Wednesday, December 13, 2006
நீ வெங்காயம்...
ஒன்பது தசாப்தங்கள் -கடந்து..
செத்தொழிந்து...
மேலும் - மூன்று தசாப்தம் முடிந்தும்...
ஏன் அந்த - உற்சாக கிழவன்...
உன் மனசில் - துருத்திகொண்டே
கிடக்கிறான்??
வெளிப்படையாய் -பேசினாலென்ன...
அந்த வெள்ளி - தாடி ..
நாத்திகனுக்கு-.......
ஆத்திகனாய் - இருப்பவர் தரும்...
அதரவு - அதிகம் ..!!!
எல்லாம்.....
அவர் கருத்து......
அதிலொரு சிறு குழப்பம்...
பட்டு சேலையை சாமிக்கு
உடுத்தி.......
அழகு பார்த்து....
பக்கத்து உறவுகள் ...
ஊத்தை - துணியுடன்
கிடப்பதை ரசிப்பதில்
உனக்கென்ன பெருமை??
அவர் - வார்த்தையில்
சொல்லுறேன் -கேளேன்...
நீ வெங்காயம்!!
(நன்றி : ஈழத்துக் கவிஞர் வர்ணன்)
(நன்றி :luckylook)
0 Comments :
Post a Comment