Saturday, June 25, 2005

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்...

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்
பட்டதும் மகிழ்ந்தேன் நெஞ்சில் - உள்ளம்
விட்டதும் மகிழ்ந்தேன் நாணத்தில் - தனிமை
கெட்டதும் மகிழ்ந்தேன் பிணைப்பில் - அன்பில் (தொட்டதும்)

காதல் பொங்கிடும் ஆழியின் ஒரம் - அலை
மோதல் தந்திடும் நெஞ்சத்தின் சாரம்
வாதல் துவண்டிடும் நாமினைந்திடும் நேரம் - மனம்
நோதல் தீர்ந்திடும் அனைத்திடும் கரம் (தொட்டதும்)

பூங்கொடி அவளோ கைகளில் துவண்டாள் - பால்
சங்கான கழுத்திலே கரமாலை சுட்டினேன்
செங்கொடி முகத்திலே முத்தையும் சிந்திட்டாள் - அழகு
பாங்கான உடலிலே முத்தத்தையும் சூட்டினேன் (தொட்டதும்)

தென்றல் இளங் காற்றின் மயக்கத்திலே - இனிய
கன்னல் மொழிப் பேச்சின் போதையிலே
அன்புக் கடலில் மூழ்கி நீந்தினேன் - ஆடை
இன்பக் கூடலில் முத்தையும் எடுத்திட்டேன் (தொட்டதும்)

துன்பம் மறைந்தது துடியிடை கண்டவுடன் - நம்
எண்ணம் நிறைந்தது துயிலாடை கொண்டவுடன்
இன்பம் இன்பமே சிறந்து கொண்டாடினோம் - மெய்
வண்ணம் இணைந்தது களிப்பினில் மூழ்கிவிட்டோம் (தொட்டதும்)

திங்கள் தூதினிலே என்னுடன் வந்தவளே - செவ்வாயில்
அங்கம் முழுவதின் அழகை தந்தவளே
முழுமத் மைந்தன் நாளினதை நினைந்தேனே - எந்தன்
செழுமதி உந்தனை கவிதையில் வடித்தேனே

ஆக்கம்: மு.பசுபதி
நாள்: 01-10-1969

1 Comments :

Kangs(கங்கா) said...

சரவணன்,
என்னுடைய தந்தையின் கவிதையை உங்களுடைய வலைத் தளத்தில் தந்தமைக்கு மிகவும் நன்றி. அப்பாவுடன் பேசும் போது, இதைப் பற்றி சொல்ல வேண்டும்.

நன்றிகளுடன்
பசுபதி காங்கேயன்