Saturday, May 17, 2008
Amelie
Amélie
Fabuleux destin d'Amélie Poulain, Le
சிரிக்கவும், அணைக்கவும் மறுக்கவும், பெற்றோர்களுக்கு மகளாக பிறக்கின்ற குழந்தைதான் அமீலியா. அவளுடைய தந்தை அவளைத் தொடுவதே மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வதர்குதான். அவளுடைய தாய் வழக்கமான் சிடு மூஞ்சி தலமை ஆசிரியை. சிறு வயதில் தாயை இழக்கும் அமீலிய, அவளுடைய தந்தையுடன் குழந்தைப் பருவத்தை கழிக்கிறாள். பின்பு Two windmills[வித்தியாசமான பெயர்] என்ற உணவகத்தில்[Cafe ??] பணிபுரிகிறாள்.
நீருக்குள் கல் எறிவது, தானிய மூட்டைக்குள் விரல்களை விட்டு விளையாடுவது போன்ற சிறு மகிழ்வுகளுடன் வாழும் இளம் பெண் அமீலியா, தான் குடியிருக்கும் வீட்டில், விளையாட்டு பொம்மைகள் நிறம்பிய, மறைத்து வைக்கப் பட்ட பெட்டியை கண்டு பிடிக்கிறாள். அவளுக்கு அதை மறைத்து வைத்த மனிதரை கண்டு, அவருடையா சிறுவயது பொம்மைகளை கொடுத்து, அவரை இன்ப அதிர்சிக்குள்ளாக்குகிறாள்.
இந்த சிறு நிகழ்வு,அவளுடைய வாழ்விழ் பெறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அன்றிலிருந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதை மகிழ்வாக கொள்கிறாள். அவளைச் சுற்றி, இறந்த கணவனை முற்றிலும் நேசிக்கவும் முடியாமல், வெறுக்கவும் முடியாமல் வாழும் விதவை, தன் வாழ்வை படம் மட்டுமே வரைந்து கழிக்கும் ஓவியர்[இவர் அமீலியாவின் வாழ்வை மாற்றும் ஒரு மிக்கியமான் பாத்திரம்], தோல்வியடைந்த எழுத்தாளர், வெகுளியான மளிகை கடைச் சிறுவன், கிழித்து போடப் பட்ட படங்களை ஒட்டி சேகரித்துஇ வைக்கும் ஒரு இளைஞன் போன்ற சுவை கூட்டும் மனிதர்கள்.
அமீலியா மற்றும் அவளைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்வின் சிறு பகுதியே படம். குறும்பான படம்
1 Comments :
I have tagged you...
Post a Comment