Thursday, March 8, 2007

இலகுவாக கிடைத்தால் பினாயிலையும் குடிப்பாயா?

2 Comments
இப்பத்தான் தெருமுக்கிலெல்லாம் இளநீர் கிடைக்கிறதே, வாங்கிப்பருகினால் உடம்புக்கும் நல்லதுதானே என்றுகேட்டால், கோக்கும் பெப்சியும் ஈசியாக கிடைக்கிறது என்கிறான். ஈசியாகக் கிடைத்தால் பினாயிலையும் குடிப்பாயா? காமாலைக்கு கறும்புசாறையும் இளநீரையும் தனேய்யா குடிக்கச் சொல்கிறார்கள். 200 மி.லி. கொக்ககோலாவையா குடிக்கச் சொல்கிறார்கள். நாம் அனைவருமே இளநீர் சாப்பிட ஆரம்பித்தால் எத்தனை விவசாயிகள் பிழைத்துக்கொள்வர்கள் என்று யோசித்தீர்களா??

நன்றி பூங்கா

மகளிர் தின வாழ்த்துகள்...

0 Comments
" ‘கற்பு’ என்ற சொல்லை வைத்து, பெண்ணை இன்னமும் அடிமையாக்குகின்றது எமது இனம்.... ஆண்-பெண் இருபாலாரும் சரிசமமாக சுதந்திரத்துடன் வாழவேண்டும் என்ற நிலைமை ஏற்பட வேண்டும் என்றால், கற்பு என்பதன் அடிப்படை இலட்சியமும், கொள்கையும் மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் ஒருப்போன்ற நீதி ஏற்பட வேண்டும் என்ற பெரியாரின் கருத்து பெண்ணியத்திற்கு ஏற்றதொன்றாகவே காணப்படுகின்றது..."

என்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய எனது தாய்க்கும், என் மேல் பெரும் அன்பு கொண்ட எனது சகோதரிகளுக்கும்,உலகெங்கும் உள்ள சகோதரிகளுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள்...

சம உரிமை என்பது எமது உரிமை என்று முழங்குவோம்...



தாய் மனைவி மகள் என
என் மூன்று காலங்களிலும் நீயே
நீக்கமற நிறைந்திருக்கிறாய் !

உன் கருவரையில் தான்
எம் குலதெய்வங்கள்
உயிரும் உடலும் பெறுகிறது !

இருவருக்காக உண்ணும் ஒருவர்
என்ற சிறப்புத் திறனும்
உன்னிடம் மட்டுமே இருக்கிறது !

அமுத சுரபியும், அட்சய பாத்திரமும்
வைத்துக்கொண்டு அள்ளி அள்ளிக் கொடுத்து
பசி பினி நோய் தீர்ப்பவள் நீ !

பேற்றிற்காக தன்குறியை அறுத்தும்
வயிற்றைக் கிழித்தும் நீ செய்யும்
தியாகம் போற்றதக்கது !

தன்னை மறந்து வாழ்நாள்
முழுதும் குடும்ப நலனுக்காக வாழும் நீ
பிறக்கும் போதே பேறு அடைந்தவள் !

உன் அருமையும், பெருமையும் அறிந்தே
நதியாய், நிலமாய், நிலவாய்
உன்வடிவம் உருவகமாக போற்றப்படுகிறது !

இறையென்ற சக்திக்கு நீயே சக்தி !
கறையொன்றும் இல்லைப் பெண்ணே !
எல்லாவற்றிலும் நீயே நிறை !

நன்றி திரு கோவி.கண்ணன்