Thursday, April 19, 2007

நம் உறவு

1 Comments
உன்னை

சந்திக்க வரும்

ஒவ்வொரு முறையும்

எனக்கு குழப்பமே.

நம்

உறவுக்குப் பெயர்

நட்பா? காதலா? என்று...

நீ

இல்லாத தருணத்தில்

உன் பெற்றோரின்

விசாரிப்புகளும்

தங்கையின்

புன் சிரிப்பும்

தம்பியின்

உரையாடலும்

உறுதிப்படுத்துகின்றனநன்றி JK

Powered by ScribeFire.

Monday, April 16, 2007

இட ஒதுக்கீடூம் பூச்சாண்டிகளும்

0 Comments
"The statute in question, it is contended, has lost sight of the social catastrophe it is likely to unleash. Not only would the products be intellectual pygmies as compared to normal intellectually sound students passing out, it has been highlighted that on the basis of unfounded and unsupportable data about the number of OBCs in the country the Act has been enacted."ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கினால் சமூகப் பேரழிவு ஏற்படும் என்ற பூச்சாண்டியை விட்டுவிடுவோம். ஏனென்றால் அதற்கு அடுத்த வரியில் அதைவிடப் பெரிய பூச்சாண்டி இருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் இயல்பான அறிவார்ந்த மாணவர்கள் வெளிவருவதற்குப் பதிலாக அறிவு வளர்ச்சிக் குன்றியவர்கள் (intellectual pygmies) வெளிவருவார்களாம்.இங்கே ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஐஐடி-களில் 27% இடங்களை ஒதுக்குவது என்பது ஒவ்வொரு வருடமும் சுமார் 1000 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பது தான். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களில் கடுமையான நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு படிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆக, 50 கோடிக்கு மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களில் அறிவு வளர்ச்சி குன்றாத - intellectual pygmies அல்லாத - ஆயிரம் மாணவர்கள் கூட தேறமாட்டார்கள் என்ற வாதத்தின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதித்திருக்கிறது. இனவெறிக்கு எதிரான கடுமையான சட்டங்கள் உள்ள ஒரு நாட்டில் இப்படி ஒரு பிரிவினரின் அறிவுத்திறனை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்துவது களி தின்ன வைக்கக்கூடும். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பைக் கேள்வி கேட்பது தேசத்துரோகச் செயல்.நன்றி திரு செகத்

Powered by ScribeFire.

Tuesday, April 3, 2007

இட ஒதுக்கீடு...

3 Comments
திரு ரவி அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னுட்டம்அன்பு ரவி, உங்களிடமிருந்து இதை எதிபார்க்கவில்லை,

1) சாதி வழி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு அல்ல, சாதியின் பெயரால்   இத்தனை ஆண்டுகள் கல்வி மறுக்கப் பட்டு வந்த குமுதாயத்திற்கு நாம் திருப்பி செய்ய வேண்டிய கடமை

2) >>ஏழை பார்பனர்களுக்கு கல்வி>> இன்று படித்துவிட்டு அமெரிக்கவில் உட்கார்ந்து கொன்டு வெட்டி நியாயம் பேசும் பார்பனர்கள் ஏழை பார்பனர்களுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்கட்டும், நானும் அதற்கு  அதற்கு ஆதரவு தருகிறேன்

3) >> பொருளாதாரத்தில் முன்னேறிய தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடா? >>

தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்றோ அல்லது அன்றோ பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி அவர்களுக்கு கிடைக்காது, பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை இன்றுஇன்று உயர்தட்டு பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற சில கல்விக்கூடங்கள் மற்ற தரப்பினருக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த இட ஒதுக்கீட்டின் நோக்கமேயன்றி வசதியானவர்களுக்கா ஏழைகளுக்கா என்பது அல்ல4) //

///இந்த இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் சாதிக்கூறுகள் இன்னும் வலிமை பெற்று விட்டன..////இது என்னவோ உண்மைதான் அனானியாரே...//சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்லநேற்று சாதியால் ஒடுக்கப் பட்ட மக்கள் நாளை வேற்று சாதியை ஒடுக்க நினைத்தால் அதைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமே ஒழிய அவர்களுடைய கேடையத்தை அல்லPowered by ScribeFire.

Monday, April 2, 2007

புனிதபிம்பத் தொழிற்சாலை அதிபர்களைப் பற்றி

0 Comments
ஒரு தலித்தின் வீட்டில் கல்யாணம் செய்வதற்கோ கறிச்சோறு உண்பதற்கோ தயாராக இல்லாத நிலையிலும் "நாம் அனைவரும் ஒன்று" என்ற பிரச்சாரம் மேற்கொள்வது இதன் ஒரு அங்கம்.திரு செகத் அவர்களின் ஆழமான ஒரு பதிவுPowered by ScribeFire.