Wednesday, August 20, 2008

இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?

சில கேள்விகளைப் பார்க்கும் போது, அதற்கான விடை உரியவர்களிடமிருந்து கிடைத்தால் நான்றாகத்தான் இருக்கும், ஆனால் விடைதான் தமிழருக்கு எட்டாக் கனியாயிற்றே[முருகன் காலத்தில் இருந்து திலீபன் காலம் வரை]

தமிழ் சசியின் அப்படியொரு கேள்வி இங்கே,



clipped from
blog.tamilsasi.com


இந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத்
தமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக
மோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை
விட மோசமான குற்றங்கள். இந்திய இராணுவம் தமிழர்களை கொன்றதால் தான் அப்போதைய தமிழக
முதல்வர் கலைஞர் இந்திய இராணுவம் சென்னை திரும்பி வந்த பொழுது, அந்த வரவேற்பை
புறக்கணித்தார். என் இனத்தை கொன்று விட்டு வரும் ஒரு இராணுவத்தை தன்னால் வரவேற்க
முடியாது என கலைஞர் கூறினார்.


இந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக
முக்கியமான ஒன்று. அது குறித்த மிக விரிவான செய்தி ஒன்றினை அப்பொழுது இந்தியன்
எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க
வைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை
சம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள்
இந்திய இராணுவத்தினர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை இந்தச் சுட்டியில்
படிக்கலாம்.


இந்தியாவின்
பாரளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அப்போதைய
எதிர்க்கட்சி உறுப்பினருமான ஜார்ஜ் பிரணாண்டஸ் பின்வருமாறு
கூறுகிறார்.


"When in early August, 1987, I had said that Mr. Rajiv Gandhi's
military adventure in Sri Lanka would be India's Viet Nam, I had not anticipated
that India's Viet Nam would also have its own My Lai. Of course, I was aware and
I had also said repeatedly that soldiers everywhere alike, their training and
the rigours of their life, not to speak of the brutalisation caused by war,
making them behave in the most inhuman ways when under
pressure.


That is why when in the early days of India's military action in Sri
Lanka, stories of rape and senseless killings by Indian soldiers came to be
contradicted by the India government publicists I joined issue with everyone who
came to accept that our soldiers were cast in the mould of boy scouts who went
around the fighting fields of Sri Lanka looking out for opportunities to do
their day's good deeds, particularly for damsels in distress.


Now, in Velvlettiturai, the Indian army has enacted its My Lai.
London's Daily Telegraph commenting editorially on the barbarism exhibited by
the Indian army in Velvettiturai says that, if anything "this massacre is worse
than My Lai. Then American troops simply ran amok. In the Sri Lankan village,
the Indians seem to have been more systematic; the victims being forced to lie
down, and then shot in the back".


இவ்வாறு இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி,
லண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன.


ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின்
அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம்
கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு
இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா
?

0 Comments :