல்லரசாக மட்டுமே கேள்விப் பட்ட மேலை நாட்டவர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமாகப் படலாம், எனக்கு மற்றோரு இந்தி திரைப் படத்தை ஆங்கிலத்தில் பார்த்த மாதிரி இருந்தது. The Curious Case of Benjamin Button
பார்த்த பிறகு மனதில் நின்ற அளவு இந்தப் படம் நிற்கவில்லை எழுத்தும் வரவில்லை.

Tuesday, January 20, 2009

வெள்ளை மாளிகையில்...

0 Comments
Barack Obama takes the oath of office to become the 44th president ...இன்று அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான் நாள். கருப்பின அடிமைகளை வைத்து கட்டப் பட்ட வெள்ளை மாளிகையில், அடிமைத்தனம் அரசியல் சாசனப்படி சரி என்ற வாதிட்ட அதிபர்கள் வசித்த வெள்ளை மாளிகையில், முதன் முதலாக ஒரு கருப்பின அதிபராக பதவி ஏற்கிறார். 4 மில்லியன் மக்கள் முன்னிலையில் ஒபாமா தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

புஷ் போன்ற[உலகம் முழுதும் நல்ல பெயரை(?) வாங்கிய] அதிபரைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் குடியேரும் ஒபாமாவின் மேல் மிகப் பெரும் எதிர் பார்ப்புகள் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் எழுந்துள்ளது. என்னைப் பொறுத்தவரை ஒபாமா ஒரளவிற்கு மேல் பெரும் மாறுதல்களை கொன்டு வர முடியும் என தோன்ற வில்லை. உலகின் அதிகாரம் மிக்க பதவி என்றாலும், அதே அளவு அதிகாரம் படைத்த பழமை வாதிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். ஒபாமாவிற்கு தான் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்லாமல், புஷ் செய்ய மறந்தவகளையும் செய்ய வேண்டியிருக்கும், புஷ் செய்த தவறுகளையும் திருத்த வேண்டியிருக்கும்.

லிங்கன் கண்ட கனவு , மார்டின் லூதர் கிங் கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கிறதா என்றால், ஓரளவிற்கே, இன்னும் கருப்பின மக்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். அவர்கள் தனக்குள்ளாகவும் வெளியும் போரட வேண்டியிருப்பவை அதிகம். ஒபாமா கருப்பின மக்களுக்கு இப்போது அளித்திறுக்கும் உந்துதலை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

புஷ் தனது பதவி முடிவிற்க்கு பிறகு, அதிபர் நூலகம் என்று ஒன்றை அமிக்கப் போகின்றாராம், ஈராக் போருக்கு செலவளித்த தொகையில் உலகம் முழுக்க நூலகங்கள் அமைத்து இருக்கலாம்.ஜிம்மி கார்டர் போன்று தனது பின் அதிபர் வாழ்க்கையை பயனுள்ள வகையில் புஷ் அமைத்துக் கொன்டால், நிறைய பேரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்.

நான் அமெரிக்க சரித்திரத்தில் ஆவலுடன் எதிர் பார்க்கும் மற்றுமொரு நிகழ்வு, ஒரு செவ்விந்தியர் அமெரிக்க அதிபர் ஆவது. நடக்குமா என்று தெரியவில்லை, நடந்தால் எனக்கும், கடந்த சில நூற்றாண்டுகளாக பெரும் அநீதிக்குள்ளான செவ்விந்தியர்களுக்கும் மகிழ்ச்சி.

நான் ஒபாமாவிடம்/அவர் அரசிடம் வரும் நாட்களில் எதிர் பார்க்கும் மாற்றங்கள்,
 • ஈரக்கில் அமைதியை ஏற்படுத்துவது
 • அமெரிக்கவில் மருத்துவத் துறை சீர்திருத்தம்
 • நொடிந்து வரும் பொருளாதார சரிவிலிருந்து அமெர்க்காவை மீட்டல்
 • ஈரான், பாலஸ்த்தீனம், க்யுபா, போன்ற நாடுகளிடம் நட்புறவை வளர்த்தல்.
 • போராளிகளுக்கும் தீவிர வாதிகளுக்கும் சரியான வரைவைக் கொணர்தல்.
ஒபாமாவின் முழு உரையையும் படிக்கஎன்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் தனது வண்டியில் எழுதியிருக்கும் என்னைக் கவர்ந்த ஒரு வரி, சனவரி 20, 2009, எட்டு வருட பிழைக்கு ஒரு முற்றுப் புள்ளி.  Jan-20-2009, End of an ERROR.

Quote Of the Day

0 Comments
Life is not easy for any of us. But what of that? We must have perseverance and
above all confidence in ourselves. We must believe that we are gifted for
something and that this thing must be attained.
—Marie Curie (1867-1934), chemist, physicist, Nobel Prize winner


Saturday, January 17, 2009

தமிழர்கள், கருணாநிதி, செயலலிதா

3 Comments
திருமாவின் உண்ணாவிரதம் வெறும் நாடகம்: ஜெயலலிதா
தான் ஆடாவிட்டலும் தன் சதை ஆடும் என்பார்கள், இவருக்கு சதை ஆட வில்லை வயிறு எரிகிறது, திருமா இன்னும் செல்வாக்கு அடைந்து விடுவாரோ என்று பயப்படுகிறார். தனக்கு பாதுகாப்பு குறைந்து விட்டது என்பதற்காக தினம் ஒரு அறிக்கை விட்டு, நீதி மன்றத்திடம் முறையிட்ட இவர், தமிழீழ் விடுதலைக்கு இவருடைய பக்தர்களை தமிழகம் முழுக்க போர்ராட்டம் நடத்த சொல்லி இருக்கலாம். தமிழர்களைப் பற்றி கவலைப் படாத, தமிழீழத்தை வெளிப்படையாகவே எதிர்க்கும் செயலலிதா இப்படி எல்லாம் அறிக்கை விடுவதில் பெரிய வித்தியாசமோ, ஆச்சரியமோ இல்லை. அடுத்த செய்தியைப் பாருங்கள்,

இலங்கைப் பிரச்னை: சில நாள்கள் பொறுத்திருப்போம்- முதல்வர்
கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. செயலலிதா எம்ஜிர்- ஆல் திரைப்படத்துறையால் முதலமைச்சர் ஆனாவர், செயலலிதா எப்போதுமே மேல் சாதி பார்ப்பன இந்துவாகத்தான் தன்னை அடையாளப் படுத்திக் கொன்டிருக்கிறார். ஆனால் கருணாநிதி எப்போதுமே தன்னை தமிழனாக தமிழனத்துக்குப் போராடுபவனாக காட்டிக்கொள்பவர். ஆனால் இவருக்கு தமிழர்கள் எல்லாம் ஆட்சிக்கு அப்புறம்தான். தமிழக மக்கள் இவருக்கு கொடுத்த 40 மக்களவை உறுப்பினர்களை வைத்து, இவருக்கு வேண்டிய அமைச்சரவை துறைகளைப் பெற்றுக் கொன்டவர், பிரனாப் முகர்ஜி இலங்கை செல்லவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று அறிக்கை விடுகிறார். ஆனால் கருணாநிதி ஆட்சியில் இதையெல்லாம் ஓரளவுக்காகவது வெளிப்படையாக பேசவவாது முடிகிறது, செயலலிதா ஆட்சியென்றால் மொத்தமாக சிறைதான்.

ஒரு தமிழரை வெளியுறவுத்துறை அமைச்சராக்கிருக்கலாம், தமிழரை வெளியுறவுத் துறை பாதுகாப்புச் செயலராக்கியிருக்கலாம், இலங்கைக்கு ஒரு தமிழரை தூதுவராகியிருக்கலாம், உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஒருங்கினைத்து உலகத்தின் கவனத்தை ஈழ்த்துக்கு ஆதரவாக மாற்ற முயற்ச்சி செய்திருக்கலாம். இவர் செய்தது எல்லாம், பணம் கொழிக்கும் துறைகளாகப் பெற்றுக்கொன்டார், தனது பேரன் முதல் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பதவிப் பெற்றுக் கொண்டார். இப்போது தமிழன் செத்துக் கொண்டிருக்கும் போது இன்னும் சில நாள் பொறுத்திறுப்போம் என்கிறார்.

உடனே விஜய காந்த் உங்கள் நினைவுகு வந்தால், அவர் இவர்களையெல்லாம் மிஞ்சும்படி இருக்கிறார்.  அவரை எப்படியாவது முதலமைச்சராக்கி தனது சொல் படி ஆடும் பொம்மை முதல்வராக வைத்துக் கொள்ள ஆசைப்படும் மேல் சாதி தமிழக ஊடகங்களின், கை விரல் அசைவுக்கு கட்டுப் படும் பொம்மையாக இருக்கிறார். தனது 100வது படத்திற்கு பிரபாகரன் என் பெயர் வைத்தவர், இன்று ஒரு அறிக்கை கூட விட மாட்டேன் என்கிறார். ஒருவேளை உண்ணாவிரதம் இருந்தால் எடை குறைந்து விடும் என்று பயப் படுகிறாரோ?

மருத்தவர் அய்யாவைப் பற்றி நீங்களே இங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள், மருத்துவர் ஐயாவின் கண்துடைப்பு காமடி!

சொல்வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது, நாம் ஈழத்தமிழர்களுக்காக கவலைப் பட்டால், இவர்கள் வாக்கிற்காக கவலைப் படுபவர்களாக இருக்கிறார்கள்.Thursday, January 15, 2009

தமிழர்களே வாக்களியுங்கள்

0 Comments

எத்தனையோ முறை தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து கையை கறையாக்கிக்கொன்டிருக்கிறோம், ஒரு முறை நம் கையை கறையாக்கமல் ஈழத்து சொந்தங்களுக்காக வாக்களியுங்கள். நம்பிக்கையுடன் வாக்களிப்போம், உதவினால் பெரும் நன்றியுடன் வாழ்த்துவோம், இல்லையென்றால் எப்போதும் போல் தமிழனுக்கு துணை தமிழனே என்று போராட்டத்தை தொடர்வோம். ஒரு நாள் விடிந்தே தீரும்.

நீங்கள் களம் சென்று உயிர் துறக்க வேண்டாம், குண்டு சத்தங்களுக்கிடையே வாடும் சொந்தங்களுக்கு சிறு நம்பிக்கயை கொடுங்கள். தற்போது தேவை நம்பிக்கை மட்டுமே. வாக்களியுங்கள் உங்களால் ஆன சிறு ஆதரவை[வெறும் கருத்து ஆதரவு]உங்களது உறவுகளுக்கு காட்டுங்கள்.

நீங்கள் வாக்களித்தால் சிறைப் பிடிக்கப் படுவீர்கள் என்று பயந்தீர்கள் எனில் எவ்வளவு கருத்து சுதந்திரம்(?) மிக்க நாட்டில் வாழ்கிறோம் என்று வெட்கப் படுங்கள். உண்மையை உரக்கச் சொல்லுங்கள், எட்டு கோடி தமிழர்களை அடைக்க உலகில் எங்குமே சிறை இல்லை[மற்ற இந்தியர்களா(??) அவர்களுக்கு தமிழர்களை, மனிதர்களை விட சாருக் கான்,
சில்பா செட்டி, க்ரிக்கெட் என ஏராளமான முக்கிய விசயங்கள் இருக்கின்றன]. நீங்கள் எந்த விடுதலை இயக்கத்தையும் ஆதரிக்க வேண்டாம், வீடிழந்து, பெற்ற பிள்ளையிழந்து, கட்டிய கணவனை இழந்து கதறி அழும் நம் சகோதரிக்கு,அமைதியாய் வாழ உரிமக்கான சிறு குரலை மட்டும் கொடுங்கள்.

I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.
Voltaire
 

Tuesday, January 13, 2009

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்

4 Comments

சிங்கள இராணுவத்தின் அரக்கத்தனம்

0 Comments
இளகிய மனம் உடையவர்கள் இந்த வலைப்பதிவை பார்க்காதிர்கள். மனிதம், பெண்ணியம், போன்ற சொற்களுக்கு பொருள் தெரியாத காட்டுமிராண்டிகள்.

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்

1 Comments
தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
   பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
   புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா.
   சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
  அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
  தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு. -பாவேந்தர்

உலகமெங்கும் தை மகள் அமைதியையும், மகிழ்வையும் பொங்கச் செய்யட்டும். தை மகள் இந்த வருடமாவது ஈழத்தில் அமைதி மலரச் செய்யட்டும்

Monday, January 12, 2009

பண்படாத மண்

0 Comments
Unaccustomed Earth
ஜும்பா லஹரி, மேற்கு வங்காளத்தை சார்ந்த பெற்றோருக்கு பிறந்த அமெரிக்க இந்தியர். Interpreter of Maladies என்ற தன்னுடைய முதல் சிறுகதை தொகுப்பிற்காக புகழ் பெற்ற பூலிட்சர் பரிசைப் பெற்றவர். கட்டுபொட்டியான இந்திய கலாச்சாரதை பின்பற்றும் பெற்றோருக்கும் பிள்ளை, சுதந்திரமான அமெரிக்க காலாச்சாரத்திற்கும், தான் பிள்ளை என்று தன்னை அடையளப்படுத்திக் கொள்கிறார்..

நான் இந்தியாவிலுருந்து அமெரிக்கா கிளம்பிய போது, போய் தொலை சனியனே என்று மகிழ்ச்சியாக என்னுடன் வேலைப் பார்த்த நண்பர்கள், இந்த புத்தகம் மற்றும் சில புத்தகங்களை பரிசளித்தார்கள். அருந்ததி ராய் போல் பெரிய எழுத்தாளர் என்பது படிக்கத் தூண்டியது ஆனால் அட்டைபடம் ஏனோ ஆர்வத்தை மந்தமாக்கியது. கவர்ச்சிக் கன்னி சிம்ரன் படம் போட்டிருந்தால் உடனடியாக படிக்க ஆரம்பித்திருப்பேனோ :)

To Sir With Love[மற்றோரு பரிசுப் புத்தகம், எவ்வளவு நலல்வங்களா இருக்காங்க, என்னோட மேலாலர் வேலைய விட்டு போனா, நான் கூட இப்படித்தான் இருப்பேனோ], படித்துவிட்டு மிகவும் மகிவாய், எழுச்சியாய், இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். முதல் பத்து பக்கங்களுக்குள் மனதில் இனம் புரியாத பாரம் கூடி விட்டது. ஜும்பா, தன் புத்தகம் முழுக்க, உறவுகளுக்கிடையே நிகழும் ஏமாற்றங்களை, நிராகரிப்புகளை பதிவு செய்கிறார். ஒவ்வொரு கதை முடியும் போதும், அடுத்த கதையைத் தொடங்க சில மணி நேரங்களாவது எனக்கு தேவைப் பட்டது.

இந்தப் புத்தகத்தில் உள்ள எட்டு நெடிய சிறுகதைகளும்(!?), அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கிடையே நிகழும் கதை. எப்படி குடியேரிகள் இரண்டு உலகங்களுக்கு இடையில் திரி சங்கப் போல் வாழ்கிறார்கள் என்பதை தன் அனுபத்தை கதையின் ஊடே எந்த ஒரு மிகை உணர்வும் இல்லமல் சொல்லியிருக்கிறார்.

என்னை மிகவும் பாதித்தவை, கடைசி இரு கதைகள், Nobody's Business, ஒரு அமெரிக்க இந்திய பெண்ணிற்கும், அவளுடைய எகிப்திய காதலனுக்கும் மற்றும் அவளுடைய அறை நண்பணுக்கும் இடையே நிகழும் மன்ப் போராட்டத்தை மிக நுணுக்கமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் எழுதியிருப்பார். கதையைப் படித்து முடித்தவுடன், இப்படியெல்லாமா மனிதர்கள் என்று எண்ண வைத்தது.

அடுத்த கதை ஹேமா மற்றும் கௌசிக் என்ற இரண்டு அமெரிக்க இளைஞர்களின், சிறுவயதிலிருந்து தொடங்குகிறது. முதல் பகுதியை ஹேமாவின் சொற்களிலும், இரண்டாம் பகுதியை கௌசிக் பார்வையிலும் சொல்லியிருப்பார். புற்று நோயிற்கு தாயை பறி கொடுப்பதும், தந்தை மறு மணம் செய்து கொள்வதும், கௌசிக்கின் வாழ்வில் எத்தகைய பிடிபின்மையை  ஏற்படுத்துகிறது, அவன் எப்படி தன்னை கடந்த காலங்களில் இருந்து துண்டித்துகொள்ள முயற்சிக்கிறான் என்பதை கனமாக பதிவு செய்திருப்பார்.

இந்தப் புத்தகத்தை முடித்தவுடன், இவருடைய மற்ற புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற தீவிரமான எண்ணத்தை விதைத்து விடுகிறார். புத்தகம் முடிவில் எனக்கு அக்னிச் சிறகுகளில் இருந்து கலாம் சொல்லியிருக்கும் ஒரு வர் நினைவிற்கு வந்த்தது,

அன்பு தரும் அரவணைப்பை விட, அது தரும் வலி அதிகமானது.

[குறிப்பு: Unaccustomed Earth என்ற தலைப்பு Nathaniel Hawthorne-ன் ஒரு வாக்கியத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
"Human nature will not flourish, any more than a potato, if it be planted and replanted, for too long a series of generations, in the same worn out soil. My children ... shall strike their roots into unaccustomed earth"
]

Sunday, January 11, 2009

வெறுப்பின் விளைவு

0 Comments
தமிழ் நாள்காட்டி ஒன்றிற்காக கூகிளிய போது, இந்த வலைப் பதிவை படிக்க நேர்ந்தது. இந்த மொத்தப் பதிவுமே, தமிழ்ப் புத்தாண்டு தை என்பதை மீண்டும் நடைமுறைப் படுத்தியதை எதிர்ப்பதை விட, கருணாநிதியை அதிகமாக எதிர்க்கிறது[வெறுக்கிறது].

ஒரு விசயத்தை முன் முடிவுடன் அனுகும் போது வரும் குறிகிய பார்வைதான் இவை,

//
The traditional Hindu calendar used till date in Maharashtra, Karnataka and Andhra is among others (and not many remember or know its historical significance) to mark his victory over Vikramaditya. In a way, the current use of this calendar immortalizes Shalivahana.

With this Act, Karunanidhi perhaps aspires to something similar.
//

இந்த புத்தாண்டு மாற்றம் மொத்தமுமே, கருணாநிதியின் விருப்பம், வரலாற்றில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக், கருணாநிதி செய்த அரசியல் விளையாட்டு.

மக்கள் விரும்பாமல் இருந்திருந்தால், இரண்டாவது நாளே, இந்த சட்டத்தை வாக்குகளுக்கு பயந்து வாழும், கருணாநிதி திரும்பப் பெற்றிருப்பார்.[கட்டாய தலைக் கவச சட்டத்தைத் திரும்பப் பெற்றது போல்]

//
In a sentence: no more Holiday for Vishu/Ugadi because Karunanidhi has
shifted the new year to January 14th by the force of a legislation.
//

//As far as the office-goer is concerned, he has one holiday less.

இவருக்கு, ஒரு இந்து விடுமுறைக் குறைந்து விட்டது என்ற கவலை, கருணாநிதி ”ஒரு சும்மா இந்து விடுமுறை” அறிவித்தால், இவர் அமைதி ஆகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

//
It is pretty miraculous that not a single debate was held, and no expression except that of consensus!
//
இதிலிருந்தே இவருக்கு, உண்மை புரிந்திருக்க வேண்டும், தமிழ் மக்கள் இதை ஏன் எதிர்க்கவில்லை என்று. தமிழ் புத்தாண்டுதான் பிழை திருத்தப் பட்டதே தவிர, இந்து நாட்காட்டி(?) திருத்தப் படவில்லை.

//
//Shouting anti-upper caste slogans is understandable at one level–plus, it is open.
//
//
//In reality, the definition of “Dravidian” is itself a vessel without a bottom.
//

இந்தியாவில் திராவிடர்கள், ஆரியர்கள், என்று இனங்களே கிடையாது, ஒரே இனம் இந்திய தேசிய இனம்(?). யாரும் தென் இந்தியா, வட இந்தியா, கிழக்கிந்தியா என்று பேசிவிடாதிர்கள், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இருப்பது ஒரே இந்தியாதான். என்ன ஒரு ஒற்றுமை எண்ணம்? இதே ஒற்றுமையை, 2000 வருடங்களாக, ஒடுக்கப் பட்ட மக்களின் பால் காட்டியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

//
//Another fraud this “Dravidian” zealot has perpetuated is the “Tiruvalluvar year.” According to Vaiyapuri Pillai in History of Tamil Language and Literature, there’s no evidence to peg Tiruvalluvar’s time at 31 BC.
//
சரி, இதை உண்மை என்று கொண்டாளுமே, கீழே அவர் எழுதியிருக்கும் வர்களுக்கு, ஆதாரங்கள் எங்கே?

//
//The traditional Hindu calendar used till date in Maharashtra, Karnataka
and Andhra is among others (and not many remember or know its
historical significance) to mark his victory over Vikramaditya.
//
இதற்கு இவரிடம் ஏதோ கண்ணொளி[video] ஆதாரம் இருப்பதைப் போல பேசுகிறார்.

திருவள்ளுவர் பிறந்த திணம், திருவள்ளுவர் ஆண்டு என்பது எல்லாம், உலகிற்கு தமிழின் பெருமையை, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் எப்படி உயர்வாய் சிந்தித்திருக்கிறான் என்பதற்கான ஒரு அடையாளம். திருவள்ளுவர் பிறந்த தினம் எது என்பது வேண்டுமானால், தெளிவில்லாமல் இருக்கலாம், ஆனால் திரு குறள் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை யாரும் மறுக்க முடியாது.

//
//If Karunanidhi’s intent was to further weaken whatever is left of Hinduism in Tamil Nadu, he has picked the wrong target
//
கருணாநிதி தை 1 தழிழ் புத்தாண்டாக்கி சட்டம் கொண்டு வந்தாரே ஒழிய, தமிழர்கள் யுகாதியை கொண்டாட கூடாது என்று சட்டம் கொண்டுவர வில்லை.

//
//What amazes me the most is that nobody in Tamil Nadu has raised as much as a whimper against this cultural atrocity.
//
கொஞ்ச நேரத்திற்கு முன்பாக இந்து மதம் என்று பேசியவர் இப்போது காலச்சாரம் என்று பேசுகிறார், இவருக்கு தமிழ் கலாச்சாரத்தில் மிக அக்கறை(?),

மற்றவர்களை வெறுப்பதற்கு காட்டுகிற அக்கறையில் பாதியை அவர்களை நேசிப்பதற்கு காட்டினால் உலகம் மிகவும் அழகாக மாறிவிடும். வெறுப்பு நம் கண்களுக்கு நாமாகவே அணிந்து கொள்கிற கறுப்புக் கண்ணாடி. உலகமே கறுப்பாய்த்தான் தோன்றும். கறுப்பான் உலகம்தான் வேண்டும் என்பவர்களிடம் நாம் என்ன சொல்ல ? நம் சங்கை நாம் ஊதிவிட்டு கிளம்ப வேண்டியதுதான்

Saturday, January 10, 2009

ஓநாயிடம் ஆடு

0 Comments
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே நடந்து வரும் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பலியாகி விடாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.
ஓநாயிடம் ஆட்டை பத்திரமாக பார்த்து கொள்ள சொல்கிறது ஐநா சபை. எங்க போய் முட்டிகிறதுன்னு தெரியலை.

மேலும் செய்திகளுக்கு

Friday, January 9, 2009

காங்கிரசு கட்சி

0 Comments
விசு படங்களில்[?] வருவது மாதிரி, கணவன் குடிகாரன், மகன் ஊதாரி, மகளுக்கு விடலைப் பருவக் காதல், இளையவன் மக்கு, என் குடும்பமே தரங்கெட்டு இருப்பது போல, காங்கிரசு கட்சிக்கு பெருமை சேர்க்கும் தமிழ் இன பற்றாளர்கள்(????), தங்கபாலு, வாசன், கிருஷ்ணசாமி வாண்டையார், சிதம்பரம், செல்லகுமார், வசந்தக்குமார், ஜெயந்தி நடராஜன், EVKS.இளங்கோவன், பட்டியல் வெகு நீளம்.

இவர்களின் குழுக்களைப் பற்றி மேலும் படிக்க,

முன்பு ஒருமுறை, தி.க. தலைவர் வீரமணி, காங்கிரசு பற்றிய உண்மையை சொன்னதற்காக, S.R. பால சுப்பிரமணியன்[பெயரை கூட தமிழில் எழுதாத தமிழர்] என்று நினைக்கிறேன், வீரமணிக்கு எந்த தகுதியும் இல்லை என்று[ஏதோ இவர்களுக்கு தகுதி இருப்பது போல்] குதித்தார்.

காங்கிரசு கட்சியில், வலைப் பதிவு படிக்கும் அளவுக்கு யாராவது அறிவாளி இருந்ந்தால், வலைப் பதிவில் காங்கிரசு கட்சியின் புகழ் மணப்பதை படிக்க வேண்டும். எப்படி இவர்களால், தன் இனம் அழிக்கப் படுகிறது என்பதை கூட உணராமல் குழு சண்டையிலும், சுய நலக் குட்டைகளிலும் ஊறித் திளைக்க முடிகிறதோ.

ராசிவ் காந்தி குண்டு வெடிப்பைப் பற்றி மட்டுமே, தினந்தோரும், சலிக்காமல் பேசும், இவர்களுக்கு, அந்த குண்டு வெடிப்பில், ஏன் காங்கிரசு கட்சியின் ஒரு தலைவர் கூட சாகவில்லை, என்ற கேள்விக்கு மட்டும் பதிலே தெரியாது.

இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றார் என்பதற்காக, சிறியவர் முதல் முதியவர் வரை கொன்று குவித்துவிட்டு, காந்தியின் வழியில் நடப்பதாய் கூறிக் கொள்ளும் இவர்களுக்கும், குசராத்தில், கொலை வெறியாட்டம் செய்யும் காட்டு மிராண்டிகளுக்கு துணை போகும் பாரதி சனதா கட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் பெரிதாக கண்டு பிடித்து விட முடியாது.

எங்க தாத்தன் பாட்டனெல்லாம் காங்கிரசு கட்சிக் காரர்கள், அதனால நானும் காங்கிரசு கட்சி என்று கூறும் மக்கள் இருக்கும வரை, காங்கிரசோ மற்ற திமுக, அதிமுக உட் பட பாடம் கற்க பொவதில்லை.

தமிழா உனக்கு நீயே துனை.

இவையெல்லாம் கீழே உள்ள செய்திகளை படித்த பின் எழுந்த கோபத்தினால் எழுதியவை.
உளவு விமானம் மூலம் பிரபாகரனை கண்காணிக்கும் 'ரா': திருமா.
சோனியாகாந்திக்கு ராமதாஸ் கடிதம்
நெடுமாறன் உள்பட 500 பேர் கைது
'கடைசி புகலிடம்'-சோனியாவுக்கு ராமதாஸ் கடிதம்
இலங்கைப் பிரச்சினையில் மத்திய, தமிழக அரசுகள் இரட்டை வேடம்: இல.கணேசன்

Thursday, January 8, 2009

புதிய முகம்

0 Comments
நீன்ட நாட்களாக எஞ்சியிருந்த வேலை, புதிய வலைத்தளம், மற்றும் புதிய வடிவமைப்பு. இரண்டும் இன்று நிறைவேறியது. இன்னும் வடிவமைப்பில் கொஞசம் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது.
மிகவும் கடுப்பேற்றிய விசயம், தேதி "undefined" என்று Blogger காட்டியது, ஆனால் HTMLல் எல்லாம் சரியாக இருந்தது. கழுதை கெட்டால் குட்டி சுவரு, நான் திக்கு தெரியாமல் முழித்தால் வழக்கம்போல் கூகுள் ஆண்டவரிடம்[நான் பார்த்தவரை, வேண்டுவன கொடுக்கும் ஒரே ஆண்டவர்] கேட்ட போது, Blogger Setting ஐ கை காட்டியது. 20 நிமிட போராட்டத்திற்கு பின் வெற்றி :)

நிறைய எழுத நினைத்தவைகள் எழுதாமல் தேங்கி கிடக்கின்றன, கடந்த 2 மாதங்களில், அமெரிக்க வாழ்க்கை, மனதை தொட்ட திரைப் படங்கள், 2 நாள் தூங்க விடாமல் செய்த சில புத்தகங்கள் என நிறைய தேங்கி கிடக்கின்றன. இந்த வாரம் முடிந்த வரை சிலவற்றையாவது முடித்து விட வேண்டும்.

Power of Less, The: The Fine Art of Limiting Yourself to the Essential...in Business and in Life

0 Comments
Power of Less, The: The Fine Art of Limiting Yourself to the Essential...in Business and in Life