Friday, May 25, 2007

பேராசிரியர். இரா.மதிவாணன்

0 Comments
ஆரிய - திராவிடப் போராட்டம் என்று சொல்லப்பட்டதெல்லாம் யாகம் செய்வோர்க்கும் - யோகம் செய்வோர்க்கும் இடையிலான கருத்து வேற்றுமைகளே ஆகும். திராவிடர் தவம் (யோகம்) செய்வதை ஆரியர் தடுத்தனர். ஆரியரின் யாகங்களை அரக்கர் சிதைத்தனர் என்னும் வரலாற்று முரண்பாடுகள் அறிவியல் வளர்ந்த இந் நூற்றாண்டில் களையப்பட வேண்டும். அமைதியும் நல்லுறவும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையாகச் சொற்களை வரம்போடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அதுவே நல்லது.பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?பேராசிரியர். இரா.மதிவாணன்Powered by ScribeFire.

தொலைந்த அடையாளம்

0 Comments
வெகு நாட்களுக்குப்பின்

நாம் வாழ்ந்திருந்த

அக்கடற்கரை நகரத்திற்க்கு

சென்றிருந்தேன்இந்த நண்பகல் வெயிலில்

கடற்கரை மணற்திட்டில்

பாதச்சுவட்டில் பாதம் வைத்து

நடந்து கொண்டிருந்தது

ஒரு ஜோடிநாம் வழக்கமாய் அமரும்

புங்கை மரத்தடி

மர பெஞ்சில்

நம் சாயல்களில் யாரோ

உள்ளங்கை பற்றியபடி

பேசிக்கொண்டிருந்தனர்மேலும்

சருகுகள் கூட்டி வாரப்படாத

நூலக கட்டிடப் பின்புறம்

நன்றாய் புற்கள் வளர்ந்திருக்கும்

அசோக மரத்தடி

செயற்கை நீரூற்றை ஒட்டிய

சிமெண்ட் திட்டு

ராமன் தியேட்டர்

அ வரிசை கடைசி இருக்கையென

நாம் வாழ்ந்திருந்த

இடங்களின் புனிதம் கெடாது

இளம் காதலர்களே

நிரம்பியிருந்தனர்ஒருவேளை நமக்கு முன்னர்

இவ்விடங்களை நிரப்பியவர்கள்

நம்மை போன்றவர்களாய்

இருந்திருக்கக் கூடும்நாளை இவ்விடங்களை

நிரப்பும் இளம் காதலர்களின்

ரகசிய குறுகுறுப்புகளில்

துளிர்க்கலாம்

இழந்ததை தேடியலையும்

என்போன்றவனின்

வறண்ட இதழிலிருந்து

புன்முறுவல்கள்நன்றி அய்யனார்

Powered by ScribeFire.

Tuesday, May 22, 2007

சிற்றின்பம்

0 Comments
சிறிது காலமே நீடிக்கும் இன்பம்

என்பதால் அல்ல

சிறியவர்கள் அடையும் இன்பம்

என்பதால் அல்ல

அந்த இன்பத்தை அடைய

எந்தச் சிறுமையும் அடைவர் என்பதால்

அது சிற்றின்பம்கவிஞர் மகுடேசுவரனின் காமக்கடும்புனல் தொகுப்பில் இருந்துநன்றி புத்தகம்

Powered by ScribeFire.

Thursday, May 17, 2007

Tamil font problem in FireFox

1 Comments
தீநரியில்(Firefox) தமிழ் எழுத்துகள் தெளிவில்லாமல் தெரிந்தால், இந்த வழிமுறையை முயற்சி செய்து பாருங்கள்,If you have problem in viewing Tamil fonts in Fire Fox and Windows XP,உங்கள்,

இயங்கு தளம் Windows XP எனில்,Start >> Control Panel >> Regional and Language Options >> Languages(Tab) >> Check the Check box Install files for complex script and right to left languages(including Thai)இதற்கு Windows XP இயங்கு தள குறுந்தகடு தேவைதேடு வார்த்தைகள்

Tamil font problem in FireFox

Powered by ScribeFire.

Tuesday, May 8, 2007

ஒரு சராசரி தமிழக இளைஞனின் நிலை

0 Comments
இன்று கல்லூரிப் படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு சராசரி தமிழக இளைஞனின் தமிழ் சொற்தொகை (vocabulary) மிகக் குறைவானது. அந்த சொற்தொகையை வைத்து அவனால் எதைக் குறித்தும் - குறிப்பாக இலக்கியம், அறிவியல், சட்டம், தத்துவம் போன்றவற்றைக் குறித்து - ஆழமாக பேசவோ விவாதிக்கவோ முடியாது. ஐஸ்வர்யாவின் திருமணம், ஜூனியர் விகடன் கழுகாரின் செய்திகள், ரஜினிகாந்தின் 'ஒரு தடவை சொன்னா' தத்துவம், வடிவேலின் அவ்வ்வ் என்ற ஊளை போன்ற இலகுவான விஷயங்களை விவாதிக்க மட்டுமே அவனது தமிழ் போதுமானதாக இருக்கிறது. அதற்கு தன்னுடைய உழைப்பின்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள மறுக்கும் அவன் அதை தமிழ் மொழியின் குறைபாடாக நினைக்கிறான். ஆனால் அப்படி அல்ல, சிக்கலான சிந்தனைகளையும் தமிழில் வெளிப்படுத்தலாம் என்று யாராவது செய்துக் காட்டினால் எரிச்சல் அடைந்து நக்கல் நையாண்டி மூலம் அதை எதிர்கொள்கிறான். அல்லது நடையை எளிமைப்படுத்துமாறு கோரிக்கை வைக்கிறான். (இதே ஆட்கள் ஒரு ஆங்கிலக் கட்டுரை புரியவில்லை என்றால் அதன் ஆசிரியரிடம் எளிமையாக எழுதுங்கள் என்று கனவில் கூட கேட்கமாட்டார்கள். அகராதியின் துணையுடன் நேரம் செலவிட்டு உழைத்து புரிந்துக்கொள்வார்கள். எனக்கு எளிமையான ஆங்கிலம் மட்டும் தான் புரியும் என்று சொல்வதை விட நாற்சந்தியில் அம்மணமாக நிற்பார்கள். ஆனால் தமிழில் மட்டும் எளிமை வேண்டும்.)நன்றி செகத்Powered by ScribeFire.