Tuesday, April 3, 2007

இட ஒதுக்கீடு...

திரு ரவி அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னுட்டம்அன்பு ரவி, உங்களிடமிருந்து இதை எதிபார்க்கவில்லை,

1) சாதி வழி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு அல்ல, சாதியின் பெயரால்   இத்தனை ஆண்டுகள் கல்வி மறுக்கப் பட்டு வந்த குமுதாயத்திற்கு நாம் திருப்பி செய்ய வேண்டிய கடமை

2) >>ஏழை பார்பனர்களுக்கு கல்வி>> இன்று படித்துவிட்டு அமெரிக்கவில் உட்கார்ந்து கொன்டு வெட்டி நியாயம் பேசும் பார்பனர்கள் ஏழை பார்பனர்களுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்கட்டும், நானும் அதற்கு  அதற்கு ஆதரவு தருகிறேன்

3) >> பொருளாதாரத்தில் முன்னேறிய தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடா? >>

தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்றோ அல்லது அன்றோ பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி அவர்களுக்கு கிடைக்காது, பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை இன்றுஇன்று உயர்தட்டு பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற சில கல்விக்கூடங்கள் மற்ற தரப்பினருக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த இட ஒதுக்கீட்டின் நோக்கமேயன்றி வசதியானவர்களுக்கா ஏழைகளுக்கா என்பது அல்ல4) //

///இந்த இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் சாதிக்கூறுகள் இன்னும் வலிமை பெற்று விட்டன..////இது என்னவோ உண்மைதான் அனானியாரே...//சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்லநேற்று சாதியால் ஒடுக்கப் பட்ட மக்கள் நாளை வேற்று சாதியை ஒடுக்க நினைத்தால் அதைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமே ஒழிய அவர்களுடைய கேடையத்தை அல்லPowered by ScribeFire.

3 Comments :

Anonymous said...

என்னுடைய பதிலை அங்கே போட்டுள்ளேன்..இருந்தாலும் இங்கே பின்னூட்டமாகவும் கொடுக்கிறேன்..

Anonymous said...

அன்பு ரவி, உங்களிடமிருந்து இதை எதிபார்க்கவில்லை, (உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்த கருத்துக்களை கொண்டிராமைக்கு வருந்துகிறேன் செந்தில்....என்ன செய்ய நான் நினைத்ததை சொல்லிவிட்டேன்...)

///சாதி வழி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு அல்ல, சாதியின் பெயரால் இத்தனை ஆண்டுகள் கல்வி மறுக்கப் பட்டு வந்த குமுதாயத்திற்கு நாம் திருப்பி செய்ய வேண்டிய கடமை///

சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது செந்தில்....அமவுண்டு இருக்கிறவனை நீங்கள் எந்த சாதியை சொல்லியும் தடுக்க முடியாது...கவர்மண்ட் காலேஜில் சீட்டு கொடுக்கலன்னா வசதியாக தனியார் கல்லூரியில் சென்று சேருவான்...அதைத்தான் நான் சொல்கிறேன் Empower them by $$$$..கையில காசு இருந்தாக்கா எந்த கல்வியையும் விலைக்கு வாங்கலாம் தமிழ்நாட்டில்...உண்மை கசக்கும்தான்...But இதுதான் உண்மை...

2) >>ஏழை பார்பனர்களுக்கு கல்வி>> இன்று படித்துவிட்டு அமெரிக்கவில் உட்கார்ந்து கொன்டு வெட்டி நியாயம் பேசும் பார்பனர்கள் ஏழை பார்பனர்களுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்கட்டும், நானும் அதற்கு அதற்கு ஆதரவு தருகிறேன்

ஏழைக்கு அமெரிக்காவில் இருக்கும் பாப்ஸ் ஆதரவு தந்தால்தான் நீங்கள் தருவீர்களா செந்தில்...பசியோடு இருக்கும் ஏழை எந்த சாதியாக இருந்தாலும் ஏழைதானே ? ஒத்துக்கொள்கிறீர்களா ?

3) >> பொருளாதாரத்தில் முன்னேறிய தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடா? >>
தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்றோ அல்லது அன்றோ பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி அவர்களுக்கு கிடைக்காது,

// என்ன செந்தில் சொல்றீங்க...இருபது லட்சத்தில் பெங்களூர் மெடிக்கல் காலேஜில் படிக்கும் எங்கள் ஊர் தலித் இனத்தை சேர்ந்தவரின் மகனுக்கு கல்வி கிடைக்கவில்லையா என்ன ? கிடைத்திருக்கிறதே...தொலைபேசி எண் தரட்டுமா ? //.

// பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை ///

முந்தைய பதில்தான் இதுக்கும்...
//////
சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்ல

நேற்று சாதியால் ஒடுக்கப் பட்ட மக்கள் நாளை வேற்று சாதியை ஒடுக்க நினைத்தால் அதைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமே ஒழிய அவர்களுடைய கேடையத்தை அல்ல //////

அருமையானதொரு பாயிண்ட்...ஆனால் இந்த பதிவு கிருமிகளை பற்றியது...ஒடுக்கப்பட்ட கீரிப்பட்டியான்களை பற்றியதல்ல...

uma said...

//சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்ல//

super... super...